Tamil News  /  Lifestyle  /  Home Remedy For Diabetes Increasing Diabetes Threatening Health Solve It At Home

Home Remedy for Diabetes : அதிகரித்துவரும் சர்க்கரை நோய்! அச்சுறுத்தலாகும் ஆரோக்கியம்! வீட்டிலேயே தீர்க்கலாம்!

Priyadarshini R HT Tamil
Jan 07, 2024 10:01 AM IST

Home Remedy for Diabetes : அதிகரித்துவரும் சர்க்கரை நோய்! அச்சுறுத்தலாகும் ஆரோக்கியம்! வீட்டிலேயே தீர்க்கலாம்!

Home Remedy for Diabetes : அதிகரித்துவரும் சர்க்கரை நோய்! அச்சுறுத்தலாகும் ஆரோக்கியம்! வீட்டிலேயே தீர்க்கலாம்!
Home Remedy for Diabetes : அதிகரித்துவரும் சர்க்கரை நோய்! அச்சுறுத்தலாகும் ஆரோக்கியம்! வீட்டிலேயே தீர்க்கலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

எனவே அதற்கு நீங்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை வரும். அதனுடன் சேர்த்து வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து சில பானங்களை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உடலுக்கு அது நன்மை அளிக்கிறது.

இந்தபானத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால், ரத்தித்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். சர்க்கரை நோய் இல்லாதவர்களும் இந்த பானத்தை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோய்க்கு இது ஒரு இயற்கை மருத்துவம். சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 1 டம்ளர்

வெந்தயம் – 1 ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு (துருவியது)

கறிவேப்பிலை – அரை கைப்பிடி

(ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது)

பட்டை – ஒரு துண்டு அல்லது பட்டைப்பொடி அரை ஸ்பூன்

(இன்சூலீன் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.

அதில் வெந்தயம், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, பட்டை என அனைத்தும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளராக சுண்ட வேண்டும். அதை வடிகட்டி அப்படியே பருகலாம். வெறும் வயிற்றில் பருகுவது மிகவும் நல்லது.

உடல் சோர்வை போக்கி, சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம். சர்க்கரை நோய் குறைக்கும் பல்வேறு வீட்டு முறை மருத்துவங்களுடன் இதையும் அவ்வப்போது எடுத்துக்கொள்வது நல்லது. இவற்றுடன் தினமும் ஒரு அரைமணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் மிகவும் நல்லது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்