Home Decors Idea : கனவு இல்லத்தை கட்டி முடித்துவிட்டீர்களா? ஃபர்னிச்சர்கள் செய்ய எந்த மரம் சிறந்தது? இதோ ஐடியாக்கள்!-home decors idea have you finished building your dream home which wood is best for making furniture here are some idea - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Decors Idea : கனவு இல்லத்தை கட்டி முடித்துவிட்டீர்களா? ஃபர்னிச்சர்கள் செய்ய எந்த மரம் சிறந்தது? இதோ ஐடியாக்கள்!

Home Decors Idea : கனவு இல்லத்தை கட்டி முடித்துவிட்டீர்களா? ஃபர்னிச்சர்கள் செய்ய எந்த மரம் சிறந்தது? இதோ ஐடியாக்கள்!

Priyadarshini R HT Tamil
Aug 16, 2024 10:04 AM IST

Home Decors Idea : கனவு இல்லத்தை கட்டி முடித்துவிட்டீர்களா? ஃபர்னிச்சர்கள் செய்ய எந்த மரம் சிறந்தது என்று பாருங்கள். ஒவ்வொரு ஃபர்னிச்சருக்கு ஒவ்வொரு மரம் நல்லது. அதை தேர்ந்தெடுத்து பலன்பெறுங்கள்.

Home Decors Idea : கனவு இல்லத்தை கட்டி முடித்துவிட்டீர்களா? ஃபர்னிச்சர்கள் செய்ய எந்த மரம் சிறந்தது? இதோ ஐடியாக்கள்!
Home Decors Idea : கனவு இல்லத்தை கட்டி முடித்துவிட்டீர்களா? ஃபர்னிச்சர்கள் செய்ய எந்த மரம் சிறந்தது? இதோ ஐடியாக்கள்!

ஃபர்னிச்சர்கள் செய்ய உகந்த மரம் எது?

ஃபர்னிச்சர்கள் செய்வதற்கு, பல்வேறு மெட்டீரியல்கள் உதவுகின்றன. ஆனால் மரம் என்பது ஃபர்னிச்சர்கள் செய்ய சிறந்த ஒன்றாக உள்ளது. மரத்தால் செய்யப்படும் ஃபர்னிச்சர்கள் நன்றாக இருக்கும். மரத்தால் செய்யப்படும் ஃபர்னிச்சர்களுக்கு இருக்கக்கூடிய மவுசு வேறு எந்த மெட்டீரியலால் செய்யக்கூடியதற்கும் கிடையாது. உங்கள் கனவு இல்லத்தை கட்டி முடித்துவிட்டீர்கள் என்றால் அதை அலங்கரிக்க ஃபர்னிச்சர்களை எந்த மரத்தால் செய்யலாம் என்று பாருங்கள்.

தேக்கு

தேக்கு அல்லது சாக்வான், பிரபலமான, தரமான மரம். இந்த மரம் ஃபர்னிச்சர்கள் செய்ய சிறந்தது. இது அடர் பிரவுன் வண்ணத்தில் இருக்கும். தேக்கு மரத்தால் செய்யப்படும் ஃபர்னிச்சர்கள் வலுவானதாகவும், அழகாகவும் இருக்கும். உங்களுக்கு பயன்படுத்த எளிதாகவும் இருக்கும். உங்களுக்கு பிடித்ததுபோல் செய்து கொள்ளலாம்.

தேக்கின் சிறப்பு

தேக்கு மரத்தால் செய்யப்படும் ஃபர்னிச்சர்கள் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். எதையும் எதிர்கொள்ளும் திறனும் பெற்றது. இதன் அதிக எண்ணெய்த் திறன்தான், தண்ணீர், பூச்சி, மரச்சிதைவு ஆகிய அனைத்தும் ஏற்படாமல் தடுக்கிறது. இது உயர்தர மரம். இதற்கு குறைவான அளவு பராமரிப்பே போதுமானது. இதை நீங்கள் தினமும் துடைத்தாலே போதும். முறையாக பராமரித்துக்கொள்ளலாம்.

ஷீஷாம்

ஷீஷாம் என்பது, ரோஸ்வுட், இது சிவப்பு மற்றும் பிரவுன் வண்ணத்தில் இருக்கும். இது அடர் நிறம் கொண்டது. இது மிருதுவான மனம் கொண்டது. இதில் இருந்து நீங்கள் தரமான மற்றும் அழகான ஃபர்னிச்சர்களை உருவாக்கலாம்.

