Tamil News  /  Lifestyle  /  Here Are The Foods To Avoid Eating With Karuvadu And Fish

அசைவ பிரியர்களே உஷார்.. யாரெல்லாம் கருவாடு சாப்பிடக் கூடாது தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Feb 04, 2024 04:05 PM IST

Karuvadu: மீன் மற்றும் கருவாடு சாப்பிடும் போது எவையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

மீன் மற்றும் கருவாடு
மீன் மற்றும் கருவாடு

ட்ரெண்டிங் செய்திகள்

கருவாடு சமைக்கும் போது அதில் மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்ற மூலிகை உணவுப் பொருட்களை சேர்த்துச் சமைத்தால் ஆரோக்கியமானதாக இருக்கும். இதை கருவாட்டு சாறு என்பார்கள். பார்ப்பதற்கு ரசம் போல இருக்கும் இந்தக் கருவாட்டுச் சாறு அஜீரணக் கோளாறு, மந்தம், பசியின்மைக்கு மிகச்சிறந்த நிவாரணமளிக்கக் கூடியது. என்னதான் அசைவ உணவுகளில் பலவிதமான சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும் அவற்றை சாப்பிடும்போது சிலவற்றை தவிர்ப்பது நல்லதாகும்.

அந்த வகையில், எண்ணெய் தேய்த்து தலை முழுகும் நாட்களில் மீன், கருவாடு, நண்டு, இறால், தயிர், மோர் சாப்பிடக் கூடாது. சைனஸ், சளி, இருமல், ஆஸ்துமா தொல்லை இருப்பவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த அன்று இவற்றையெல்லாம் சாப்பிட்டால் சைனஸ் பிர்சனை அதிகமாகும் வாய்ப்பு உண்டு என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள் உப்பு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. கருவாட்டில் உப்பு மிக அதிகமாக இருக்கும். எனவே இந்தப் பிரச்னை உள்ளவர்கள் கட்டாயம் கருவாட்டு உணவை தவிர்ப்பது நல்லது.

சரும நோய் அல்லது ஒவ்வாவை பிரச்னை இருப்பவர்களுக்கும் கருவாடு ஆகாது. சருமப் பிரச்னை இருப்பவர்களுக்கு ஜென்ம எதிரி கருவாடு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு கருவாட்டால் உங்களுக்கு பல தொல்லைகள் ஏற்படக்கூடும். எனவே, கருவாட்டை தவிர்ப்பது உடல் நலத்திற்கு சிறந்தது.

கருவாடு சாப்பிடும் போதும் மீன், நண்டு உள்ளிட்ட உணவுகளை சாப்பிடும் போது மோர், தயிர், கீரை போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது புட் பாய்சனை உண்டாக்கி விடும் என்கின்றனர். 

இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், தோல் நோயாளிகள், செரிமானச் சிக்கல் மிக்க நோயாளிகள், கடும் நீரிழிவு நோயாளிகள், அமிலத்தன்மை உடலில் அதிகமுள்ள நோயாளிகள் உள்ளிட்ட சிலவகை நோயாளிகள் தவிர, மற்றவர்கள் கருவாடு உட்கொள்வது நன்மையே தரும். எனவே ஆரோக்கியமான உணவை அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழ கற்றுக்கொள்வோம்..!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

பொறுப்பு துறப்பு:

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

WhatsApp channel

டாபிக்ஸ்