வெண்டைக்காயில் இப்படி ஒரு வித்யாசமான பொரியல்; செம்ம டேஸ்டியான ரெசிபி இதோ! அனைவருக்கும் பிடிக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெண்டைக்காயில் இப்படி ஒரு வித்யாசமான பொரியல்; செம்ம டேஸ்டியான ரெசிபி இதோ! அனைவருக்கும் பிடிக்கும்!

வெண்டைக்காயில் இப்படி ஒரு வித்யாசமான பொரியல்; செம்ம டேஸ்டியான ரெசிபி இதோ! அனைவருக்கும் பிடிக்கும்!

Priyadarshini R HT Tamil
Dec 31, 2024 03:24 PM IST

வித்யாசமான வெண்டை-முட்டை-கடலை பொரியல் செய்வது எப்படி என்று பாருங்கள்.

வெண்டைக்காயில் இப்படி ஒரு வித்யாசமான பொரியல்; செம்ம டேஸ்டியான ரெசிபி இதோ! அனைவருக்கும் பிடிக்கும்!
வெண்டைக்காயில் இப்படி ஒரு வித்யாசமான பொரியல்; செம்ம டேஸ்டியான ரெசிபி இதோ! அனைவருக்கும் பிடிக்கும்!

வெண்டைக்காயில், அதிகளவில் வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது ரத்தத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் அனீமியாவைத் தடுக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் 33 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும். இந்த வெண்டைக்காயில் வித்யாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

கடலை – ஒரு ஸ்பூன்

வர மிளகாய் – 2

சீரகம் – கால் ஸ்பூன்

(ஒரு கடாயில் கடலை, வர மிளகாய், சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து ட்ரையாக வறுத்துக்கொள்ளவேண்டும். இதை ஆறவிட்டு ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பான பொடியாக பொடித்துக்கொள்ளவேண்டும்)

பொரியல் செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பூண்டு – 8 பல் (தட்டியது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

முட்டை – 2

வெண்டைக்காய் – கால் கிலோ (பொரியலுக்கு நறுக்குவது போல் நறுக்கிக்கொள்ளவேண்டும்)

கரம் மசாலா – கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மல்லித் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். அனைத்தும் பொரிந்தவுடன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தட்டிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அது பொன்னிறமானவுடன், பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து பிரட்டவேண்டும். அடுத்து முட்டையை உடைத்து அந்த பொரியலில் ஊற்றிவிட்டு, பொடித்து வைத்துள்ள கடலைப் பொடியை சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும் சூப்பர் சுவையான வெண்டைக்காய் – முட்டை – கடலை பொரியல் தயார்.

இதை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், வெரைட் சாதங்கள் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வெண்டைக்காயை வழக்கமான பொரித்தால் கூட சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.