Pongal Special : ‘பொங்கலோ பொங்கல்’ கிராமத்தில் செய்யும் பால் பொங்கல் மற்றும் இனிப்பு பொங்கல் ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pongal Special : ‘பொங்கலோ பொங்கல்’ கிராமத்தில் செய்யும் பால் பொங்கல் மற்றும் இனிப்பு பொங்கல் ரெசிபி இதோ!

Pongal Special : ‘பொங்கலோ பொங்கல்’ கிராமத்தில் செய்யும் பால் பொங்கல் மற்றும் இனிப்பு பொங்கல் ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil
Jan 12, 2025 12:50 PM IST

கிராமத்து ஸ்டைல் பால் பொங்கல் மற்றும் இனிப்புப் பொங்கல் செய்வது எப்படி?

Here is the recipe for milk Pongal and sweet Pongal made in the village of 'Pongalo Pongal'!
Here is the recipe for milk Pongal and sweet Pongal made in the village of 'Pongalo Pongal'!

சூரிய பகவான் வடக்கு நோக்கிய தனது பயணத்தை துவக்கும் நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது உத்ரநாராயணா என்று அழைக்கப்படுகிறது. அன்று மகர ராசியில் சூரியன் நுழைகிறார். பின்னர் பொங்கல் என்று வந்தது. அதற்கு பொங்குதல் மற்றும் வேகவைப்பது என்று பொருள். அன்று பொங்கல் என்ற உணவு சமைக்கப்படுவதால் அப்படி அழைக்கப்படுகிறது. பொங்கல் அன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் தயாரிக்கப்படுகிறது. மேலும் அன்று வாசலில் கோலங்கள் போட்டு வர்ணிக்கப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து மாவிலை தோரணங்கள் கட்டி மக்கள் அலங்கரிக்கிறார்கள். பொதுவாக பொங்கல் என்றால் பால் பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என்ற இரண்டு வகை பொங்கல்தான் வைக்கப்படும். ஆனால் நீங்கள் இந்த ஆண்டு வித்யாசமாக கருப்பட்டியில் பொங்கல் செய்து பாருங்கள்.

கிராமத்தில் செய்யும் பால் பொங்கல் மற்றும் இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்று பாருங்கள்.

பால் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்

பால் – ஒரு கப்

பச்சரிசி – ஒரு கப்

தேங்காய் துருவல் – கால் கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் இரண்டும் சேர்த்து மூன்று கப் அளவுக்கு கொதிக்கவிடவேண்டும். அதில் அரை மணி நேரம் ஊறவைத்த பச்சரிசியை சேர்த்துக்கொள்ளவேண்டும். அரிசி நன்றாக வெந்தவுடன், உப்பு மற்றும் தேங்காய் துருவல் தூவி இறக்கவேண்டும். இதுதான் பொங்கல் பண்டிகையன்று கிராமப்புறத்தில் செய்யும் பால் பொங்கல்.

இனிப்பு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு கப்

பால் – ஒரு கப்

வெல்லம் – ஒரு கப்

நெய் – கால் கப்

முந்திரி – ஒரு கைப்பிடியளவு

திராட்சை – ஒரு கைப்பிடியளவு

ஏலக்காய் – 2

தேங்காய் துருவல் – கால் கப்

உப்பு – சிட்டிகை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் மூன்று கப் அளவு இருக்குமளவுக்கு கலந்து கொதிக்கவிடவேண்டும். அதில் பச்சரிசியை சேர்த்து அது வெந்தவுடன், வெல்லத்தை சேர்க்கவேண்டும். பொங்கல் கெட்டியாகி வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறவேண்டும். ஏலக்காய்ப் பொடி, உப்பு மற்றும் நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் தூவி இறக்கினால், சூப்பர் சுவையான கிராமப்புறத்து இனிப்புப் பொங்கல் தயார்.

இந்த இரண்டு பொங்கலும் கிராமப்புறத்தில் செய்யப்படும் பொங்கல் ஆகும். இன்றும் பொங்கல் நாளில் இதுபோல பால் பொங்கலை வாசலில் வைத்துதான் சூரியனுக்கு படைக்கிறார்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.