Home Garden : வீட்டுத்தோட்டம் அமைக்கப்போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! இதோ சில ஐடியாக்கள்!
Home Garden : வீட்டுத்தோட்டம் அமைக்கப்போறீங்கள் எனில், கொஞ்சம் காத்திருங்கள். இந்த ஜடியாக்களை பின்பற்றுங்கள்.
இடத்தேர்வு, செடி வகைகளை தேர்வு, உரங்கள் தேர்வு என அனைத்தையும் முடித்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வீட்டுத்தோட்டத்திற்கு மேலும் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தாவரங்களை நோய் தாக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்
தாவரங்களை பூச்சிகளும், நோய்களும் தேடிவரும். அது அடர்ந்த வளரும் தாவரங்கள் என்றால், அவை கட்டாயம் இருக்கும். எனவே தாவரங்களை போதிய இடைவெளியில் முறையாக பராமரியுங்கள். உங்கள் வீட்டில் ஆரோக்கியமான தற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தாவரங்கள் இருந்தாலே பூச்சிகளும், நோய்களும் அண்டாது. அதையும் தாண்டி செடிகளுக்கு நோய்கள் வந்தால், அவற்றுக்கு இயற்கையில் தீர்வு காண முயலுங்கள்.
வீட்டிலே பூச்சிக்கொல்லிகளை தயாரிக்க முடியும். சோப்பு மற்றும் தாவர உட்பொருட்களை பயன்படுத்தி வண்டுகளை குறைக்கலாம். வேப்ப எண்ணெய், பாத்திரம் கழுவும் சோப்களை பயன்படுத்தி தண்ணீர் உற்றி தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளை வாரம் இருமுறை பயன்படுத்தலாம். இது பூச்சிகளை விரட்யடிக்கும் தன்மை கொண்டது.
தழையுரம்
நீங்கள் என்ன செடிகளை வளர்க்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் விட்டு தோட்டத்துக்கு அடியுரமாக தழையுரத்தை இடலாம். செடிகளில் இருந்து விழும் தழைகளை சேர்க்கலாம். அவற்றை பதப்படுத்தி உரமாக்கி மண்ணுக்கு இட்டால் மண் வளம் அதிகரிக்கும்.
மேலும் அது மண் அரிப்பையும் தடுக்கும். தழைகளை தரையில் போட்டு மூடுவது மண்ணுக்கு வளத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும். மேலும் மண் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், மண்ணை குளுமையாக வைக்கவும் உதவும். களைகளை தடுக்கும். மேலும் தோட்டத்தையே அழகாக காட்டும். தழையாக இருப்பதால் அவை மண்ணில் கலந்து மக்கி, மண்ணின் தரத்தை அதிகரித்து, விளைச்சலை உயர்த்தும்.
காய்கறிகள் தோட்டம்
வீட்டில் நீங்கள் தோட்டம் அமைக்க விரும்பினால், அதற்கு காய்கறிகள் தோட்டம் அமைப்பதுதான் சிறந்த தேர்வு. ஏனெனில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளும் கிடைத்துவிடும். ஃபிரஷ்ஷான, சுவையான, தண்ணீர் நிறைந்த காய்கறிகள் உங்கள் சாப்பாட்டை மேலும் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்கும்.
ஒவ்வொரு இடத்துக்கும், அந்த இடத்தின் தட்பவெப்ப நிலையைப் பொருத்து, காய்கறிகள் நடப்படும் நேரம் வேறுபடும். ஒவ்வொரு காய்கறிக்குமே தட்பவெப்ப நிலை மாறுபடும். எனவே நீங்கள் எளிதில் வளர்க்கக் கூடிய தக்காளி, முள்ளங்கி, குடைமிளகாய், மூலிகைகள், பச்சை மிளகாய், கீரை வகைகள் போன்ற செடிகளை நட்டால், அது உங்களின் தோட்டம் அமைக்கும் ஆர்வத்தையும் விளைச்சல் மூலம் தூண்டும்.
இவற்றை வளர்ப்பதில் உங்களுக்கு கிடைக்கும் அனுபவங்களை வைத்து நீங்கள் முட்டைக்கோஸ், ப்ராக்கோலி போன்ற காய்கறிகளையும் அந்தந்த சீசனில் வளர்த்து பலன்பெறலாம்.
கண்டெய்னர் தோட்டம்
தோட்டம் அமைப்பதில் கண்டெய்னர் தோட்டம் என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு அதிக இடம் தேவையில்லை. அதில் நீங்கள் காய்கறிகள், பூக்கள், மூலிகை செடிகள் என வளர்த்துவிடலாம். உங்கள் ஊர் அல்லது இடத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தாவரங்களை தேர்ந்தெடுங்கள்.
கண்டெய்னரை நீங்கள் வைக்கும் இடம் காற்றோட்டமானதும், நல்ல தண்ணீர் வரக்கூடியதுமாக இருக்கவேண்டும். துளசி, ஓமவல்லி உள்ளிட்ட மூலிகை தாவரங்களை சிறிய கண்டெய்னர்களில் வளர்த்து பலன்பெறுங்கள். இதை நீங்கள் சமையலறையிலேயே வளர்த்துவிட முடியும் அல்லது வீட்டின் ஏதேனும் ஒரு அறையில் போதிய வெளிச்சம் கிடைத்தாலே இதற்கு போதும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் கண்டெய்னர்களில், துவாரங்கள் தேவை. சரியான துவாரங்கள் இல்லாவிட்டால் மண்ணில் தண்ணீர் சேர்ந்துவிடும். அதிகம் தண்ண்ணீர் சேர்ந்தால், உங்களின் தாவரங்கள் அழுகிவிடும். பெரிய துவாரங்கள் இருக்கவேண்டிய தேவையில்லை.
ஆனால் நீங்கள் ஊற்றும் அதிகப்படியான நீரை வெளியேற்றும் அளவுக்கு தாவரங்கள் இருக்கவேண்டும். நீங்கள் தரையில் வளர்க்கும் தாவரங்களைவிட அதிகளவு தண்ணீரை தொட்டிச் செடிகளுக்கு ஊற்றவேண்டும். ஏனெனில் தொட்டியில் உள்ள மண் விரைவில் காய்ந்துவிடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்