Carrot Puree: குழந்தைக்கு கேரட் ப்யூரி கொடுக்க போறீங்களா? எப்படி செய்வது பாருங்க
கேரட்டில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. அவை குழந்தைகளின் சாதாரண குடல் இயக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு முதலில் கேரட் கொடுப்பது ஒரு சத்தான உணவு. இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. அதனால் உடலில் அது வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.
வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும் செய்கிறது. கேரட்டில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. அவை குழந்தைகளின் சாதாரண குடல் இயக்கத்திற்கு உதவியாக இருக்கும்.
கேரட் ப்யூரி செய்வது எப்படி?
- கேரட்டை தோலுரித்து நறுக்கவும். கேரட் துண்டுகளை இட்லி தட்டு அல்லது ஸ்ட்ரீமரில் வேகவைக்கவும்.
- சமைத்த கேரட்டை ஒரு பிளெண்டர் அல்லது மிக்ஸியில் மாற்றவும். கேரட்டை நன்றாக ப்யூரியாக மிகவும் மென்மையாக்க அரைக்கவும்.
- மென்மையான வரை கலக்கவும். அத்துடன் தாய்ப்பால், ஃபார்முலா பால் அல்லது தண்ணீரை சேர்க்கவும்.
- கேரட் ப்யூரியை ஆறவிட்டு உடனடியாக குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். கேரட் ப்யூரியை 3 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க: சத்தான கீரை தோசை வித் சுவையான முள்ளங்கி சட்னி - குழந்தைகள் 6 மாதங்கள் வரை பால் மட்டுமே குடித்து வளர்ந்து இருப்பார்கள். புதியதாக பால் இல்லாமல் திட உணவு முதல் வாரத்தில் கொடுப்பதால் கேரட் பியூரி கட்டிகள் இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும்.
- தண்ணீர் பயன்படுத்துவதற்கு பதிலாக ஊட்டச்சத்துக்களுக்கு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பாலை பயன்படுத்துவது நல்லது (வேகவைக்க அல்லது கொதிக்க வைக்கும் செயல்முறைக்கு தண்ணீர் பயன்படுத்தலாம்).
குழந்தைகள் திட உணவு சாப்பிட தயாராக இருப்பதை எப்படி அறிவது?
தாங்களாகவே உட்கார முடிந்தவுடன்
உங்கள் குழந்தை திட உணவுகளை தொடங்குவதற்கு முன் குறைந்தபட்சமாக அவர்களால் உட்கார முடியுமா? என்று பார்க்க வேண்டும்.
கழுத்து கட்டுப்பாடு
உணவை குழந்தைகள் பாதுகாப்பாக விழுங்குவதற்கு, தலையை நிலையாக நிமிர்ந்தும் வைத்திருக்கும் திறன் மிக முக்கியமானது. உங்கள் குழந்தை 6 மாதங்களில் உட்கார்ந்து தலையை உயர்த்திப் பிடிக்க முடியாவிட்டால், கழுத்து தசைகளை வலுவடைய இன்னும் நேரம் தேவைப்படுகிறது. அப்படி இல்லாவிட்டால் சற்று நேரம் தேவைப்படும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க: பீட்ரூட்டில் இப்படி ஒரு பொரியல்
பொம்மைகளை வாய்க்கு கொண்டு செல்லுதல்
உங்கள் குழந்தை தனது பொம்மைகளையோ அல்லது பாட்டிலையோ வாயில் கொண்டு வருவதில் மிகவும் திறமையானவராக இருந்தால், சாப்பிடுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
உங்கள் குழந்தை மேல் கூறிய விஷயங்களைச் செய்தால், குழந்தை சுகாதார நிபுணரிடம் பேசி, அவர்களுக்கு எப்படி? எப்போது? திட உணவை கொடுக்க தொடங்கலாம் என்று கேட்டு தெரிந்து கொள்வோம்.
ஆறு மாதங்களில் உணவுகளை அறிமுகப்படுத்திய பிறகும், நீங்களும் உங்கள் குழந்தையும் விரும்பும் வரை, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்வது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு மற்றும் இணையத்தில் காணப்படும் தகவல்கள், ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்

டாபிக்ஸ்