Home Decors Idea : சிறிய படுக்கையறை சிங்கார படுக்கையறை என்று மற்றவர்கள் வியக்கவேணடுமா? இதோ ஐடியாக்கள்!
Home Decors Idea : சிறிய படுக்கையறை சிங்கார படுக்கையறை என்று மற்றவர்கள் வியக்கவேணடுமெனில், இந்த ஐடியாக்களை பின்பற்றுங்கள் போதும்.

உங்கள் படுக்கையறை சிறியதோ அல்லது பெரியதோ அதற்கு ஒரு சின்ன அலங்காரம் செய்தாலே போதும் அது பிரமாண்டமானதாகிவிடும். அது என்ன என்று தெரிந்துகொள்ள உங்களுக்கு சில ஐடியாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று பாருங்கள். சின்ன படுக்கை சிங்கார படுக்கை என்று உங்கள் படுக்கையறையைப்பார்த்து அனைவரும் வியக்கவேண்டுமா? இதோ இவற்றை பின்பற்றுங்கள். நீங்கள் வீடு மாற்றுகிறீர்கள் என்றால் அங்கு சிறிய படுக்கை அறைதான் உள்ளது. இத்தனை நாள் நீங்கள் பயன்படுத்தியது பெரிய அறை, ஆனால் இதில் என்ன அலங்காரம் செய்வது, சிறிய இடத்தை எப்படி பயன்படுத்துவது என்ற குழப்பங்கள் உங்களுக்கு உள்ளதா, அதைப்போக்கத்தான், உங்கள் சிறிய படுக்கை அறையைக்கூட சிறப்பாக அலங்கரிக்க உங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டிலே செய்துகொள்ள இங்கு யோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மிதக்கும் ஷெல்ஃப்கள்
உங்கள் படுக்கையறை சிறியதாக உள்ளது. ஆனால் உங்களிடம் அலங்கரிக்க எண்ணற்ற பொருட்கள் உள்ளது எனில், உங்கள் படுக்கையறையில் அழகாக மிதக்கும் ஷெல்ஃப்களை உருவாக்குங்கள். அது உங்களுக்கு தேவையான பொருட்களை வைக்கவும், அழகாகவும் இருக்கும். புத்தகங்களை அடுக்கிக்கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் உறங்கச்செல்லும்முன் படிக்கும் புத்தகங்களை அதில் வைத்தால் படித்துவிட்டு படுக்க ஏதுவாக இருக்கும்.
பர்னிச்சர்கள்
சிறிய படுக்கையறை என்றால், நீங்கள் அதில்தான் குறைந்தபட்சம் படுக்க உதவும் படுக்கைகள், பாய்கள், மெத்தைகள், போர்வைகள், தலையணைகள் என அடுக்கிவைக்கவேண்டும். எனவே அதற்கு ஏற்றாற்போல் நீங்கள் உங்கள் படுக்கையறையில் பர்னிச்சர்களை வாங்குகள், அடியில் டிராவைத்த கட்டிகள், ஷெல்ஃப்கள், அறைகள் கொண்ட டேபிள்கள், தேவையில்லையென்றால் மடித்து வைக்கும் வகையில் உள்ளதை வாங்கிக்கொள்ளுங்கள்.