Home Decors : வீட்டில் ஜன்னல்கள் மற்றும் சமையலறையை எப்படி அமைக்கலாம்? இதோ ஐடியாக்கள்!
Home Decors : வீட்டில் ஜன்னல்கள் மற்றும் சமையலறையை எப்படி அமைக்கலாம் என்று இங்கு சில தாகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. சிறிய வீட்டையாவது நமது வாழ்நாளில் கட்டிவிடவேண்டும் என்ற ஆவலோடுதான் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் பெரிய வீடு அல்லது சின்ன வீடு என எதில் வேண்டுமானாலும் வசிக்கலாம். ஆனால் அதை நீங்கள் எப்படி அலங்கரிக்கிறீர்கள் என்பதைப் பொருத்துதான் அந்த வீட்டின் அழகு உள்ளது. உங்களுக்கு தேவையான மற்றும் உபயோகமான பொருட்களை வைத்து உங்கள் வீட்டை அலங்கரிக்கவேண்டும். அப்போதுதான் அது தேவையற்ற இடத்தை அடைத்துக்கொள்ளாது.
ஒரு சிறிய அறை கூட சமையல் அறையாகவோ அல்லது படுக்கை அறையாகவோ அல்லது அலுவலமாகவோ மாற்றப்படலாம். அதற்கு அதற்கு அந்த் அறையை மாற்றுவது எப்படி என்று நீங்கள் கொஞ்சம் சிந்தித்தால் போதும். புத்திசாலித்தனமான திட்டமிடல், உங்களுக்கு தேவையானவற்றை சேகரித்து வைப்பதில் புத்திசாலித்தனம், தேவையான பர்னிச்சர்கள் இருந்தால் போதும் உங்கள் வீடு அழகாகும்.
வெளிச்சம் குறைவான, இடம் குறைவான வீட்டைக்கூட சரியாக திட்டமிட்டால் அழகு நிறைந்ததாக மாற்றமுடியும். சிறிய இடம் உங்களுக்கு பிரைவசி இல்லை என்று எண்ணினால், அறையை பிரிக்கும் டிவைடர்கள் போதும். நீங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்கிறீர்களா? அதற்கு மடித்து வைக்கும் டெஸ்க்குகளை பயன்படுத்துங்கள்.
இதை எங்கும், எப்படியும் பயன்படுத்தலாம். அதை நீங்கள் எதில் அமர்ந்துகொண்டும் பயன்படுத்தலாம். அந்த இடத்தை நீங்கள் ஒரு அலங்காரப் பொருள் அல்லது வண்ணத்திலே வேறுபடுத்தி காட்டிவிடலாம். அந்த இடமே எழிலாக காட்சிதரும். உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் சிறு சிறு மாற்றங்களே உங்கள் வீட்டை மேலும் அழகாக காட்டும். அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்களை பின்பற்றுங்கள்.
இந்தப்பகுதியில் நாம் வழக்கமாகவே உங்கள் வீட்டை அழகுபடுத்தும் குறிப்புகள் குறித்து பார்த்துவருகிறோம். இப்போது மேலும் இந்த குறிப்புகளும் உங்களுக்கு உதவக்கூடும்.
விளக்குகளை சுவற்றில் மாட்டுங்கள்
உங்களுக்கு தேவையான விளக்குகள் அல்லது அலங்கார விளக்குகள் எதுவாக இருந்தாலும், அதை சுவற்றில் மாட்டுங்கள். அது அழகாகவும் இருக்கும். வீட்டில் தேவையில்லாமல் இடத்தையும் அடைக்கது. நீங்கள் வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ளலாம். இதனால் தரை உங்களுக்கு காலியாக இருக்கும்.
சுவருடன் சேர்த்து செய்யவேண்டியது என்ன?
சுவருடன் நீங்கள் வார்ட்ரோப், டிரஸ்ஸிங் டேபிள் என அனைத்தையும் அமைத்துவிடலாம். இதுவும் உங்களுக்கு இடத்தை சேமிக்கும். இதற்காக நீங்கள் தனியாக பொருட்களை வாங்கவும் வேண்டாம். அவை தனியாக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கவும் வேண்டாம். புத்தக அலமாரிகள், பொருட்களை வைக்கும் அலமாரிகள் என அனைத்தையும் நீங்கள் சுவருடனே சேர்த்து அமைத்துவிடுவது நல்லது.
சமையலறை
நீங்கள் ஒரு சிறிய இடத்தில் கூட அமைத்துவிடலாம். தேவையான பொருட்களை வைப்பதற்கு ஒரு அறை, பொருட்களை அடுக்குவதற்கு அறை என இரு அலமாரிகளை அமைத்து, ஒரு நீளமாக பகுதியில் சிங்க, காய்கறிகள் நறுக்குமிடம். அதற்கு கீழே நாற்காலி போட்டுவிட்டால், அங்கேயே சாப்பிட்டும் முடித்துவிடலாம். ஒரு சிறிய அறையையே அழகானதாக அமைத்து விடலாம்.
ஜன்னல்கள்
உங்கள் வீட்டின் ஜன்னல்கள் விசாலமான ஜன்னல்களாக இருக்கட்டும். அவைதான் வீட்டிற்கு நல்ல வெளிச்சத்தையும், காற்றையும் கொண்டு வந்து சேர்க்கின்றன. இந்த விசாலமான ஜன்னல்கள் உங்கள் வீட்டை மேலும் அழகாக்கவும் செய்கின்றன. இவற்றின் மூலம் வெளியில் இருப்பது நன்றாகவே தெரியும். இது உங்கள் வீட்டுக்கு மேலும் அழகை அதிகரிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்