தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hing Ajwain Water : சாப்பிட்ட பின் இந்த தண்ணீரை மட்டும் பருகிப்பாருங்கள்! உங்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும்!

Hing Ajwain Water : சாப்பிட்ட பின் இந்த தண்ணீரை மட்டும் பருகிப்பாருங்கள்! உங்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும்!

Priyadarshini R HT Tamil
May 26, 2024 12:06 PM IST

Hing Ajwain Water : சாப்பிட்ட பின்னர் ஓமம் மற்றும் பெருங்காயம் கலந்த தண்ணீரை மட்டும் பருகினால் போதும். உங்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும்.

Hing Ajwain Water : சாப்பிட்ட பின் இந்த தண்ணீரை மட்டும் பருகிப்பாருங்கள்! உங்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும்!
Hing Ajwain Water : சாப்பிட்ட பின் இந்த தண்ணீரை மட்டும் பருகிப்பாருங்கள்! உங்கள் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும்!

ட்ரெண்டிங் செய்திகள்

பெருங்காயம், ஓமம் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

பெருங்காயம் மற்றும் ஓமம் தண்ணீரின் நன்மைகள்

பெருங்காயம் மற்றும் ஓமம் தண்ணீர் என்பது இந்தியாவின் பராம்பரிய பானம். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த நீரை சாப்பிட்டவுடன் பருகவேண்டும். அப்படி செய்தால், செரிமானத்தை போக்கும். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். நீங்கள் சாப்பிட்டபின் ஓமம், பெருங்காயம் கலந்த தண்ணீரை பருகுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பாருங்கள்.

கொழுப்பை கரைக்க உதவுகிறது

உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்களை உடைத்து உடலுக்கு தேவையானவற்றை வழங்கி, தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. எனவே சாப்பிட்டவுடன், பெருங்காயம் மற்றும் ஓமம் ஊறவைத்த தண்ணீரை பருகுவது உங்கள் உடலில் வளர்சிதையை அதிகரிக்கும். உடல் எடையை முறையாக பராமரிக்க உதவும்.

செரிமானத்தை அதிகரிக்கும்

ஓமம், பெருங்காயம் கலந்த தண்ணீர் பருகும்போது, அது உங்கள் உடலில் செரிமானத்தை அதிகரிக்க உதவும். ஏனெனில் இவையிரண்டும் செரிமானத்துக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். வயிறு உப்புசம், செரிமானமின்மை, வாயுத்தொல்லை என அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது. செரிமான எண்சைம்களை தூண்டி, செரிமான ஆரோக்கியத்தை பாதுகாத்து, குடலை நன்றாக வைத்துக்கொள்ளும்.

குடலை இலகுவாக்குகிறது

பெருங்காயத்தூள், ஓமம் தண்ணீர் இயற்கை முறையில் சிகிச்சை கொடுக்கிறது. இது பல்வேறு வாயுத்தொலை நோய்களுக்கு தீர்வு கொடுக்கிறது. ஆசிட் பிரச்னைகள், வயிற்று வலி ஆகியவற்றுக்கு தீர்வு கொடுக்கிறது. இது வயிற்றை ஆற்றுப்படுத்துகிறது.

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது

பெருங்காயம் மற்றும் ஓமத்தில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மூக்கு மற்றும் நெஞ்சில் ஏற்படும் அடைப்பை சரிசெய்கிறது. வீக்கத்தை குறைக்கிறது. சுவாசத்தை சரிசெய்கிறது. சுவாசம் தொடர்பான ஆஸ்துமா, இருமல் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

வாயு மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றை குறைக்கிறது

ஓமம் மற்றும் பெருங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாயுத்தொல்லைகளை சரிசெய்கிறது. வயிற்றில் வாயு உருவாவதை தடுக்கிறது. செரிமான பாதையை சீர் செய்கிறது. வயிறு அசவுகர்யங்களைப் போக்குகிறது மற்றும் சாப்பிட்டவுடன் ஏற்படும் வயிறு உப்புசத்தை போக்குகிறது.

மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது

பெருங்காயம் மற்றும் ஓமம் தண்ணீர், அதன் வலியைப் போக்கும் தன்மைக்காக அறியப்படுகிறது. இதை தினமும் பருகும்போது, மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்த பெண்களுக்கு உதவுகிறது. இது வலியைப்போக்கும் இயற்கை நிவாரணியாக உள்ளது.

ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது

ஓமம் மற்றும் பெருங்காய தண்ணீரை பருகுவது இயற்கை கழிவுநீக்கியாகும். செரிமான மண்டலத்தை சுத்தம் செய்கிறது. உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை அதிகரிக்கிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை முறையாக உறிஞ்சுகிறது.

ஆசிட் ரிஃப்ளக்ஸை குறைக்கிறது

ஓமம், பெருங்காய தண்ணீர், வயிற்றில் ஆசிட் உருவாவதை தடுக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள அசிடிட்யைக் கட்டுப்படுத்துகிறது. இது ஆசிட் தொல்லையால் அவதிப்படும் நபர்களுக்கு சிறந்த நிவாரணம் கொடுக்கிறது. சாப்பிட்டவுடன் ஏற்படும் நெஞ்செரிச்சலைப் போக்குகிறது.

பெருங்காயம் மற்றும் ஓமம் தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் ஒரு ஸ்பூன் ஓமத்தை சேர்க்கவேண்டும். அதில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூளை சேர்க்கவேண்டும். இதை சிறிது நேரம் கொதிக்கிவிடவேண்டும். 

பின்னர் சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கொதிக்கவிடவேண்டும். பின்னர் இதை வடிகட்டி இளஞ்சூட்டில் பருகவேண்டும். இதில் உங்களுக்கு தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பருகலாம். இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்