தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  High Cholesterol : ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைகிறதா? இந்த அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாதீர்கள்!

High Cholesterol : ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைகிறதா? இந்த அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாதீர்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 05, 2024 02:08 PM IST

High Cholesterol : உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதற்கான 10 எச்சரிக்கும் அறிகுறிகள் இவைதான்.

High Cholesterol : ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைகிறதா? இந்த அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாதீர்கள்!
High Cholesterol : ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைகிறதா? இந்த அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாதீர்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

கூச்ச உணர்வு

உங்கள் உடலில் அதிக கொழுப்பு சேர்த்துவிட்டது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று, உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, அதனால் உடல் உறுப்புகள் மறத்துப்போவது மற்றும் கூச்ச உணர்வு ஏற்படுவது, கை – கால்கள் சோர்ந்து போவது அல்லது நடுங்குவது போன்ற உணர்வுகள் ஏற்படம். இது உங்கள் உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதை காட்டுகிறது.

மூச்சுத்திணறல்

திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுவது, குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போது மூச்சுத்திணறுவது, ரத்தக்குழாயில் குறிப்பாக தமனி சுருங்கிவிட்டால் ஏற்படுவது. இது கொழுப்பு உங்கள் உடலில் அதிகரித்தால் தோன்றுவது ஆகும். இதற்கு அர்த்தம், இதயத்துக்கு குறைவாக ஆக்ஸிஜன் கிடைக்கிறது என்பதாகும்.

தொடர் தலைவலி

உங்கள் உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டால், அது வாஸ்குலர் மாற்றங்களுடன் தொடர்புடையது. இதனாலும் அடிக்கடி தலைவலி ஏற்படலாம். குறிப்பாக ஒற்றைத்தலைவலி உண்டாகலாம். இந்த மாற்றங்களால், மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, தலைவலிக்கான அறிகுறிகள் ஏற்படலாம்.

சருமம் மஞ்சளாவது

உங்கள் சருமத்தில் மஞ்சள் படலம் படரத்துவங்கும். அதற்கு மருத்துவத்தில் சென்தோமஸ் என்று பெயர், உங்கள் கண்கள், கைமூட்டு, கால் மூட்டு போன்ற இடங்களில் மஞ்சள் தட்டத்துவங்கும். இதுபோல் ஏற்படுவது உங்கள் உடலில் அதிக கொழுப்பு அதிகரித்துவிட்டது என்பதை காட்டுவதாகும். உங்கள் சருமத்தின் அடிப்புறத்திலும் கொழுப்பு தங்குவதை இது சுட்டிக்காட்டுகிறது.

சென்தாலஸ்மா

கண் இமைகளில் மஞ்சள் படலம் படிவதுதான் சென்தாலஸ்மா என்று அழைக்கப்படுகிறது. இதுவும் உடலில் அதிக கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. இது உடலில் கொழுப்பு அதிகரித்தால் ஏற்படும். உங்கள் உடலில் கொழுப்பு சரியான முறையில் இல்லை என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

வயிறு உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறு

நீண்ட காலம் வயிறு உப்பிக்கொள்வது போன்ற உணர்வு, செரிமானக்கோளாறு மற்றும் சாப்பிட்டபின் வயிறுவலி போன்றவை ஏற்படுவதும், உடலில் அதிகரித்துவிட்ட கொழுப்பால் ஆகும். உடலில் அதிகமாகும் கொழுப்பு கல்லீரல் கொழுப்பை கரைக்கும் வேலையை பாதிக்கிறது.

நெஞ்சு வலி

நெஞ்சு வலி, இறுக்கம் அல்லது அசவுகர்யம், குறிப்பாக உடற்பயிற்சியின்போது ஏற்படுவது, இதயம் குறைவான ரத்தத்தை பெறுகிறது என்பதற்கான அறிகுறியாகும். இது சுருங்கிய தமனிகளால் ஏற்படுகிறது. இது அதிக கொழுப்பின் பொதுவான ஒரு அறிகுறியாகும்.

சோர்வு மற்றும் மயக்கம்

உங்களுக்க சோர்வாகவோ அல்லது மயக்கமாகவோ இருந்தால், போதிய ஓய்வு எடுத்தப்பின்னரும், தொடர்ந்து சோம்பல் உணர்வு தோன்றினால், இது உங்கள் உடலில் உள்ள அதிக கொழுப்பு உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகளவு சேதப்படுத்தியதை காட்டுகிறது. அது உங்கள் உடலின் பாகங்கள் மற்றும் திசுக்களை ஆக்ஸிஜன் சென்று சேர்வது கடினமாக உள்ளது என்பதை காட்டுகிறது.

கவனிக்க முடியாமல் போவது மற்றும் நினைவாற்றல் குறைவது

மூளைக்குச் செல்லக்கூடிய தமனிகள் சுருங்குவது, உயர் கொழுப்புடன் தொடர்புடையது. இதனால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது. இதனால் நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் மறதி, எதையும் கவனிக்கமுடியாமல் போவது, கவனச்சிதறல், தடுமாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஆண்களுக்கு விறைப்பு தன்மை குறைவு

ஆண்களுக்கு பிறப்புறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவது, உடலில் அதிக கொழுப்பு இருந்தால் ஏற்படுகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உங்களின் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு பிரச்னைகளுக்கான துவக்கமாகவும் உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்