Home Decors idea : கனவு இல்லத்தை கட்டிவிட்டீர்களா? அதை அலங்கரிக்க இதோ சுவாரஸ்யான வழிகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Decors Idea : கனவு இல்லத்தை கட்டிவிட்டீர்களா? அதை அலங்கரிக்க இதோ சுவாரஸ்யான வழிகள்!

Home Decors idea : கனவு இல்லத்தை கட்டிவிட்டீர்களா? அதை அலங்கரிக்க இதோ சுவாரஸ்யான வழிகள்!

Priyadarshini R HT Tamil
Updated Aug 07, 2024 10:00 AM IST

Home Decors idea : கனவு இல்லத்தை கட்டிவிட்டீர்களா? அதை அலங்கரிக்க இதோ சுவாரஸ்யான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Home Decors idea : கனவு இல்லத்தை கட்டிவிட்டீர்களா? அதை அலங்கரிக்க இதோ சுவாரஸ்யான வழிகள்!
Home Decors idea : கனவு இல்லத்தை கட்டிவிட்டீர்களா? அதை அலங்கரிக்க இதோ சுவாரஸ்யான வழிகள்!

வண்ணங்கள்

உங்கள் வீட்டில் உள்ள அறைகளை வண்ணமயமாக பெயின்ட் செய்யுங்கள். உங்களிள் புத்தக அலமாரிகளுக்கு பல வண்ணங்கள் தீட்டுங்கள். அது மிகவும் ரம்மியமானதாக மாறிவிடும். புத்தகம் வாசிக்கும் அறையில் ஒரு டேபிள் மட்டும் இருக்கட்டும். அதிக பொருட்களை அடுக்கி வைக்கவேண்டாம்.

கிரியேட்டிவிட்டி

நீங்கள் வீட்டிற்காக வாங்கும் பொருட்கள் கிரியேட்டிவிட்டி நிறைந்ததாக இருக்கட்டும். உங்கள் வீட்டில் உபயோமில்லாத பொருட்களையே அலங்காரப் பொருட்களாக மாற்றுங்கள். எதையும் தூக்கி வீசிவிடவேண்டாம். கொஞ்சம் கிரியேட்டிவிட்டியைப் பயன்படுத்தினாலே போதும். அது அழகாகி வீட்டை அலங்கரிக்கும் பொருளாக மாறிவிடும். எனவே கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.

ஜியோமெட்ரிக் வடிவங்கள்

உங்கள் வீட்டில் வட்டம், கோணம், சதுரம் என ஜியோமெட்ரிக் வடிவங்களில் கட்டுமானங்களையோ அல்லது ஓவியங்களையோ வரையுங்கள். அது உங்கள் வீட்டுக்கு தனிஅழகைத்தரும். குறிப்பாக உங்கள் வரவேற்பறையில் இதுபோல் இருந்தால் உங்கள் வீடுகள் இன்னும் அழகாகும்.

உங்களிடம் உள்ளதை மட்டுமே பயன்படுத்துங்கள்

உங்களிடம் உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்தி, உங்கள் வீட்டை அலங்கரிக்க முடியும். நீங்கள் அதிகமாக செலவு செய்யத் தேவையில்லை. உங்களுக்கு வீடு கட்டி முடிக்கும்போது மிஞ்சும் மரங்களை வைத்தே சில உபயோகமான அதேவேளையில் அழகான ரேக்குகளை உருவாக்கலாம். எனவே உங்களிடம் உள்ள பொருட்களை வைத்தே வீட்டை அலங்கரிக்க வழிகளை தேர்ந்தெடுங்கள்.

சிறிய வித்யாசம் காட்டுங்கள்

உங்கள் வீட்டில் சிறிய வித்யாசம் காட்டுங்கள். டிவிக்கு என்று அனைவரும் ஸ்டான்ட் வைத்திருப்பார்கள். ஆனால் அதை நீங்கள் ஒரு கபோர்ட்டுக்குள் வைத்துவிடுங்கள். அது உங்கள் ஹாலை மேலும் அகலமாகக் காட்டும். எனவே சிறிய விஷயங்களை மாற்றினாலே உங்கள் வீடுகளை அழகாக்கலாம்.

டிவியை வைப்பது எப்படி

சுவற்றில் மாட்டும் டிவியைத்தான் நாம் பெரும்பாலும் உபயோகிக்கிறோம். எனவே உங்கள் வீட்டில் சுவற்றில் டீவியை மாட்ட விரும்பினால், அதை சுற்றியும் நிறைய ஓவியங்களை மாட்டிவிடுங்கள். உங்கள் ஹாலுக்கே வித்யாசமான லுக்கைக் கொடுக்கும்.

வெளிப்புறத்தையும் உள்ளே கொண்டுவருவது

இது எப்படி சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? பெரிய ஜன்னல்களை வையுங்கள். இதனால் நீங்கள் ஜன்னலை முழுவதும் திறக்கும்போது, வெளிப்புறமும் வீட்டுக்குள் இருப்பது போல் இருக்கும். அந்த இடத்தில் சிறிய தோட்டம் இருந்தால் இன்னும் குளுமையாக இருக்கும்.

கருப்பு பின்புலம்

உங்கள் ஹால் மிகப்பெரியதாக இருந்தால், அதற்கு பின்புலம் கருப்பில் கொடுங்கள். அதாவது சுவருக்கே கருப்பு வண்ணத்தை கொடுக்கலாம். அங்கு ஏதேனும் தூண்கள், பீம்கள் இருந்தால் அதற்கும் கருப்பு வண்ணத்தைக் கொடுங்கள். உங்கள் ஹாலை அது அழகாகக் காட்டும். அதில் ஓவியங்கள் அல்லது சிற்பங்களை வைக்கலாம். இன்னும் கூடுதல் அழகைத்தரும். சுற்றியுள்ள பொருட்கள் வண்ணமயமாக இருந்தால், பார்க்கவே கவர்ந்து இழுக்கும்.

இயற்கை ஒளி

வீட்டுக்குள் இயற்கை ஒளி அதிகம் வருமாறு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை அமைக்கவேண்டும். அப்போதுதான் வீடு நல்ல வெளிச்சம் நிறைந்ததாகவும், காற்றோட்டமானதாகவும் இருக்கும்.

படுக்கையறை

வீட்டின் படுக்கை அறையில் பயன்படுத்தும் பெட் கவர்கள், தலையணை உறைகள் மற்றும் கர்டன்கள் என அனைத்தும் ஒவ்வொரு வண்ணத்திலோ அல்லது ஒரே வண்ணமாகவோ இருக்கலாம். இது உங்கள் படுக்கையறையின் அழகுக்கு மேலும் மெருகூட்டும். படுக்கை அறை நல்ல விசாலமானதாகவும், வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கவேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: