Home Decors Idea : கொஞ்சம் யோசித்தால் போதும்! சிறிய வீட்டைக் கூட சிறப்பாக்கலாம்! இதோ சில யோசனைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Decors Idea : கொஞ்சம் யோசித்தால் போதும்! சிறிய வீட்டைக் கூட சிறப்பாக்கலாம்! இதோ சில யோசனைகள்!

Home Decors Idea : கொஞ்சம் யோசித்தால் போதும்! சிறிய வீட்டைக் கூட சிறப்பாக்கலாம்! இதோ சில யோசனைகள்!

Priyadarshini R HT Tamil
Updated Aug 09, 2024 09:59 AM IST

Home Decors Ides : கொஞ்சம் யோசித்தால் போதும், சிறிய வீட்டைக் கூட சிறப்பாக்கலாம். இதோ இந்த யோசனைகள் உங்களுக்கு உதவக்கூடும். பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

Home Decors Idea : கொஞ்சம் யோசித்தால் போதும்! சிறிய வீட்டைக் கூட சிறப்பாக்கலாம்! இதோ சில யோசனைகள்!
Home Decors Idea : கொஞ்சம் யோசித்தால் போதும்! சிறிய வீட்டைக் கூட சிறப்பாக்கலாம்! இதோ சில யோசனைகள்!

விளக்குகள்

வீட்டுக்கு விளக்குகள் மிகவும் அவசியம். பெரிய ஜன்னல்கள் வைத்துவிடுவதால், பகல் நேரத்தில் வெளிச்சம் மற்றும் காற்றோட்டமும் போதுமானதாக இருக்கும். ஆனால் இரவின் இருட்டைப் போக்க விளக்குகள் முக்கியம். எனவே அவற்றை தேர்ந்தெடுத்து செய்வது அவசியம். அத்யாவசியமான விளக்குகள் மற்றும் அலங்கார விளக்குகள் இரண்டும் அவசியம். அவற்றை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

கலை மற்றும் கட்டிக்கலை

சுவர்கள் மற்றும் சீலிங்குகளில் வெறும் ஓவியங்களை மட்டும் தீட்டி வைக்காமல், சிறிய கட்டிட வேலைபாடுகளை செய்யலாம். குறிப்பாக சீலிங்கில் அலங்கார விளக்கு பொருத்த, தனியாக ஒரு எலிவேஷன் கொடுத்து உங்கள் ஹாலை அழகாக்கலாம். ஹாலைச் சுற்றி வண்ண விளக்குகள் பொருத்தலாம்.

வண்ணங்கள்

நீங்கள் உங்கள் சுவர்களுக்கு தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள் நன்றாக இருக்கவேண்டும். ஏற்கனவே உங்களுக்கு உங்கள் உள் அலங்கார நிபுணர்கள் மற்றும் கட்டிட நிபுணர்கள் கொடுப்பார்கள். ஆனால் நீங்களாகவும் சில யோசனைகளை தேர்ந்தெடுக்கலாம். வெளிர் நிறங்களுக்குப் பதில் அடர் நிறங்களான பச்சை, ஊதா, மஞ்சள் பர்ப்பிள் என நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். 

ஒவ்வொரு அறைக்கும் ஒரு வண்ணமும் நன்றாக இருக்கும். ஹாலுக்கு ஒரு வண்ணம் மற்ற அறைகளுக்கு ஒரு வண்ணம், சமையலறைக்கு ஒரு வண்ணம், குழந்தைகள் அறைக்கு ஒரு வண்ணம் என வித்யாசமாக செய்யலாம். வீடு இன்னும் அழகாக இருக்கும்.

இடங்களை திட்டமிடுங்கள்

நீங்கள் உங்கள் வீட்டில் அலங்கார பொருட்களை வைக்க நினைக்கிறீர்கள் என்றால், எந்த இடத்தில் எந்தப் பொருளை வைக்கலாம் என்று பாருங்கள். அது வீட்டை மேலும் அழகாக காட்டும். அதற்கு ஏற்றால்போன்ற ஓவியங்கள் அல்லது ஃபோட்டோக்களை சுவரில் மாட்டுங்கள். தேவைப்படும் அறைகளுக்கு ஃப்ளோர் மேட்டை பயன்படுத்துங்கள்.

பேட்டர்ன்

உங்கள் வீட்டில் ஒரு குறிப்பிட்ட பேட்டர்னை கடைபிடியுங்கள் அல்லது ஒவ்வொரு அறைக்கும் ஒரு பேட்டர்னை செய்யுங்கள். வித்யாசமான பேட்டர்ன்கள், வித்யாசமான வண்ணங்களில் செய்யும்போது, அது உங்கள் வீட்டின் அழகை அதிகரித்துக்காட்டும். அந்த இடத்தில் வைக்கப்படும் சோபாக்கள் மற்றும் சேர்களையும் அதற்கு ஏற்றாற்போல் தேர்ந்தெடுங்கள்.

இயற்கை வெளிச்சம் தேவைப்படுவதற்கு கண்ணாடியைப் பயன்படுத்துங்கள்

குறிப்பாக சாப்பிடும் அறைகளில் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட சுவர்களை வைத்தால், அது ஜன்னலில் இருந்து வரும் வெளிச்சத்தை அறை முழுவதில் பிரதிபலிக்கும். எனவே அந்த அறையே வெளிச்சமாகிவிடும். அறையே அழகாக காட்சியளிக்கும்.

புத்தக அலமாரிகள்

முதலில் உங்களிடம் எதுபோன்ற புத்தகங்கள் உள்ளது என்று பாருங்கள். அதற்கு ஏற்ப அலமாரியை வடிவமையுங்கள். பாடல் தொடர்பான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், கதை புத்தகங்கள் என ஒவ்வொரு வகை புத்தகத்துக்கும் தனி இடம் ஒதுக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் புத்தகங்களை எடுக்கும்போது வசதியாக இருக்கும்.

கட்டிக்கலையில் மாற்றம்

அனைவரும் அமர்ந்து பேசக்கூடிய ஒரு அறையில் நீங்கள் வட்டமான சோபாக்களை போடலாம். இதனால் நீங்கள் அமர்ந்து பேசும்போது, அனைவரும் ஒருவரையொருவர் பார்த்து பேச முடியும். ஒரு இணக்கம் மற்றும் பிணைப்பு உண்டாகும். இதுபோல் செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.

உங்கள் வீட்டை மேலும் அழகாக்க இந்த தொடரை தொடந்து படிக்க ஹெச்.டி தமிழுடன் இணைந்திருங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9