Home Remedies for Acidity : அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலால் அவதியா? வீட்டில் இருந்தே என்ன செய்யலாம் பாருங்கள்!
Home Remedies for Acidity : அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவரா? அதற்கு வீட்டில் இருந்தே என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அசிடிட்டியின் அறிகுறிகள்
வயிற்றில் அதிகளவில் அமிலங்கள் சுரப்பது அசிடிட்டியாகும். அதுபோல் இருக்கும்போது, ஆசிட் என்பது தொண்டை வரை வந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். நாள்பட்ட அசிடிட்டி பல கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
உங்கள் அன்றாட பழக்கத்தில் சிலவற்றை சேர்த்துக்கொண்டால் நீங்கள் அசிடிட்டியில் இருந்து விடுபடலாம். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
அதிகம் சாப்பிடாதீர்கள்
அதிகம் சாப்பிட்டாலும் சில நேரங்களில் அசிடிட்டி ஏற்படும். உங்கள் வயிறு நிறைந்திருக்கும்போது, வயிற்றில் உள்ள அமிலங்கள் திரும்பிச்செல்லும் வாய்ப்பை அதிகரிக்கும். இதனால், வயிறு உப்புசம், வயிற்ற வலி ஆகியவற்றை ஏற்படுத்தும்.
எனவே நீங்கள் அதிகம் சாப்பிட விரும்பினால் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள். இது அசிடிட்டியைத் தடுக்கும். பசியுடன் நீண்ட நேரம் நீங்கள் இருந்தாலும், அது அசிடிட்டியை ஏற்படும். மூன்று வேளை உணவுக்கும் இடையில் நீண்ட இடைவெளி கொடுத்தாலும், அது அசிடிட்டியை ஏற்படுத்தும்.
ஆல்கஹால் நுகர்வு
ஆல்கஹால் பருகுவதாலும், ஆசிடிட்டி ஏற்படுகிறது. ஆல்கஹால் அல்லது ஆல்கஹால் கலந்து உணவுகள் எடுததுக்கொள்ளும்போதும், வயிற்றில் வழக்கத்துக்கு அதிகமான அளவு அமிலம் சுரக்கிறது. இதனால் வயிற்றில் வீக்கம், வலி, வாயுத்தொல்லை என அனைத்தும் ஏற்படுகிறது.
சூவிங்கம்
செரிமான செயல்பாடு உங்கள் வாயில் இருந்து துவங்குகிறது. சூவிங்கம் சாப்பிடும்போது உங்கள் வாயில் உமிழ்நீர் ஊறுகிறது. இதனால் உங்களின் அமில அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. உங்கள் உடலின் அமிலஅளவையும் அது கட்டுப்படுத்துகிறது. சாப்பிட்வுடன் நீங்கள் எதையாவது மென்று சாப்பிட்டால், அது செரிமானத்தை தூண்டி, அஜீரணத்தை தடுக்கிறது.
வலதுபுறம் திரும்பி படுக்காதீர்கள்
நீங்கள் படுக்கையில் எப்போது உறங்கும்போதும் வலுது புறம் திரும்பிப்படுக்காதீர்கள். இடதுபுறம்தான் படுக்கவேண்டும். இது ஆசிட் வெளியேறுவதை தடுக்கிறது. இது வயிறில் உருவாகும் அமிலங்கள் உங்கள் நெஞ்சு மற்றும் தொண்டைக்கு ஏறாமல் தடுக்கிறது.
சரியான உணவை சாப்பிடுவதும் அசிடிட்டியை கட்டுக்குள் வைக்க உதவும். அதற்கு உதவும் உணவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாதுளை, வெண் பூசணி, தேன், மோர் ஆகியவை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
வாழைப்பழங்கள்
வாழைப்பழங்கள் குடல் மற்றும் வயிறு ஆரோக்கியத்துக்கு மிகுந்த நன்மையை அளிக்கக்கூடியது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதனால் அவை செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றில் சளியை உருவாக்கி, அது அதிக ஆசிட் உருவாவதை தடுக்கிறது. அதிகளவில் உருவாகும் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கிறது. அசிடிட்டியைக் கட்டுப்படுத்த நல்ல பழுத்த வாழைப்பழம் சிறந்த தேர்வு.
பால்
பாலில் உள்ள அதிகப்படியான கால்சியம், எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. கால்சியம் உங்கள் உடலில் அமில அளவை முறையாக பராமரிக்கவும், சரியான செரிமானத்துக்கும் உதவுகிறது.
