Home Decors idea : உங்கள் சமையலறையில் இந்த 8 விஷயம் மட்டும் செய்யுங்கள்; வீட்டின் அழகு, ஆரோக்கியம் இரண்டும் செழிக்கும்!
Home Decors idea : உங்கள் சமையலறையில் இந்த 8 விஷயம் மட்டும் செய்தால் போதும் வீட்டின் அழகு, ஆரோக்கியம் இரண்டும் செழிக்கும், அது என்ன தெரியுமா?
உங்கள் சமையலறையில் நீங்கள் வளர்க்க ஏதுவான மூலிகைச் செடிகள் இவைதான். இதனால் உங்கள் சமையலறையின் அழகு அதிகரிக்கிறது. உங்கள் வீட்டின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
சமையலறை மூலிகைச் செடிகள்
உங்கள் வீட்டிலே சில தாவரங்களை நீங்கள் வளர்ப்பது அவ்வப்போது பறித்து நீங்கள் உணவுப்பொருட்களை தயாரித்துக்கொள்ள உதவும். அதன் இயற்கை மற்றும் புத்துணர்ச்சி உங்கள் உணவின் சுவைக் கூட்டுவதுடன், உங்கள் உணவுக்கு ஆரோக்கியம் மற்றும் சுவை இரண்டையும் தரும். எனவே உங்கள் வீட்டு சமையலறை தோட்டத்தில் இருக்கவேண்டிய தாவரங்கள்.
புதினா
அன்றாடம் நாம் செய்யும் அனைத்து வகை உணவிலும் புதினா சேர்க்கப்படுகிறது. மசாலாக்கள் முதல் மொஜிட்டோக்கள் வரை இதை நீங்கள் பயன்படுத்தலாம்.
புதினாவை வளர்கப்பதும் எளிது. புதினாவை நீங்கள் கொஞ்சம் நட்டடால்போதும், அது புசுபுசுவென வளர்ந்துவிடும். புதினா உங்கள் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் மூலிகை. தினமும், குறைந்தது துவையலாவது அரைத்து சாப்பிட உங்கள் உடலுக்கு நல்லது. இதற்கு அதிக தண்ணீர் ஊற்றக்கூடாது. அதிகம் தண்ணீர்விட்டால் வேர் அழுகிவிடும்.
வெந்தயக் கீரை
வெந்தயக்கீரையையும் வளர்ப்பது எளிது. வெந்தயக்கீரை இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இதன் விதைகளும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது.
நீங்கள் வீட்டில் வெந்தயக்கீரை வளர்ப்பது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத்தரும். ஒரு தொட்டியில் வெந்தயத்தை தூவினால் போதும் அது முளைத்துவிடும். சூரிய ஒளி படும் இடத்தில் அந்த தொட்டியை வைக்கவேண்டும். அவ்வப்போது அறுவடை செய்துகொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான், கீரை செழித்து வளரும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை, காலை முதல் இரவு வரை நாம் சமைக்கும் அனைத்து உணவிலும் பயன்படுத்தவேண்டும். என்ன சமைத்தாலும் அதில் தூவுவதோடு மட்டுமின்றி, இதை வைத்து நீங்கள் தனியாக உணவுகளும் செய்யலாம். இதன் சுவையும் நன்றாக இருக்கும். நல்ல மண்ணில் இதை நட்டுவிட்டால் போதும், நன்றாக செழித்து வளரும்.
லெமன் கிராஸ்
லெமன் கிராஸ் நீங்கள் எந்த உணவிலும் பயன்படுத்த மாட்டீர்கள். இதன் இலைகளில் தேநீர் தயாரிக்கலாம். அதில் சிறிதளவு எலுமிச்சையின் சுவை இருக்கும். இந்த தேநீரின் சுவை நன்றாக இருக்கும்.
ஓமவல்லி
ஓமவல்லி இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் ஒரு தாவரம் ஆகும். இதன் வாசம் மூக்கை துளைப்பதாக இருக்கும். மிகவும் நன்றாக இருக்கும்.
இதை கசக்கினால் மணம் பரவும். இதை நீங்கள் வீட்டில் வளர்க்கவேண்டுமெனில், நீங்கள் வளர்க்க விரும்பும் தொட்டியில் ஓமவல்லியை பறித்து நட்டாலேபோதும், இதுவும் புசுபுசுவென வளர்ந்துவிடும். இந்த அனைத்து செடிகளுக்குமே, நல்ல மண், இயற்கை உரம், தேங்காய் நார் என அனைத்தும் இடவேண்டும். தேவையான அளவு தண்ணீர், போதிய வெளிச்சத்தில் வளர்க்கவேண்டும்.
பிரியாணி இலை
பிரியாணி இலை, அனைத்து வகை கறிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இமைத நீங்கள் வீட்டிலும் வளர்க்க முடியும். இதை நீங்கள் அப்படியே சூப் அல்லது மசாலாக்களில் பயன்படுத்தலாம். இதன் காய்ந்த இலைகளை எரிப்பது வீட்டுக்கும் நல்லது. இதை நீங்கள் பறித்து நட்டாலே போதும். அது செடியாக வளர்ந்துவிடும். இதற்கு மிதமான சூரியஒளி இருந்தாலே போதும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்