Tamil News  /  Lifestyle  /  Here Is The Tips For Best Sleep

Tips for Good Sleep: நல்லா தூங்கணுமா... இதப் படிங்க முதல்ல

I Jayachandran HT Tamil
Jan 25, 2023 10:29 PM IST

ஆழ்ந்த தூக்கத்துக்கான வழிமுறைகள் குறித்தும் தூக்கமின்மையால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் இங்கு காணலாம்.

ஆழ்ந்த தூக்கம்
ஆழ்ந்த தூக்கம்

ட்ரெண்டிங் செய்திகள்

உலக மக்கள் தொகையில் 10-30 சதவீதம் பேர் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது படிப்படியாக இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது தெளிவாகிறது. இது நாள்பட்ட நோய்கள் மற்றும் இருதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு 40 முதல் 69 வயதுடைய 5 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தியது. 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்கள் அல்லது 9 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்கள் இதய நோய் மற்றும் இறப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற ஆய்வுகள் தூக்கமின்மை உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய், பக்கவாதம் மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது என்று காட்டுகின்றன.

ரத்தத்தில் அழற்சி சைட்டோகைன்களின் அளவு அதிகரித்தால், தூக்கமின்மை உள்ளவர்களுக்கு இதயநோய் மற்றும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மூத்த இதயநோய் நிபுணர் டாக்டர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் தூக்கமின்மை ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு வழிவகுக்கும் என்பது தெளிவாகிறது. இதன் விளைவாக, அதிக மன அழுத்தம், குறைந்த ஆற்றல், குறைந்த உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமற்ற உணவு தேர்வுகள் ஆகியவை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.

WhatsApp channel