மோர்
மோர் பருகுவதால் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதில் அதில் முக்கியமானது, அது அசிடிட்யை கட்டுப்படுத்துவது ஆகும். குளிர்ந்த மோர் நெஞ்செரிச்சலைப் போக்குகிறது. இதில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றுக்கு இதமளிக்கிறது. எரிச்சலை குறைக்கிறது. அசிட் ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளைக் குறைக்கிறது.
மோரில் இயற்கையான ப்ரோபயோடிக்குகள் உள்ளது. மோரில் உள்ள ப்ரோபயோடிக்குகள், வாயு உருவாவதை தடுத்து, வயிறு உப்புசத்தை குறைக்கிறது. இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவு செரிக்க உதவுகிறது. நன்றாக உறிஞ்ச உதவுகிறது. இது அமிலத்தன்மையை குறைக்கிறது. இது குடல் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைக்கிறது.
பாதாம்
அசிடிட்யை தடுக்க பாதாம் உதவுகிறது. அல்சரை குணப்படுத்தும் இயற்கை மருந்தாக பாதாம் உள்ளது. இதில் இயற்கையிலே வயிறு அமிலங்களை சமநிலையில் வைக்கும் எண்ணெய் உள்ளது. பாதாமை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாதாமை பாலாக பருகலாம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
அசிடிட்டியும், நெஞ்செரிச்சலும் அதிகம் இருந்தால், சில சமையலறை பொருட்களும் உங்களுக்கு உதவும்.
புதினா தேநீர்
புதினா தேநீர் உங்கள் உடலில் செரிமானத்தை அதிகரிக்கும். வயிற்று வலியைப்போக்கும். உங்களுக்கு அசிடிட்டி தொல்லை இருந்தால், அது உங்களைக் காக்கும்.
சீமை சாமந்தி டீ
சீமை சாமந்தியின் இதமளிக்கும் குணம், வீக்கத்தை குறைக்கும். இது நரம்பியல் பிரச்னைகளையும் போக்கும். மேலும் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலுக்கான வீட்டு தீர்வாகும்.
இஞ்சி
இதுவும் நாம் அன்றாடம் சமையலறையில் பயன்படுத்தும் ஒன்று. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இஞ்சியில் உள்ள முக்கியமான உட்பொருள் ஜிஞ்ஜரோல்ஸ் ஆகும். இது சளி மற்றும் இருமலை போக்குகிறது. செரிமான கோளாறுகள் மற்றும் வயிறு தொடர்பான பல்வேறு பிரச்னைகளையும் தீர்க்கிறது. அசிடிட்யை உண்டாக்கும் பிலோரி பாக்டீரியாக்களைக் கொல்லும் திறனைக்கொண்டது.
இது மேலும் வீக்கத்தை குறைக்கிறது. வாந்தி, மயக்கம், சோர்வைப் போக்குகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு சிறந்த பொருளாக இஞ்சி உள்ளது. இஞ்சியை பச்சையாகவும் சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். செரிமான கோளாறுகளால் கடுமையாக பாதிக்கப்டும்போது இஞ்சியை எலுமிச்சை சாறில் கலந்து தேன் மற்றும் இளஞ்சூடாக தண்ணீரில் பருகுவது அசிடிட்யைக் குறைக்க உதவுகிறது.
உங்கள் உடலின் வளர்சிதையை குறைக்கிறது. சோர்வைப் போக்குகிறது. அசிடிட்டியால் ஏற்படும் வயிற்று வலியைப் போக்குகிறது.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறை சிறிதளவு தண்ணீரில் கலந்து பருகுவதும் அசிடிட்டிக்கு இதமளிக்கும். அதிகம் சாப்பிடக்கூடாது.
சோம்பு
இதில் உள்ள அனேதோல், வயிற்று வலியைப் போக்குகிறது. இதில் வைட்டமின்களும், மினரல்களும், நார்ச்சத்துக்களும் உள்ளது. இது செரிமானத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள அல்சருக்கு எதிரான குணங்கள், வயிறுக்கு இதமளித்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அசிடிட்டி பிரச்னைகளுக்கு சோம்பு நல்ல வீட்டு தீர்வாக உள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்கள் செரிமான கோளாறுகளால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு சோம்பு உதவுகிறது. தாய்ப்பால் அதிகரிக்கவும், பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுகிறது. இதை வாயில் போட்டு சிறிது நேரம் சவித்தாலே போதும் அசிடிட்டிக்க உடனடி தீர்வு கிடைக்கும்.

டாபிக்ஸ்