வீடு அலங்காரம் : உங்கள் வீடு மற்றும் தோட்டத்தை சாட் ஜிபிடியைப் பயன்படுத்தி எவ்வாறு மாற்றலாம்?
உங்கள் வீடு மற்றும் தோட்டத்தை சாட் ஜிபிடியைப் பயன்படுத்தி எவ்வாறு அழகுபடுத்தலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஏஐயுடன் உங்கள் வீட்டை அழகுபடுத்துங்கள்
நாம் இன்று டிஜிட்டலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். உணவு முதல் உங்கள் வீட்டில் உள்புறத்தை அழகுபடுத்துவது வரை என நீங்கள் ஏஐயின் உதவியுடன் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இப்போதை டிரெண்ட் என்னவென்றால், மக்கள் சாட் ஜிபிடியைப் பயன்படுத்தி, தற்போது தங்களின் வீடுகளை அழகுபடுத்திக்கொள்கிறார்கள். அது எப்படி என்று பார்க்கலாம். அதை எப்படி செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
சாட் ஜிபிடியுடன் உடனடி ஐடியாக்கள்
உங்கள் அறைகள், தோட்டம் அல்லது வீட்டின் நுழைவாயில் என அனைத்தின் தோற்றத்தை நீங்கள் மாற்றவேண்டும் என்றால், உங்களுகு சரியான வழிகாட்டல் தேவை. நீங்கள் அதற்கு சரியான கேள்விகளை சாட் ஜிபிடியிடம் கேட்கவேண்டும். நீங்கள் சில எளிய கேள்விகளைக் கேட்கலாம். நான் எவ்வாறு எனது அறையை பிரகாசமாகவும், நவீனமாகவும் மாற்ற முடியும்? அதற்கு ஒரு நொடியில் 10 ஐடியாக்களை சாட் ஜிபிடி கொடுக்கும்.
உங்கள் அறையின் புகைப்படம்
உங்கள் அறை அல்லது நீங்கள் மாற்ற விரும்பும் இடத்தின் புகைப்படத்தை பகிர்ந்தால் போதும். அதில் இந்த அறையை அழகுபடுத்திக்கொடு என்று கேட்டால் போதும். அது உங்களுக்கு வழிகாட்டும். நீங்கள் உங்கள் படுக்கையறையில் புகைப்படத்தை எடுத்து பகிர்ந்து, இந்த படுக்கையறையை நீங்கள் இன்னும் அழகானதாகவும், தாராளமானதாகவும் மாற்ற என்ன செய்யவேண்டும். என்று கேட்டால் போதும். உங்களுக்கு உடனே ஐடியாக்கள் கிடைக்கும்.