தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Home Remedy For Belly Fat Melts The Belly Lose Weight Drink On An Empty Stomach

Lemon Peel and Ginger Water Benefits : தொப்பையை கரைக்கும்; உடல் எடையை குறைக்கும்; வெறும் வயிற்றில் பருகவேண்டும்!

Priyadarshini R HT Tamil
Mar 27, 2024 09:09 AM IST

Home Remedy for Belly Fat : அதில் ஒன்றுதான் இஞ்சி மற்றும் எலுமிச்சை தோலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பானம். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த காலை பானத்தில் உள்ள அறிவியல் உண்மைகளை தெரிந்துகொண்டு, உங்கள் தொப்பையை குறைக்கலாம்.

Home Remedy for Belly Fat : தொப்பையை கரைக்கும்; உடல் எடையை குறைக்கும்; வெறும் வயிற்றில் பருகவேண்டும்!
Home Remedy for Belly Fat : தொப்பையை கரைக்கும்; உடல் எடையை குறைக்கும்; வெறும் வயிற்றில் பருகவேண்டும்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆரோக்கியம் மற்றும் தொப்பையை குறைக்க பல முயற்சிகளை இயற்கையில் வழியில் எடுக்கிறார்கள். அதில் ஒன்றுதான் இஞ்சி மற்றும் எலுமிச்சை தோலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பானம். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த காலை பானத்தில் உள்ள அறிவியல் உண்மைகளை தெரிந்துகொண்டு, உங்கள் தொப்பையை குறைக்கலாம்.

எலுமிச்சை தோல் மற்றும் இஞ்சி பானத்தில் உள்ள நன்மைகள்

எலுமிச்சையின் தோலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக ஃப்ளேவனாய்ட்கள், அது உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கும். கொழுப்பை கரைக்கும். இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், இஞ்சியின் செரிமானத்துக்கு உதவக்கூடிய தன்மை, வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் கொடுத்து, உங்களை கலோரிகள் அதிகம் உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது.

இஞ்சி, உடலில் வளர்சிதை மாற்றத்தை தடுக்கிறது. இஞ்சியில் உள்ள உட்பொருட்கள், உடலின் வெப்ப அளவை அதிகரித்து, செரிமானத்தின்போது கலோரிகள் எரிக்கப்படுவதை உறுதிப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து, வளர்சிதை மாற்றத்தை வேகமாக்கும்.

எலுமிச்சை தோல், இஞ்சி தண்ணீரை தயாரிப்பது எப்படி?

இஞ்சி மற்றும் எலுமிச்சை தோல் இரண்டையும் நன்றாக அலசி விட்டு, இஞ்சியை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், நறுக்கிய இஞ்சி துண்டுகள் மற்றும் எலுமிச்சை தோலை தண்ணீரில் சேர்த்து ஊறவைக்க வேண்டும். இதை ஓரிரவு ஊறவைத்து, உங்களுக்கு பிடித்தால் ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

இல்லாவிட்டால் வெளியேயும் வைத்துக்கொள்ளலாம். ஓரிரவு ஊறினால், அவற்றின் சாறுகள் முழுவதும் தண்ணீரில் இறங்கியிருக்கும். இதை காலையில் பருக பலன் கொடுக்கும். மற்றொரு முறையில் இஞ்சி துண்டுகள் மற்றும் எலுமிச்சை தோலை காயவைத்து, பொடி செய்துகொள்ளலாம். அதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு, நீரில் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி பருகலாம். காலையில் வெதுவெதுபான இந்த நீரை முதலில் பருகவேண்டும். இது உங்கள் கொழுப்பை கரைத்து வெளியேற்றும் மாயம் செய்யும்.

இது எவ்வாறு செயல்படும்

இந்த பானம் உங்களின் செரிமானத்தை சீராக்கி, வளர்சிதையை ஊக்குவிக்கும். அது உங்கள் நாளை சிறப்பாக்கும். வயிறு நிறைந்த உணர்வைக்கொடுத்து, பசியை தடுக்கும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு எளிதாக கிடைத்துவிடும்.

உடல் எடை குறைப்பதை தவிர வேறு என்ன வேலைகள் செய்யும்?

இஞ்சியில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உங்கள் வயிற்றில் உள்ள அசவுகர்யங்களைத் குறைக்கும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். எலுமிச்சை தோலின் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக செயல்பட உதவும்.

தினமும் பருகவேண்டும்

எலுமிச்சை தோல் இஞ்சி கலந்த தண்ணீரை தினமும் காலை உணவு உட்கொள்வதற்கு முன் பருகினால் உங்கள் உடல் எளிதாக குறையும். இதனுடன், நீங்கள் ஆரோக்கிய உணவு உட்கொள்ள வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவையனைத்து உங்களை ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அழைத்துச்செல்லும்.

பின்குறிப்பு 

சிலருக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். அவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்