தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Skin Care Tips: இன்ஸ்டன்டாக முக பொலிவு, பிரகாசம் பெற இதை மட்டும் செய்யுங்க போதும்! உடனடி ரிசல்ட் தெரியும்

Skin Care Tips: இன்ஸ்டன்டாக முக பொலிவு, பிரகாசம் பெற இதை மட்டும் செய்யுங்க போதும்! உடனடி ரிசல்ட் தெரியும்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 23, 2024 04:59 PM IST

Skin Care Tips: இன்ஸ்டன்டாக முக பொலிவு, பிரகாசம் பெறுவதற்கு வீட்டில் இருக்கும் சில பொருள்களே போதுமானது. இதை செய்வதால் உடனடி ரிசல்ட் கிடைப்பதோடு இயற்கையான முறையில் சருமம் பாதுகாக்கப்படுகிறது.

இன்ஸ்டன்டாக முக பொலிவு, பிரகாசம் பெற இதை மட்டும் செய்யுங்க போதும்
இன்ஸ்டன்டாக முக பொலிவு, பிரகாசம் பெற இதை மட்டும் செய்யுங்க போதும்

ட்ரெண்டிங் செய்திகள்

இது இயற்கையானது மட்டுமல்லாமல், சருமத்துக்கும் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்ததாது. அத்துடன் இவை சருமத்துக்கு வேண்டிய சத்துக்களையும் அளித்து, அவற்றை பராமரிக்க உதவுகிறது. சரும பராமரிப்புக்கு உதவும் இயற்கை பொருள்கள் எவை என்பதை பார்க்கலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஒரு தோல் பராமரிப்பின் பவர்ஹவுஸாக உள்ளது. இது சருமத்தை மென்மையாக்குகிறது. வீக்கத்தை குறைத்து, குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை பிரித்தெடுத்து அதனை உங்கள் முகத்தில் தடவவும். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து அப்புறம் கழுவவும். இதன் வழக்கமான பயன்பாடு சருமத்தின் இயற்கையான மற்றும் நீடித்த பிரகாசத்துக்கு வழிவகுக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

ஒளிரும் சருமத்தை அடைவதில் இந்த கலவை முக்கியமானதாக உள்ளது. தேன் ஒரு இயற்கை ஈரப்பதமூட்டியாக உள்ளது. உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இது சருமத்தை பிரகாசமாக்குகிறது.

ஒரு டீஸ்பூன் தேனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து, அதை உங்கள் முகத்தில் தடவி, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முக பளபளப்பை பெறலாம்.

ஓட்மீல் ஸ்க்ரப்

ஓட்ஸ் ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராக ஓட்மீல் உள்ளது. இது இறந்த சரும செல்களை அகற்றி, பிரகாசமான நிறத்தை வெளிப்படுத்த உதவுகிறது. அரைத்த ஓட்மீலை தயிருடன் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும். பின்னர் அந்த கலவையை வட்ட இயக்கமாக உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் உங்கள் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்

மஞ்சள் மாஸ்க்

சரும பராமரிப்புக்கு நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் பொருளாக மஞ்சள் உள்ளது. அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தில் ஏற்படும் சிவப்பு தன்மையை குறைக்கவும், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

ஒரு டீஸ்பூன் மஞ்சளை, தயிருடன் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை உங்கள் முகத்தில் சமமாக தடவி 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முக பொலிவு பெறலாம்,

ரோஸ்வாட்டர் டோனர்

சருமத்தை புத்துணர்ச்சியடைய செய்வதற்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் பொருளாக ரோஸ் வாட்டர் உள்ளது. இது இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. சருமத்தின் துளைகளை இறுக்கவும், தோலின் pH சமநிலையை மீட்டெடுக்கவும் உதவுகிறது.

ஒரு காட்டன் பந்தில் சிறிது ரோஸ் வாட்டரைத் தடவி, சுத்தம் செய்த பிறகு அதை மெதுவாக உங்கள் முகத்தில் தடவவும். இது உங்கள் சருமத்தை உடனடியாக புத்துணர்ச்சியடைய செய்து ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கும்.

பப்பாளி மாஸ்க்

பப்பாளியில் இருக்கும் என்சைம்கள் சருமத்தை உள்ள அழுக்குகளை உரித்து பிரகாசமாக்க உதவும். இது சுருக்கங்களைக் குறைக்கவும், முகப்பருவைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. பழுத்த பப்பாளியை மசித்து முகமூடியாக தடவலாம். பப்பாளியை தடவிய பின் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சருமம் மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்

வெள்ளரிக்காய் துண்டுகள்

வெள்ளரிக்காய் சருமத்துக்கு புத்துணர்ச்சி மற்றும் ஈரப்பதம் அளிக்கிறது. ஒரு வெள்ளரிக்காயை நறுக்கி, அந்த துண்டுகளை உங்கள் முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். வெள்ளரிக்காயில் உள்ள இயற்கையான அஸ்ட்ரிஜென்ட்கள் உங்கள் சருமத்தை இறுக்கமாக்கி, வீக்கத்தைக் குறைத்து, உங்கள் முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்