Home Decors Idea : கனவு இல்லத்தை அலங்காரிக்க தயாரா? சின்னதோ, பெரியதோ வீடு! அதை அலங்கரிக்க சில ஐடியாக்கள்!
Home Decors Idea : கனவு இல்லத்தை அலங்காரிக்க தயாராக உள்ளீர்களா? சின்னதோ, பெரியதோ வீடு! அதை அலங்கரிக்க சில ஐடியாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. சிறிய வீட்டையாவது நமது வாழ்நாளில் கட்டிவிடவேண்டும் என்ற ஆவலோடுதான் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் பெரிய வீடு அல்லது சின்ன வீடு என எதில் வேண்டுமானாலும் வசிக்கலாம். ஆனால் அதை நீங்கள் எப்படி அலங்கரிக்கிறீர்கள் என்பதைப் பொருத்துதான் அந்த வீட்டின் அழகு உள்ளது. உங்களுக்கு தேவையான மற்றும் உபயோகமான பொருட்களை வைத்து உங்கள் வீட்டை அலங்கரிக்கவேண்டும். அப்போதுதான் அது தேவையற்ற இடத்தை அடைத்துக்கொள்ளாது.
ஒரு சிறிய அறை கூட சமையல் அறையாகவோ அல்லது படுக்கை அறையாகவோ அல்லது அலுவலமாகவோ மாற்றப்படலாம். அதற்கு அதற்கு அந்த் அறையை மாற்றுவது எப்படி என்று நீங்கள் கொஞ்சம் சிந்தித்தால் போதும். புத்திசாலித்தனமான திட்டமிடல், உங்களுக்கு தேவையானவற்றை சேகரித்து வைப்பதில் புத்திசாலித்தனம், தேவையான பர்னிச்சர்கள் இருந்தால் போதும் உங்கள் வீடு அழகாகும்.
வெளிச்சம் குறைவான, இடம் குறைவான வீட்டைக்கூட சரியாக திட்டமிட்டால் அழகு நிறைந்ததாக மாற்றமுடியும். சிறிய இடம் உங்களுக்கு பிரைவசி இல்லை என்று எண்ணினால், அறையை பிரிக்கும் டிவைடர்கள் போதும். நீங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்கிறீர்களா? அதற்கு மடித்து வைக்கும் டெஸ்க்குகளை பயன்படுத்துங்கள்.
இதை எங்கும், எப்படியும் பயன்படுத்தலாம். அதை நீங்கள் எதில் அமர்ந்துகொண்டும் பயன்படுத்தலாம். அந்த இடத்தை நீங்கள் ஒரு அலங்காரப் பொருள் அல்லது வண்ணத்திலே வேறுபடுத்தி காட்டிவிடலாம். அந்த இடமே எழிலாக காட்சிதரும். உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் சிறு சிறு மாற்றங்களே உங்கள் வீட்டை மேலும் அழகாக காட்டும். அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்களை பின்பற்றுங்கள்.
சிறிய பர்னிச்சர்கள்
உங்களின் அறைகள் சிறியது என்றால், அதற்கேற்ற சிறிய பர்னிச்சர்களை பயன்படுத்துங்கள். அதை சரியான இடத்தில் வைத்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு ஒவியம் அல்லது ஃபோட்டோவை மாட்டினாலே போதும். அந்த இடமே அழகாகும்.
பெட் சைட் டேபிளை நாற்காலியாக்குங்கள்
உங்கள் வீடு விசாலமானதாக இருந்தால், உங்கள் வீட்டில் நிறைய நாற்காலிகளை வாங்கி ஆங்காங்கே போட்டுக்கொள்ளலாம். ஆனால் சிறிய வீட்டில் அது முடியாது என்பதால், உங்கள் பெட்டுக்கு சைடில் வைக்கும் டேபிளையே நாற்காலியாக்கலாம். எங்கு டேபிள் வைக்க நினைத்தாலும், அதை நாற்காலிகளாக போட்டுவிடுங்கள். உறவினர்கள் வரும்போது நாற்காலி, இல்லாதபோது டேபிளாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மாயையை உருவாக்குங்கள்
சிறிய அறையில் நிறைய இடம் இருப்பதை போன்ற மாயையை உருவாக்குங்கள். அதற்கு பெட்ரூமில் நைட் லேம்ப்புக்கு ஒரு டேபிள் வைக்காதீர்கள். அதை சுவரிலே ஃபிட் செய்தால் போதும். நன்றாகவும் இருக்கும். இடத்தையும் அடைக்காது.
சிறிய இடத்தில் நிறைய பொருள்
ஒவ்வொரு அறைக்கும் கதவை வைக்கும்போது, அது திறந்து மூடி கொஞ்சம் இடம் ஒதுக்கவேண்டும். எனவே அந்த இடத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்கள். அங்கு சிறிய புத்தக அலமாரியோ அல்லது துணிகள் மாட்டும் கம்பியையோ மாட்டிவைக்கலாம். இதனால் சிறிய இடத்தைக் கூட முழுமையாக பயன்படுத்த முடியும்.
நீங்கள் உட்காரும் பொட்கள்
நீங்கள் உட்கார உபயோகப்படுத்தும் நாற்காலிகள் மற்றும் சோபாக்களை ஒரே மாதிரியாக அல்லாமல் வித்யாசமானதை பயன்படுத்துங்கள். அப்போதுதான் சிலவற்றை நீங்கள் மடித்து வைத்து இடத்தை குறைவாகப் பயன்படுத்தலாம். சிறிய நாற்காலிகளும் இடத்தை அடைக்காது. இதுபோன்ற மேலும் ஐடியாக்களுக்கு ஹெச்.டி தமிழுடன் இணைந்திருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்