HMPV Virus : பற்றிப்பரவும் ஹெஎம்பிவி அறிகுறிகள் இதுதான்! நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hmpv Virus : பற்றிப்பரவும் ஹெஎம்பிவி அறிகுறிகள் இதுதான்! நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?

HMPV Virus : பற்றிப்பரவும் ஹெஎம்பிவி அறிகுறிகள் இதுதான்! நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?

Priyadarshini R HT Tamil
Jan 10, 2025 12:15 PM IST

ஹெச்எம்பிவி வைரசின் அறிகுறிகள் என்னவென்று பாருங்கள்.

HMPV Virus : பற்றிப்பரவும் ஹெஎம்பிவி அறிகுறிகள் இதுதான்! நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?
HMPV Virus : பற்றிப்பரவும் ஹெஎம்பிவி அறிகுறிகள் இதுதான்! நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?

அறிகுறிகள்

இருமல் – வறண்டது முதல் சளியுடன் கூடிய இருமல், சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தால் வரும்.

தசைகளில் வலி – வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், வீக்கம் மற்றும் அழுத்தம் காரணமாக வரும்.

தலைவலி – மிதமானது முதல் கடுமையானது வரையிலான தலைவலி ஏற்படும். இது வைரஸ் தொற்றும் மற்றும் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதால் வரும்.

சோர்வு – உடல் மிகவும் சோர்வடைந்து போவதால் ஏற்படும். உடலில் ஆற்றல் இல்லாமல் இருப்பதும் இதற்கு காரணமாகும்.

மூச்சுத்திணறல் – மூச்சுக்குழாய்களில் உள்ள வீக்கத்தால் வரும்.

தொண்டையில் புண் – தொண்டையில் எரிச்சல் ஏற்படுவதால் வரும்.

காய்ச்சல் – உடலில் உங்களின் நோய் எதிர்ப்புத் திறன் வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுகிறது என்பதை காட்டுவதால் ஏற்படுகிறது.

மூக்கு ஒழுகுதல் – மூக்கில் சளி அதிகம் ஏற்பட்டு, மூச்சுத்திணறல், மூக்கு ஒழுகுவது போன்றவை ஏற்படும்.

பசியின்மை – பசியின்மை எந்த தொற்று ஏற்பட்டாலும் உங்கள் உடலில் தோன்றும் ஒரு அறிகுறியாகும்.

வீசிங் - மூச்சு வாங்குவது மற்றும் மூச்சுத்திணறல் போன்றவையும் உங்களுக்கு எந்த தொற்றுகள் ஏற்பட்டாலும் வரும்.

Human Metapneumovirus – HMPV என்றால் என்ன?

Human Metapneumovirus – HMPV என்பது பொதுவாகவே கீழ் மற்றும் மேல் சுவாச மண்டலத்தில் தொற்றுக்களை ஏற்படுத்தும் வைரஸ். சளி போன்ற தொல்லைகளை தரக்கூடியது. இது சீசனில் வரக்கூடியது. பனிக்காலம் முதல் வசந்த கால துவக்கம் வரை இருக்கும். இது சுவாசம் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய மற்ற ஆர்எஸ்வி (Respiratory Syncytial Virus) போன்றதுதான்.

இது புது வைரசா?

ஹெச்எம்பிவி வைரஸ் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ். இது முதன்முதலில் 2001ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதான் அமெரிக்க தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வைரஸ் 1958ம் ஆண்டுகள் முதல் புழக்கத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் நிமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ். ஆர்எஸ்வியுடனும் ஒத்துப்போகும்.

கோவிட்டும் இதுவும் ஒன்றா?

ஆமாம் கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 என்பது தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் ஆகும். இதற்கு காரணம் சார்ஸ் கோவி 2 என்ற வைரஸ் ஆகும். இந்த ஹெச்எம்பிவி வைரசும், சார்ஸ் கோவி 2 வைரசும் ஒன்றுதான்.

இரண்டுமே அனைத்து வயதினரிடையே சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள், பெரியவர்கள், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவில்லாதவர்கள் என இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது தான்.

அறிகுறிகள் ஒன்றுதான். ஹெச்எம்பிவி வைரசிலும் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படுகிறது. இவையெல்லாம் கோவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு வரும் அறிகுறிகள் தான்.

இரண்டுமோ பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றும் வியாதிதான். இருமல், தும்மல் மற்றும் அவருடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால் ஏற்படுகிறது. இது பொருட்களை தொடுவது அல்லது வைரஸ் இருக்கும் இடத்தில் கையை வைத்துவிட்டு மூக்கு அல்லது வாய் அல்லது கண்களில் கையை வைப்பதால் ஏற்படுகிறது.

இரண்டுமே பனிக்காலத்தில் பற்றிப்பரவக்கூடிய வைரஸ்கள்தான். ஹெச்எம்பிவி வைரஸ் ஆண்டு முழுவதும் பரவக்கூடியது என்றாலும், அமெரிக்காவில் பனிக்காலத்தில்தான் அதிகம் ஏற்பட்டது.

தடுப்பு மருந்து உள்ளதா?

தற்போது இந்த வைரஸ்க்கு எந்த தடுப்பு மருந்தும் இல்லை. வைரஸ்க்கு எதிரான சிகிச்சையும் உதவாது. நீங்கள் இந்த வைரஸை எப்படி தடுக்கலாம்.

உங்கள் கைகளை சோப் தேய்த்து கழுவுங்கள்.

கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை கைகளை கழுவாமல் தொடாதீர்கள்.

பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்த்துவிடுங்கள்.

சளி இருப்பவர்கள் எப்போதும் மாஸ்க் அணிந்துகொள்ளவேண்டும். இருமும்போதும், தும்மும்போதும் மூக்கை மூடிக்கொள்ளவேண்டும்.

சாப்பாடு பாத்திரங்கள் மற்றும் கப்களை பகிர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.