தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Bicycle Day 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்

World Bicycle Day 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்

Marimuthu M HT Tamil
Jun 03, 2024 06:59 AM IST

World Bicycle Day 2024: உலக மிதிவண்டி தினம் ஜூன் 3ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில், உலக மிதிவண்டி தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள் குறித்துக் காண்போம்.

World Bicycle Day 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்
World Bicycle Day 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள் (Unsplash)

ட்ரெண்டிங் செய்திகள்

ஒவ்வொரு நாளும் மிதி வண்டி, ஓட்டுவது இதய ஆரோக்கியத்தையும் தசை வலிமையையும் மேம்படுத்துகிறது. மிதிவண்டி ஓட்டுவது இயற்கையில் மிகவும் சுதந்திரமான உணர்வைத் தரக்கூடியது. இது ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாக உணர வைக்கிறது மற்றும் மனநிலையை உயர்த்துகிறது. 

இது காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாமல் உரிய இடங்களை அடைய உதவுகிறது. சைக்கிள் ஓட்டுதல் என்பது ஒரு சிறந்த போக்குவரத்து வழிமுறையாகும். அத்துடன் நமது கீழ் உடல் உடற்பயிற்சியை ஒரே நேரத்தில்  சரிசெய்வதற்கான ஒரு வழியாகும். 

ஒவ்வொரு ஆண்டும், உலக மிதிவண்டி தினம்(உலக சைக்கிள் தினம்), மிதிவண்டி ஓட்டுதலின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிலையான வாழ்க்கை முறையை செயல்படுத்த அதிகமான மக்களை, இந்தப் போக்குவரத்து முறையை எடுக்க வலியுறுத்துவதற்கும் அனுசரிக்கப்படுகிறது. உலக மிதிவண்டி தினத்தின் சிறப்பு நாளைக் கொண்டாட நாம் தயாராகும் போது, நாம் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி அறிவோம். 

உலக மிதிவண்டி தின தேதி:

ஒவ்வொரு ஆண்டும், உலக மிதிவண்டி தினம் ஜூன் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, உலக சைக்கிள் தினம் திங்கட்கிழமையான இன்று வந்துள்ளது. 

உலக மிதிவண்டி தின வரலாறு:

உலக சைக்கிள் தினத்தை கொண்டாடும் யோசனையை முதன்முதலில் அமெரிக்காவில் பணிபுரிந்த போலந்து-அமெரிக்க சமூக விஞ்ஞானி பேராசிரியர் லெஸ்ஜெக் சிபில்ஸ்கி முன்மொழிந்தார். ஒவ்வொரு ஆண்டும் உலக சைக்கிள் தினத்தை கொண்டாட்டத்தை, ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க அவர் அடிமட்ட அளவிலான பிரசாரத்தைத் தொடங்கினார். 

இறுதியில் அவருக்கு துர்க்மெனிஸ்தான் மற்றும் 56 பிற நாடுகளின் ஆதரவு கிடைத்தது. ஏப்ரல் 2018இல், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்தது.

உலக மிதிவண்டி தின முக்கியத்துவம்:

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை, தங்களது அதிகாரப் பூர்வ இணையதளத்தில் கூறியதாவது, 

"உலக மிதிவண்டி தினம், மிதிவண்டியைப் பயன்படுத்துவதன் நன்மைகளுக்காக கவனத்தைப் பெறுகிறது. எளிய, மலிவு, சுத்தமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான போக்குவரத்து வழிமுறையாகும். 

மிதிவண்டி தூய்மையான காற்று மற்றும் வாகன நெரிசலைக் குறைக்க உதவுகிறது மற்றும் கல்வி கிடைப்பதில் சுணக்கம் இருப்பவர்கள், மருத்துவ சிகிச்சையில் சிக்கல் இருப்பவர்கள் மற்றும் பிற சமூக சேவைகள் எளிதில் கிட்டாத மக்கள் அணுகக்கூடிய வகையில் மிதிவண்டி இருக்கிறது. 

மிதிவண்டியைப் பயன்படுத்துவது உலகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். சமத்துவமின்மையைக் குறைக்கும். அதே நேரத்தில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும். ஒரு நிலையான போக்குவரத்து அமைப்பு நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு முக்கியமானது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மிதிவண்டி அறிந்ததும் அறியாததும்:

இந்த மிதிவண்டியை கார்ல் வொன் டிராவிஸ், கிர்க்பட்ரிக் மேக்மில்லன் ஆகியோர் 19ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக உருவாக்கியிருந்தனர். 

மிதிவண்டியை அதிகம் பயன்படுத்துவதில், 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, பெல்ஜியம் என்ற நாடு முதல் இடத்தில் இருக்கிறது. அதன்பின், டென்மார்க், ஸ்லோவேனியா, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலையை எட்டியுள்ளன.

WhatsApp channel

டாபிக்ஸ்