ரோஸ்வுட்டின் சிறப்புகள்

ரோஸ்வுட்டும் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும். கரையான்களை எதிர்க்கும் தன்மைகொண்டது. அடர்ந்த கனமான மரமாகும். இதனால் நீங்கள் பயன்படுத்தும்போது, நன்றாக கையாளலாம். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஃபர்னிச்சர்களுக்கு இந்த மரத்தை பயன்படுத்தலாம். நாற்காலிகள், மேஜைகள், கட்டில்கள் போன்றவற்றை செய்யலாம்.

சால்

உங்கள் வீட்டில் உள்ள ஃபர்னிச்சர்கள் செய்வது மற்றுமொரு சிறந்த மரமாகும். இது வெளிர் பிரவுன் நிறத்தில் இருக்கும். அடர் சிவப்பு வண்ணத்திலும் இருக்கும். சால், கரையான்கள் அரிக்காமல் தடுக்கும் தன்மைகொண்டது. அதனால் இந்த மரத்திற்கு அடிக்கடி கரையான் மருந்து பயன்படுத்த தேவையில்லை.

சால் மரத்தின் சிறப்புகள்

சால், நீடித்து நிலைக்கும் தன்மைகொண்டது, இது கனமான ஃபர்னிச்சர்கள் செய்ய உதவும். இதை டிரஸிங் டேபிள்கள், சமையலறை கேபினட்கள், கட்டில் ஆகியவை செய்ய பயன்படுத்தலாம். இதை பராமரிக்க 6 மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் போட்டு பாலிஷ் செய்யவேண்டும். அப்போதுதான் புதிதாக செய்தது போல் மின்னும்.

வேம்பு

வேப்பமரம், நமது ஊர்களில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மரம். இது மிருவாகவும், வெளிர் பிரவுன் வண்ணத்திலும் இருக்கும். இதன் வடிவம் கொஞ்சம் கரடுமுரடாகத்தான் இருக்கும். கனம் குறைவாக ஃபர்னிச்சர்கள் செய்வதற்கு இதை பயன்படுத்தலாம். வேப்ப மரம், ஃபர்னிச்சர்கள் செய்ய உகந்தது. இது உங்கள் வீட்டுக்கு நல்ல அழகையும் தரும்.

வேப்ப மரத்தின் சிறப்புகள்

வேப்ப மரத்தால் செய்யப்படும் ஃபர்னிச்சர்களும் நீடித்து நிலைத்திருக்கும் தன்மைகொண்டது. இதை விரைவில் வெடிக்காது. நீண்ட நாள் நன்றாக ஒட்டிக்கொண்டு இருக்கும். இதன் இயற்கை மணம், பூச்சிகளை அண்டவிடாது. உங்கள் வீட்டில் பூச்சிகளே இருக்கக்கூடாது என்றால் இந்த மரம் ஒரு சிறந்த தேர்வு.

மாமரம்

மாமரம், ஃபர்னிச்சர்கள் செய்வதற்கு ஏற்ற மற்றொரு வகை மரம். இதை நீங்கள் கனமில்லாத ஃபர்னிச்சர்கள் செய்வதற்கு பயன்படுத்தலாம். இதில் தயாரிக்கப்படும் ஃபர்னிச்சர்களும் நீடித்து நிலைத்திருக்கும் தன்மை கொண்டவை. இதை கட்டில் தயாரிக்கப் பயன்படுத்துவதில்லை. சமைலயறை காபினட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுவதில்லை. இதை மேஜைகள் மற்றும் அலமாரிகள் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். இது அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். இதை உடைத்து வெளிர் நிறத்திலும் பயன்படுத்தலாம்.

மாமரத்தின் சிறப்புகள்

மாமரத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் எளிதாக மாற்ற முடியும். இதை அழகான குறைவாக பயன்பாட்டுக்கு பயன்படும் ஃபர்னிச்சராக்க முடியும். இதை புத்தக அலமாரிகள், ஃப்ரேம்கள் என பல்வேறு ஃபர்னிச்சர்கள் செய்யலாம். இதன் பளபளப்பு குறையலாம் பல ஆண்டுகள் வரை நிலைக்கும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.