தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Home Remedies For Face Wrinkles

Face Wrinkles: முக அழகைக் கெடுக்கும் சருமச் சுருக்கத்தை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?

I Jayachandran HT Tamil
Apr 22, 2023 07:04 PM IST

முக அழகைக் கெடுக்கும் சருமச் சுருக்கத்தை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

முகத்தில் சுருக்கங்கள்
முகத்தில் சுருக்கங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

முகத்தில் ஏற்படும் தோல் சுருக்கங்களை சரிசெய்ய உதவும் எளிய குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

எல்லா சீசனிலும் சருமத்தை ஈரப்பதமாக்குவது மிகவும் அவசியமான ஒன்று. இதனால் சருமத்தில் ஈரப்பதம் அப்படியே இருக்கும். ஆனால் குளிர்காலத்தில் குளிர்ந்த காற்றின் காரணமாக சருமம் மிகவும் வறண்டு போகும். இதற்கு தினமும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.

மசாஜ் செய்யுங்கள்

குளிர்காலத்தில் சருமம் பளபளப்பாக இருக்க, தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். இது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். பெரும்பாலானோர் குளிர் காலத்தில் வெந்நீரில் குளிக்கவே அதிகம் விரும்புகிறார்கள், ஆனால் அதிக சூடான நீரால் சருமம் வறண்டு போகும் என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. எனவே, குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்துங்கள்.

பால் மற்றும் பாதாம்

பால் மற்றும் பாதாம் இயற்கை ஊட்டச்சத்தை வழங்குவதோடு சருமத்தை ஹைட்ரேட் செய்கிறது. இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவுவதால் புள்ளிகள் குறைந்து சருமம் மென்மையாகும். இந்த பருவத்தில் சருமத்தை உரித்து அழுக்குகளை வெளியேற்றுவது மிகவும் அவசியம். அதற்கு, வீட்டிலேயே ஸ்க்ரப் தயார் செய்யலாம். கிரீம், சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்க்ரப்பை தயாரித்து பயன்படுத்துங்கள்.

செய்ய வேண்டியவை

குளிர்காலத்தில் அதிக தாகம் எடுக்காது. அதற்காக தண்ணீரைக் குறைவாக குடிக்கக்கூடாது. இது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தி வயிற்று எரிச்சலையும் உண்டாக்கும்.

குளிர்காலத்தில் சருமத்தை மென்மையாக வைத்திருக்க ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினை கலந்து தடவவும். இதனால் சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.

கோடைக்காலத்தில் முகத்தில் சருமம் வறண்டு போகும். அதனால் சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய ஜூஸ் போன்ற திரவங்கள் மற்றும் தண்ணீரை அதிகமாகக் குடியுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்