Home Decors Idea : சிறிய வீட்டைக்கூட அலங்கரித்தால், பிரமாண்டமாக்கலாம்! இதோ இந்த யோசனைகளை பின்பற்றுங்கள்!
Home Decor Ideas : சிறிய வீட்டைக்கூட அலங்கரித்தால், பிரமாண்டமாக்க முடியும். கொஞ்சம் பட்ஜெட்டிலே நிறைய கிரியேட்டிவிட்டி இருக்கவேண்டும். இதோ இந்த யோசனைகளை பின்பற்றுங்கள்.
வீடு என்பது அனைவரின் கனவு, இன்றைய காலத்தில் சிறிய வீடு கட்டுவது என்பது கடினமாவிட்டது. அந்த சிறிய வீட்டைக்கூட சிம்பிள் அலங்காரங்களால் நீங்கள் பிரமண்டம் ஆக்கலாம். சிறியதாக வீடுகட்டி, அதில் நீங்கள் உங்கள் கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தினாலே போதும், அதற்கு இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.
பெரிய ஓவியங்கள்
உங்களின் வரவேற்பறை சிறியதாக உள்ளதா, அதில் பெரிய ஓவியங்களை வரைந்து வைத்திருங்கள். அது உங்களின் வரவேற்பறையை பிரமாண்டமானதாக்கிவிடும்.
ஜன்னல்
விசாலாமான ஜன்னல்கள் வீட்டுக்கு போதிய வெளிச்சத்தைக் கொடுக்க முடியும். ஜன்னல் இருக்கும் இடத்தைக் கூட நீங்கள் பெரிதாக வடிவமைத்து பயனுள்ள இடமாக மாற்ற முடியும். வீட்டுக்குள் ஜன்னல் பகுதியில் ஒரு சிட்அவுட்டோ அல்லது படுக்கை அளவுக்கோ மேடை அமைத்து அதையும் பயனுள்ளதாக மாற்றலாம்.
வட்ட வடிவம்
வழக்கமான உங்கள் ஹாலில் சோபாக்கை நேராக போட்டிருப்பீர்கள். ஆனால், அதையே வட்டமாக வடிவமைத்துப் பாருங்கள். அது உங்கள் சிறிய வீட்டிற்கு கூட எலீட் லுக்கை தரும்.
பர்னிச்சர்கள் (வீட்டு உபயோகப்பொருட்கள்)
நீங்கள் வீட்டில் உபயோகிக்கும் பர்னிச்சர்கள், கொஞ்சம் விலையில் கூட நன்றாக தேர்ந்தெடுத்து வாங்க முடியும். அதுபோல் வீட்டை அலங்கரித்தால் போதும், உங்கள் வீடு சிறப்பாக இருக்கும்.
கண்ணாடி கதவுகள்
உங்கள் வீட்டில் சில இடங்களில் கண்ணாடி கதவுகளை வைத்தால், வீட்டுக்கு பணக்காரத் தோற்றம் கிடைக்கும். அந்த கண்ணாடியிலும் சில அலங்காரங்கள் இருந்தால் மிகவும் நல்லது. பால்கனிகளில் கண்ணாடிகள் வைத்து அலங்காரம் செய்யலாம். வீட்டில் சுவர்களுக்கு பதில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கண்ணாடி வைத்து அலங்கரிக்கலாம்.
மரம்
வீட்டில் உபயோகிக்கு பர்னிச்சர்களை பெரும்பாலும் மரத்திலும் அல்லது வேறு ஃபேன்சி பொருட்களிலுமே வாங்கிக்கொள்ளுங்கள். பர்னிச்சர்களின் டோனுடன், வீட்டு சுவரின் பெயின்ட் ஒத்துப்போகவேண்டும். அப்போது வீட்டுக்கு இன்னும் ரிச் லுக் கிடைக்கும்.
தரைக்கு பெயின்ட்
தரையை நீங்கள் டைல்ஸ் போன்றவற்றின் மூலம் அலங்கரிப்பதைவிட, ஒவ்வொரு இடத்துக்கு ஏற்றவாறு பெயின்ட் அடித்தீர்கள் என்றாலே போதும். உங்கள் வீடு நன்றாக இருக்கும்.
கர்னட்கள்
உங்கள் வீட்டில் ஒவ்வொரு அறையில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் வழி, தடுப்புகள் என அனைத்துக்கும் கர்டன்களை உபயோகித்தால் நன்றாக இருக்கும். அந்த கர்டன்களும் விதவிதமாக இருத்தல் கூடுதல் சிறப்பு.
சமையலறையில்
சமையலறையில் நீங்கள் பாத்திரங்களை மாட்டிவைக்க நிறை ஆணிகளை கொஞ்சம் கிரியேட்டிவாக அடித்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு பாத்திரங்களை எளிதாக எடுக்கவும் உதவும். மேலும் அதுவே ஒரு அலங்காரம்போல் இருக்கும். இதை நீங்கள் சாப்பிடும் அறையிலும் பின்பற்றலாம்.
சுவர்
சுவரில் முழுவதும் பெயின்ட் அடிக்காமல், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஓவியம் வரைவது. அது பெட் ரூம் எனில், கட்டில் போடும் இடத்தை மட்டும் தேர்ந்தெடுத்து ஓவியம் அல்லது பெரிய ஸ்டிக்கர் ஒட்டலாம். உங்கள் வீட்டின் லுக்கே ரிச்சாகிவிடும்.
கார்னர்
கார்னர் சுவர்களில் அழகிய ஓவியங்கள் அல்லது உங்கள் குடும்ப புகைப்படங்கள் என மாட்டியும் உங்கள் வீட்டி அலங்கரிக்கலாம்.
சுவர்களை மூடலாம்
உங்கள் சுவர்களில் பெயின்ட் மட்டும் அடிக்காமல் அதை லெதர் வைத்து மூடலாம். அது உங்கள் வீட்டுக்கு ரிச் லுக் கொடுக்கும். இதை குறிப்பிட்ட இடங்கள், குறிப்பாக மாடிப்படி ஏறும் இடம் போன்ற ஒரு சில இடங்களில் செய்யும்போது உங்கள் வீட்டின் லுக்கும் அதிகரிக்கும். செலவும் குறையும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்