Home Made Hair Dye : வீட்டிலே தயாரிக்கலாம் ஹேர் டை! இனி கெமிக்கல் டைகளுக்கு விடைகொடுங்கள்!-home made hair dye hair dye can be made at home say goodbye to chemical dyes - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Made Hair Dye : வீட்டிலே தயாரிக்கலாம் ஹேர் டை! இனி கெமிக்கல் டைகளுக்கு விடைகொடுங்கள்!

Home Made Hair Dye : வீட்டிலே தயாரிக்கலாம் ஹேர் டை! இனி கெமிக்கல் டைகளுக்கு விடைகொடுங்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 19, 2024 10:58 AM IST

Home Made Hair Dye : வீட்டிலே தயாரிக்கலாம் ஹேர் டை, இனி கெமிக்கல் டைகளுக்கு விடைகொடுத்துவிடலாம். இயற்கை டை உங்களுக்கு உபாதைகள் ஏற்படாமல் தடுக்கும்.

Home Made Hair Dye : வீட்டிலே தயாரிக்கலாம் ஹேர் டை! இனி கெமிக்கல் டைகளுக்கு விடைகொடுங்கள்!
Home Made Hair Dye : வீட்டிலே தயாரிக்கலாம் ஹேர் டை! இனி கெமிக்கல் டைகளுக்கு விடைகொடுங்கள்!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உங்களுக்கு இளநரை அல்லது முதுநரை எது ஏற்பட்டாலும், அதற்கு ஹேர் டை மட்டும் தீர்வல்ல. நீங்கள் வீட்டிலே உங்கள் தலைமுடியை கருப்பாக்கும் ஹேர் டைகளை தயாரித்துவிட முடியும்.

அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இயற்கையில் கிடைப்பவை. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் இருந்தே பெறமுடியும். அதை வைத்து நீங்களே தயாரித்து, எளிதாக அதைப்பயன்படுத்தவும் முடியும்.

தேவையான பொருட்கள்

அவுரிப்பொடி – 2 ஸ்பூன்

மருதாணிப் பொடி – 2 ஸ்பூன்

நெல்லிக்காய்ப் பொடி – ஒரு ஸ்பூன்

டீத்தூள் – 2 ஸ்பூன்

இன்ஸ்டன்ட் காபித்தூள் – ஒரு ஸ்பூன்

(மருதாணியை கைகளுக்கு வைத்தாலே அதை வைக்கும் இடம் சிவக்கும். அதை நரை முடியில் தடவும்போது, அது அந்த முடியையும் சிவக்கவைத்து நரை முடி பிரச்னையைப் போக்குகிறது. அவுரியில் இருந்து நீல வண்ண சாயம் எடுக்கப்பட்டு, அது துணிகளுக்கு இயற்கை சாயமாக பயன்படுத்தப்பட்டது. டீத்தூளும் இயற்கை வண்ணத்தை தலைமுடிக்குத் தரும் தன்மை கொண்டது.

இதே வேலையைத்தான் காபித்தூளும் செய்கிறது. நெல்லிக்காய்ப் பொடி தலைமுடிக்கு வண்ணத்தைக் கொடுப்பதல்ல, அது தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. குளிர்ச்சியைத்தரும், தலைமுடிக்கு பளபளப்பைத் தரும். மற்ற பொடிகள் தலைமுடிக்கு தரும் வண்ணத்தை தக்கவைக்கும்)

செய்முறை

அவுரிப்பொடி, மருதாணி, நெல்லிக்காய்ப்பொடி என அனைத்துப் பொடிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் இன்ஸ்டன்ட் காபித்தூளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அரை டம்ளர் தண்ணீரில் டீத்தூளை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அதை வடிகட்டி, இந்தப் பொடிகளில் கலந்துகொள்ளவேண்டும். இதை தலைமுடிக்கு வாரத்தில் இரண்டு நாள் தடவினால் உங்கள் நரைமுடி காணாமல் போய்விடும். முடிஉதிர்வு போன்ற பிரச்னைகளும் தீர்க்கப்படும்.

இதை தலையில் தடவி 4 மணி நேரம் கழித்து மிருதுவான ஷாம்பூ கொண்டு தலையை அலசிவிடவேண்டும். பின்னர் உங்கள் கூந்தலின் பளபளப்பைப் பாருங்கள். உங்களை ஆச்சர்யப்படுத்தும்.

தினமும் இதுபோன்ற பல குறிப்புக்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. அவற்றை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.