Home Decors Idea : வீடு கட்டிக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டை அலங்கரிக்க இதோ இந்த யோசனைகள் உதவும்!
Home Decors Idea : வீடு கட்டிக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டை அலங்கரிக்க இதோ இந்த யோசனைகள் உதவும்!
நீங்கள் உங்கள் கனவு இல்லத்தை இப்போது கட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் வீட்டை அலங்கரிக்க இந்த யோசனைகள் உங்களுக்கு உதவும்.
உங்கள் சுவரை பயன்படுத்துங்கள்
உங்கள் வீட்டின் உள்ள சுவர்களின் இடத்தை அலங்காரத்துக்குப் பயன்படுத்துங்கள். அதில் அலங்கார திரைச்சீலைகளை மாட்டலாம் அல்லது பெரிய வண்ண ஓவியங்களை தீட்டலாம் அல்லது வண்ண விளக்குகள், படங்கள், ஃபோட்டோக்கள் என வைத்து அலங்கரித்தால் உங்கள் வீட்டின் அழகு மேலும் கூடும்.
பிரகாசமான வண்ணங்கள்
உங்கள் வீட்டின் சுவர்களுக்கான வண்ணங்களாக இருந்தாலும் சரி அல்லது அலங்காரப் பொருட்களாக இருந்தாலும் சரி அனைத்துக்கும் பிரகாசமான வண்ணத்தை நீங்கள் தேர்வு செய்தால், வீடே வெளிச்சமானதாகவும், அதனால் உற்சாகமும் பிறக்கும். வீடு ஒளி நிறைந்ததாக இருக்கும்போது, மிகவும் நேர்மறையாகத் தோன்றும்.
சுவரில் மாட்டும் ஃபோட்டோக்கள் மற்றும் ஓவியங்கள்
நீங்கள் சுவரில் மாட்டுவதற்கு ஃபோட்டோக்கள் மற்றும் ஓவியங்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்தீர்கள் என்றால், அவை நல்ல பெரியதாகவும், அழகானதாகவும் இருக்கட்டும். அப்போதுதான் உங்கள் வீட்டுக்கு அது நல்ல லுக்கைத்தரும்.
தரைகளுக்கு வண்ணம்
தரைகளில் வண்ணம் தீட்டினால் உங்கள் வீட்டுக்கு கூடுதல் அழகு கிடைக்கும். குறிப்பாக வெளிர் நிறங்கள் அதற்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்தும் பர்னிச்சர்கள் உங்கள் வீட்டின் அழகை மேலும் அதிகரிக்கும். வண்ணம் இல்லாத தரையைவிட வண்ணமயமான தரை வீட்டின் அழகை மேலும் அதிகரிக்கும்.
சிறிய இடங்களில் பிரமாண்ட அழகுப்பொருட்கள்
சிறிய இடங்களில் பெரிய பொருட்களை வைத்து அலங்கரியுங்கள். சுவர் ஓவியங்களையும் பெரியதாக வரையுங்கள். படங்கள் மாட்டினால் அதுவும் பெரியதாக இருக்கட்டும். இன்னும் அழகாக இருக்கும். அந்த சிறிய இடத்தை பிரமாண்டமாகக் காட்டும்.
மேஜை அலங்காரம்
உங்களுக்கு ஏதேனும் பொருட்களை கலெக்ட் செய்யும் ஆர்வம் இருந்தால், உங்கள் வீட்டின் ஓரிடத்தில் அவற்றை காட்சிப்படுத்தி அலங்கரிக்கலாம். அதுவும் உங்கள் வீட்டின் அழகை மேலும் அதிகரித்துக் காட்டும். மேஜைகளும் வித்யாசமானவற்றை தேர்ந்தெடுங்கள்.
வித்யாசமான புராதன பொருட்கள்
உங்கள் வீட்டை வித்யாசமான புராதன பொருட்களை வைத்து அலங்கரிக்கலாம். அது உங்கள் வீட்டுக்கு தனித்தன்மையைக் கொடுக்கும். சுவருக்கு நீங்கள் வண்ணங்கள் தேர்ந்தெடுக்கும்போது, இந்த பொருட்களுக்கு ஏற்ப வர்ணங்களை தீட்டி, அதில் இந்த பழங்காலப் பொருட்களை வைத்து அலங்காரப்படுத்தினால், அது வீட்டின் அழகை மேலும் அதிகரிக்கும்.
பழையதும், புதியதும்
நீங்கள் உங்கள் பூர்வீக இடத்திலே வசித்தீர்கள் என்றால், நிச்சயம் நிறைய பழைய பொருட்கள் உங்களிடம் ஏற்கனவே இருக்கும். அதையும் நீங்கள் அலங்கரிக்க பயன்படுத்தலாம். அவற்றுடன் இன்றைய அலங்காரப் பொருட்களையும் வைத்து ஒரு ஃப்யூசன் அலங்காரத்தை செய்யலாம். அது உங்கள் வீட்டு புதிய லுக்கை தரும்.
சீலிங்
சீலிங்கில் நீங்கள் சில அலங்காரங்களை செய்யலாம். சிலீங்கையே மாற்றாலம். கூம்பு அல்லது கோபுர வடிவில் சீலிங் அமைத்து ஒவ்வொரு படியையும் வித்யாசமாக அலங்கரிக்கலாம். அது வீட்டுக்கு வித்யாசமான லுக்கை தரும்.
ஒவ்வொரு அறையையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்து அலங்கரிக்க வேண்டும்
ஒவ்வொரு அறையையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்து அலங்கரிக்க வேண்டும். அப்போதுதான் அது மிகவும் அழகாக இருக்கும். வீட்டின் அழகு மொத்தத்தையும் அதிகரித்துக்காட்டும்.
ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு அலங்காரம்
ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வகை அலங்காரத்தை செய்யவேண்டும். அதே நேரத்தில் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகவும் வேண்டும். அனைத்து அறைகளும் ஒரே மாதிரி இருப்பது ஒருவகை என்றால், ஒவ்வொரு அறையும் ஒரு மாதிரியும், ஒவ்வொன்றுக்கும் தொடர்பு இருப்பதும் ஒரு வகை
சுவர் ஓவியங்கள்
உங்கள் வீட்டின் சுவர்களை ஓவியங்களால் நிரப்புங்கள். குறிப்பாக படுக்கை அறையில் ஒரு அமைதியான தோற்றத்தை தரும் ஓவியத்தை வரையலாம். சமையலறை மற்றும் சாப்பிடம் இடத்தில் அதற்கு ஏற்ற பொருட்களை வைத்து ஓவியம் வரையலாம். வரவேற்பறையில் பிரமாண்ட ஓவியங்களை வரையலாம். அது உங்கள் வீட்டின் அழகை மேலும் அதிகரிக்கும்.
மேலும் இதுபோன்ற வீட்டு அலங்கார குறிப்புக்களை நாங்கள் உங்களுக்கு அன்றாடம் வழங்கி வருகிறோம். இதுபோன்ற குறிப்புகளை படித்து உங்கள் வீட்டை அலங்கரித்தால் நல்லது. உங்கள் வீட்டை அலங்கரிக்க ஹெச்.டி தமிழுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்