தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here Are Some Tips On How To Be Happy In A Relationship

Relationship: ரிலேஷன்ஷிப்பில் மகிழ்ச்சியாக இருக்க சில டிப்ஸ்!

Jan 07, 2024 07:43 PM IST Marimuthu M
Jan 07, 2024 07:43 PM , IST

  • ரிலேஷன்ஷிப்பில் மகிழ்ச்சியாக இருக்க சில வழிமுறைகள் குறித்து அறிந்துகொள்வோம்.

மகிழ்ச்சியான ரிலேஷன்ஷிப்பை உருவாக்க, ஒருவர் தங்கள் காதல் துணையிடம் இருக்கும் குறைபாடுகள் மற்றும் அவர்கள் நம்பும் விநோத நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லறத்துணையை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க இருவருக்கும் பிடித்த பொதுவான காரணங்களைக் கண்டறிந்து, அது பற்றி பேசுவதோ, அவ்வாறு செயல்படுவதையோ ஊக்குவிக்க வேண்டும். 

(1 / 6)

முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருத்தல்:மிக முக்கியமான தகவல்களை இல்லறத்துணையுடன், பகிர்ந்து கொள்வது நல்லது. அதை ஒருவேளை மறைத்துவைத்தால் ரிலேஷன்ஷிப்பில் நேர்மையின்மை எனும் பிரச்னை மற்றும் சண்டை ஆகியவை நிகழலாம். 

(2 / 6)

நிகழ்காலத்தில் இருக்கப் பழகுங்கள்: கடந்த கால தவறுகள், சண்டைகள் மற்றும் தவறான புரிதல்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நிகழ்காலத்தில் வாழ்வது, மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதில் நேரத்தை செலவிடுவது மற்றும் ஒருவரையொருவர் பாராட்டுவது மிகமுக்கியம்.

(3 / 6)

பிரச்னைகளைத் தீர நேரம் ஒதுக்குங்கள்: உறவில் உள்ள சில பிரச்னைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றாலும், சில பிரச்னைகளைத் தீர்க்க, அதனை ஆறபோட்டு நேரத்தை எடுத்துக்கொள்வது முக்கியம். அதைவிட்டுவிட்டு, நாம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என உடனடியாக முடிவுகளுக்குச் செல்லக்கூடாது. அதற்குப் பதிலாக உறவில் உள்ள சில சிக்கல்களை சமாளிக்க நேரம் கொடுக்க வேண்டும்.

(4 / 6)

ரிலேஷன்ஷிப்புக்கு வெளியே ஒரு வாழ்க்கையை வைத்திருங்கள்: ரிலேஷன்ஷிப்பை தாண்டி வெளியே ஒரு வாழ்க்கை இருப்பது மிகவும் முக்கியம். தனிப்பட்ட நண்பர்கள், பொழுதுபோக்குகள் மற்றும் உறவுக்கு வெளியே ஒரு வட்டம் இருப்பது மிக முக்கியம். அது நம்மை சுதந்திரமாக வைத்திருக்க உதவுகிறது.

(5 / 6)

கருத்து வேறுபாடுகளை அனுமதிக்கவும்: நமது பார்ட்னர் வெவ்வேறு கண்ணோட்டங்களையும் கருத்துகளையும் கொண்டிருக்கலாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை நாம் அனுமதிக்க வேண்டும், வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதுபோல் நாம் சொல்வதை அப்படியே பார்ட்னர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்காமல், அவரது கருத்துக்கும் மதிப்பளிக்கவேண்டும்.  

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்