Home : உங்க சிறிய வீட்டையும் நிறைவானதாக மாற்றுங்கள்.. மன சோர்வை நீங்கி உற்சாகப்படுத்த உதவும் சிறந்த டிப்ஸ் இதோ!
Home : வீட்டின் அளவு அதன் அலங்காரத்தைப் பொறுத்தது. அறையின் சுவர்கள் மற்றும் அலங்காரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணம் மற்றும் வடிவத்தின் உதவியுடன், நீங்கள் ஒரு சிறிய அறையைக் கூட பெரிதாகக் காட்டலாம். நமக்கு பிடித்த சில நுண்ணுக்கமான பொருட்களை வைத்து நம் வீட்டிற்கு மேலும் பொலிவை ஏற்படுத்தலாம்.
Home : வீட்டு அலங்கரிக்க உதவும் சிலசிறந்த டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு நாளின் ஓட்டத்திற்குப் பிறகு உங்கள் வீட்டிற்குள் நீங்கள் அடியெடுத்து வைக்கும்போது, உங்கள் சோர்வு மற்றும் பதற்றம் மறைவதை உணர முடியும். ஆனால் வீடு இரைச்சலாகவும் சிறியதாகவும் தோன்றினால், அது பதற்றத்தை குறைக்காது. மேலும் அதை அதிகரிக்க செய்யும். வீட்டின் அளவு அதன் அலங்காரத்தைப் பொறுத்தது. அறையின் சுவர்கள் மற்றும் அலங்காரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணம் மற்றும் வடிவத்தின் உதவியுடன், நீங்கள் ஒரு சிறிய அறையைக் கூட பெரிதாகக் காட்டலாம். ஆங்காகே நமக்கு பிடித்த சில நுண்ணுக்கமான பொருட்களை வைத்து நம் வீட்டிற்கு மேலும் பொலிவை ஏற்படுத்தலாம்.
பிரகாசமான விளக்குகளின் பயன்பாடு
எப்போது வீட்டில் பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்துவது அறையின் ஒவ்வொரு மூலையையும் சிறப்பித்துக் காட்டுகிறது. இது அறையில் அதிக இடம் இருப்பதை உணர வைக்கிறது. அதே நேரத்தில், ஒரு சிறிய வீட்டில் குறைந்த வெளிச்சத்தை வைப்பதன் மூலம், வீட்டின் ஒவ்வொரு அறையும் இன்னும் சிறியதாகத் தெரிகிறது.
பெயிண்ட்
பொதுவாக வீட்டில் அழகான நம் மனதிற்கு மிகவும் பிடித்த வண்ணங்கைளை தீட்டலாம். அது மட்டும் இல்லாமல் வீட்டின் சுவர்களில் உங்களுக்கு பிடித்த ஓவியத்தை தேர்ந்தெடுத்து வரைவது பிரகாசமாகவும் நீளமாகவும் தோற்றமளிக்கிறது. இதற்காக, படுக்கையறை சுவர்களை வெள்ளை, கிரீம், வெளிர் பச்சை, இளஞ்சிவப்பு, வெளிர் நீலம் போன்ற ஒளி வண்ணங்களுடன் வண்ணம் தீட்டவும்.
மரச்சாமான்கள்
ஒரு சிறிய வீட்டை பெரிதாகக் காட்ட, வீட்டில் குறைந்தபட்சம் தளபாடங்களையாவது வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இதற்காக, வீட்டில் குறைந்த உயர தளபாடங்களைப் பயன்படுத்துங்கள். மல்டி பர்பஸ் பர்னிச்சர்களை பயன்படுத்துவது நம்மை வசதியாக வைத்திருப்பதோடு, வீட்டையும் அழகாக வைத்து கொள்ள உதவும்.
கண்ணாடியின் பயன்பாடு
அறையில் சூரிய ஒளி அல்லது ஒளி மற்ற அறைகளுக்குச் செல்லக்கூடிய வீட்டின் மூலைப் பகுதியில் கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள். கதவுகளின் எதிர்புறத்தில் பெரிய கண்ணாடிகளையும் பயன்படுத்தலாம். இதனால் வீடு பெரிதாக காட்சியளிக்கும். இது நம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவும்.
வால்பேப்பருடன் அறையை அலங்கரிக்கவும்
உங்கள் படுக்கையறையின் அளவு கொஞ்சம் சிறியதாக இருந்தால், அறையின் ஒரு சுவரில் வால்பேப்பரைப் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பினால், அறையின் கூரையில் ஒரு நட்சத்திரம் மற்றும் சந்திரன் இருக்கும் வான வால்பேப்பரை வைக்கலாம்.
குறைவான பொருட்களை பயன்படுத்துங்கள்
உங்கள் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள். ஒரு வேளை அந்த பொருட்கள் உங்களுக்கு சில காலத்திற்கு பின் தேவை என்று நீங்கள் எண்ணினால் உடனடியாக அதை ஒரு அட்டை பெட்டியில் வைத்து பேக் செய்து மறைவான இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வீட்டில் உள்ள இடங்களை முழுமையாக நீங்கள் பயன்படுத்த உதவும்.
உற்சாகப்படுத்தும் வாசகங்கள்
உங்கள் வீட்டில் உங்களுக்கு பிடித்த வாசகங்கள் அடங்கிய படங்களை சுவர்களில் தொடங்க விடலாம். அந்த வார்த்தைகள் நீங்கள் சோர்வாக வீட்டிற்குள் நுழையும் தருணங்களில் உங்களை உற்சாகப்படுத்த உதவும். மேலும் வாழ்க்கையின் மீது பிடிப்பை தரும்.
மேலும் உங்கள் வீட்டை அலங்கரிக்க உதவும் பல தகவல்களுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்