Home Decors Idea : உங்கள் வீட்டின் அழகை அதிகரித்து காட்டவேண்டுமா? இதோ இப்படி அலங்கரிக்கலாம்!
Home Decors Idea : உங்கள் வீட்டின் அழகை அதிகரித்து காட்டவேண்டுமா? இதோ இந்த தொட்டிச் செடிகளை வீட்டில் வைத்தால் உங்கள் வீட்டுக்கு பிரமாண்ட தோற்றம் வரும்.
உங்கள் வீட்டின் அழகை அதிகரித்து காட்டவேண்டுமானால், அதற்கு உங்கள் வீட்டில் இந்த தொட்டிச் செடிகளை வளர்த்துப் பாருங்கள். உங்கள் வீட்டின் அழகு அதிகமாகும்.
உங்கள் வீட்டுக்கு அழகிய தோற்றத்தை தரும் செடிகள்
உங்கள் வீட்டை அலங்கரிக்கும்போது, அது உங்களின் ஆடம்பரத்தை காட்டுவதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றும். சான்டிலியர் போன்ற பிரமாண்டமான விளக்குகள், சிறப்பான வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் கொண்டு உங்கள் வீட்டின் தோற்றத்தை ஆடம்பரமாகக் காட்ட முயல்வீர்கள்.
ஆனால், சில தொட்டிச் செடிகளே உங்கள் வீட்டின் அழகை அதிகரித்துக்காட்டும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள 8 தொட்டிச் செடிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அவை உங்கள் வீட்டின் ஆடம்பரத்தோற்றத்தையும், அழகையும் அதிகரித்துக் காட்டும்.
மான்ஸ்ட்ரா தாவரம்
இந்த செடியை வீட்டில் ஒளிபடும் இடத்தில் வைத்தால், உங்கள் வீட்டுக்கு அது ஆடம்பர தோற்றத்தை தரும். இதை நீங்கள் தொட்டியில் வைத்து உங்கள் வீட்டில் வைக்கலாம். இது வீட்டின் உள்ளே மற்றும் வெளியே இரண்டு புறத்திலும் வளரும். இது உங்கள் வீட்டுக்கு ஆடம்பரத் தோற்றத்தை தரும். உங்கள் வீட்டுக்கு பணக்காரத்தோற்றத்தை தரும்.
ஃபிடில் லீஃப் ஃபிக்
ஃபிடில் லீஃப் ஃபிக் செடிகளுக்கு அழகான பெரிய இலைகள் உள்ளது. இந்த இலைகள் உங்கள் வீட்டுக்கு அழகிய தோற்றத்தை தரும். உங்கள் வீட்டை ஆடம்பரமாகவும், பணக்காரத்தனத்துடன் மாற்றும். இதனுடன் உங்கள் வீட்டுக்கு அழகையும் தரும். உங்கள் வீட்டில் ஒரு அலங்காரமான தொட்டியில் இந்தச் செடியை நட்டு வளர்க்கவேண்டும். அது உங்கள் வீட்டின் தோற்றத்தை உயர்தரமாக்கி, விலையுயர்ந்ததாக காட்டும்.
அரேகா பாம்
அரேகா பாம் என்ற தொட்டிச் செடி புல்வகைப்போல் இருக்கும். இதை உங்கள் வீட்டின் மத்தியில் வைத்தால் உங்கள் வீட்டுக்கு அழகைத்தரும். இதை நீங்கள் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் வளர்க்கலாம். இது உங்கள் வீட்டின் உள்புறத்துக்கு ஆடம்பர அழகைத்தரும். இது ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இது உங்கள் வீட்டின் ஆற்றலையும் அதிகரிக்கும்.
பார்லார் பாம்
பார்லார் பாம் செடி சிறிய மற்றும் காம்பேக்ட்டான லுக்கைத்தரும். இது உங்கள் வீட்டின் அழகை அதிகரிக்கும். இதை உங்கள் வீட்டின் நளினத்தை அதிகரிக்கும். இது சிறிய இடங்களுக்கு பொருந்தும். இது உங்கள் வீட்டுக்கு ஆடம்பர அழகை கொடுக்கும். உங்கள் வீட்டின் பிரமாண்டத்தை அதிகரிக்க சிறப்பான தேர்வு.
ரப்பர் பிளான்ட்
ரப்பர் பிளான்ட் செடிகளுக்கு பெரிய, கண்ணாடி போன்ற அழகான இலைகள் இருக்கும். இது ஆழ்ந்த பசுமை நிறம் கொண்டது அல்லது இதன் இலைகள் அடர் பச்சை மற்றும் பிரவுன் கலந்த வண்ணத்தில் இருக்கும். இந்த வண்ணமே உங்கள் வீட்டின் அழகை அதிகரிக்கும். அதன் இலைகள் வெல்வெட் போன்ற தோற்றத்தை தரும். இந்த இலைகள் உங்கள் வீட்டுக்கு ஆடம்பரம், பிரமாண்டம், அழகு என அனைத்து லுக்கையும் சேர்த்து தரும்.
ஆர்சிட்
ஆர்சிட் மலர்கள், உங்கள் வீட்டுக்கு அழகு, நளினம், பணக்காரத்தன்மை, ஆடம்பரம் மற்றும் பிரமாண்டம் ஆகிய தோற்றத்தை தரும். இதன் மென்மையான மற்றும் பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கக்கூடிய கவர்ச்சியான மலர்கள், பல வண்ணங்களில் வரும். பலவகை மலர்களும் மலர்ந்து மனம் பரப்பும். அது உங்கள் வீடுகளுக்கும், அறைகளுக்கும் அத்தனை அழகைத்தரும். குறிப்பாக ஆர்சிட் மலர்களின் லாவண்டர் வண்ணம் உங்கள் கண்களுக்கு குளுமையைத்தரும்.
பீஸ் லில்லி
பீஸ் லில்லி என்பதை அமைதி அல்லி என்று நாம் மொழிபெயர்க்கலாம். இதன் வெள்ளை மலர்கள் உங்கள் வீட்டுக்கு அழகிய தோற்றத்தை தரும். இதன் அழகான கரும்பச்சை நிற இலைகள், வீட்டின் காற்றை சுத்தம் செய்யும். இதை உங்கள் வீட்டுக்குள் வைக்கும்போது உங்கள் வீட்டின் காற்றை சுத்தம் செய்யும். உங்கள் வீட்டுக்கு பணக்கார தோற்றத்தையும், ஆடம்பர தோற்றத்தையும் தரும். உங்கள் வீட்டின் மதிப்பை அதிகரிக்கும்.
எலிஃபேன்ட் இயர் தாவரம்
இதை யானை காதுகள் கொண்ட தாவரம் என்று அழைக்கலாம். இதன் இலைகள் யானையின் காதுகளைப்போன்ற பெரிய தோற்றத்தைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் இதய வடிவமானவை. இதுவும் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய தாவரம் ஆகும். இது உங்கள் வீட்டுக்கு அழகான லுக்கைத்தரும். உங்களின் வீட்டின் ஆடம்பர அழகைக்கூட்டி, வீட்டுக்கு ஒரு பணக்கார லுக்கைத்தரும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்