Home Gardening : மாடியிலோ அல்லது வீட்டிலோ சிறிய தோட்டம் அமைக்க வேண்டுமா? இதோ இந்த யோசனைகள் உதவும்!
Home Gardening : மாடியிலோ அல்லது வீட்டிலோ சிறிய தோட்டம் அமைக்க வேண்டுமா? இதோ இந்த யோசனைகள் உதவும்!
இடத்தேர்வு
நீங்கள் வீட்டிலோ அல்லது மாடியிலோ சிறிய தோட்டம் அமைத்த முடிவெடுத்தால், நீங்கள் அதற்கு சரியான இடத்தை தேர்ந்தெடுக்கவேண்டும். ஏனெனில் செடிகள் வளர்வதற்கு ஏற்ற சூரியஒளி, காற்று என அனைத்தும் தாராளமாகக் கிடைக்கவேண்டும்.
முதலில் சிறிய இடமாக அது இருக்கவேண்டும். பின்னர் அதை கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கலாம். அதிக காற்று அடிக்கும் இடத்தில் வைத்தால் இளஞ்செடிகளால் எழும்ப முடியாமல் போய்விடும். தண்ணீர் விட, விளைச்சலை பறிக்க, தாவரங்களை பராமரிக்க என உங்கள் தோட்டத்தில் அனைத்துக்கும் இடம் இருக்கவேண்டும்.
தாவர வகை
நீங்கள் உங்கள் வீட்டில் சரியான இடத்தை தேர்ந்தெடுத்தவுடன், அடுத்த வேலை நீங்கள் அதில் வளர்க்கப்போகும் அல்லது நடவு செய்யபுபோகும் தாவர வகைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். நீங்கள் மலர்கள் நிறைந்த தோட்டத்தை அமைக்கப்போகிறீர்களா? அல்லது மூலிகை தாவர தோட்டமா அல்லது காய்கறிகள் தோட்டமா அல்லது அனைத்தும் கலந்ததா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.
மண்
தாவரங்கள் செழித்து வளரவேண்டுமெனில், நல்ல மண் வளம் வேண்டும். உங்கள் மண்ணின் குணம் என்ன என்பதை முதலில் பாருங்கள். அதை நீங்கள் கைகளால் நன்றாக பிசைய முடியவேண்டும். அது கடினமாக, களிமண் போல் இருந்தால், அனைத்து வகை தாவரங்களாலும் அதில் செழித்து வளர முடியாது. கற்கள் நிறைந்த மண் என்றாலும் கடினம்.
எனவே தோட்டத்திற்கான மண் மிகவும் அவசியம். மாடித்தோட்டம் எனில் தொட்டிகள்தான் எனவே, அதை உங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளலாம். மேலும் உங்கள் மண்ணை இயற்கை உரங்கள், காய்கறி தோல்கள் என அனைத்தையும் போட்டு நல்ல தரமானதாக மாற்றவேண்டும்.
தோட்ட உபகரணங்கள்
நீங்கள் தோட்டம் அமைக்க முடிவெடுத்துவிட்டால், அதற்கான உபகரணங்களும் சரியானது இருக்கவேண்டும். கத்தரிக்கோல், பெரிதாக வளரும் செடிகொடிகளை நறுக்கத் தேவை, தேவையற்ற பகுதிகளையும் நறுக்கி தூக்கி எறிந்துவிடலாம்.
நிலத்தை தோண்டும் கருவிகள் தேவை. உங்கள் மண்ணை தோண்டி செடிகளை நடும் கருவிகள் தேவை. உங்களுக்கு மண்வெட்டி, தோட்டத்தை சீர் செய்ய உபயோகப்படும் கருவிகள், இவற்றையெல்லாம் பயன்படுத்தி நீங்கள் உங்கள் மண்ணை முறைப்படுத்தினால்தான் தாவரங்கள் செழித்துவளரும். எனவே கருவிள் மிகவும் தேவை என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.
தண்ணீர் ஊற்ற ஷவர் வாலிகள், ஹோஸ்கள் தேவை. நீங்கள் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவேண்டுமெனில், அதற்கேற்ற ஷவர் பொருத்திய வாலிகள் தேவை. மரங்கள் போன்ற தாவரங்களை நடவுசெய்தால், ஹோஸ் போன்ற குழாய்கள் தேவை.
களை எடுக்க கருவிகளும் வேண்டும். உங்கள் தோட்டத்தில் தேவையற்ற களைக்ள் ஏற்பட்டால் அதை களைவதற்கு உங்களுக்கு உகந்த கருவிகள் மிகவும் அவசியம். அவையிருந்தால் மட்டும்தான் அந்தச் செடிகளை நீங்கள் நீக்க முடியும். எனவே களைச்செடிகளை களையும் கருவிகளையும் நீங்கள் தேர்ந்தெடுப்பது அவசியம்.
செடிகளை தேர்ந்தெடுங்கள்
இதுதான் உங்கள் தோட்டம் அமைப்பதில் மிகவும் முக்கியமான நிலை, நீங்கள் தோட்டமிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், உடனடியாக அதில் என்ன தாவங்கள் நடவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது. எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் தாவரங்கள் குறித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
தாவரங்களில் சிலவற்றுக்கு நேரடியான சூரிய வெளிச்சம் தேவை. சிலவகை தாவங்கள் நிழலில் வளரும் தன்மை கொண்டவை. உங்கள் ஊரையே பிறப்பிடமாகக் கொண்ட தாவரங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.
அவை எளிதில் வளர்ந்துவிடும். நீங்கள் அருகில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படும் செடிகளை வைத்தும், எவை உங்கள் ஊரில் நன்றாக வளரும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்.
இவை உங்களின் வீட்டுத் தோட்டத்தை நன்றாக அமைக்க உதவும். இவை நீங்கள் தோட்டமைக்க முதன்மை தேர்வுகள் ஆகும். இன்னும் என்னனென்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் ஹெச்.டி. தமிழுடன்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்