‘வாய் மட்டுமல்ல; மனதையும் விட்டு சிரிக்க உங்களை குஷிப்படுத்தும்; மொக்கை ஜோக்குகள் இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘வாய் மட்டுமல்ல; மனதையும் விட்டு சிரிக்க உங்களை குஷிப்படுத்தும்; மொக்கை ஜோக்குகள் இதோ!

‘வாய் மட்டுமல்ல; மனதையும் விட்டு சிரிக்க உங்களை குஷிப்படுத்தும்; மொக்கை ஜோக்குகள் இதோ!

Priyadarshini R HT Tamil
Jan 06, 2025 01:39 PM IST

நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க மொக்கை ஜோக்குகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. படித்து, சிரித்து மகிழுங்கள்.

‘வாய் மட்டுமல்ல; மனதையும் விட்டு சிரிக்க உங்களை குஷிப்படுத்தும்; மொக்கை ஜோக்குகள் இதோ!
‘வாய் மட்டுமல்ல; மனதையும் விட்டு சிரிக்க உங்களை குஷிப்படுத்தும்; மொக்கை ஜோக்குகள் இதோ!

ஏன்னா, அவங்க ஊர்ல தண்ணீர் கஷ்டமாம். ஹாஹாஹா!

யார் அடிச்சா வலிக்காது?

வேற யாரு காத்தடிச்சாதாங்க வலிக்காது. ஹாஹாஹா!

தண்ணீரில் கரைத்தால் கரையும் திரை எது?

வேற எது மாத்திரை தாங்க, ஹாஹாஹா!

தண்ணீரில் கரைத்தால் கரையாத திரை எது? நித்திரை தாங்க, என்ன செம்ம மொக்கையா? ஹாஹாஹா!

தாஜ்மஹால்க்கு பெயின்ட் அடிச்சா என்ன ஆகும் தெரியுமா?

பெயின்ட்தான் காலியாகும். ஹாஹாஹா!

போஸ்ட் மேன் கீழ விழுந்தா எப்படி விழுவாரு?

தபால்ன்னு விழுவாரு. ஹாஹாஹா!

ஒருத்தன் மாத்திரைக்கு ஏன் பால் ஊத்துறான்?

ஏன்னா, அது பாம்பு மாத்திரையாம். ஹாஹாஹா!

ஒருத்தர் மாடியில் இருந்து குக்கரை கீழே போட்டாராம். அது கீழே விழவில்லையாம், ஏன்?

ஏன்னா, அது பட்டர்ஃப்ளை குக்கராம். ஹாஹாஹா!

ஒருத்தர் ஓட்டலுக்குப்போய் தோசை ஆர்டர் பண்ணிணாங்களாம், ஆனா அந்த தோசை பறந்து போய்டுச்சாம். ஏன்?

ஏன்னா, அது ப்ளைன் தோசையாம். ஹாஹாஹா!

ஒரு இடத்தில் எல்லா பஸ்சும் வந்து நின்னுச்சாம். ஆனால் ஒரு ப்ஸ் மட்டும் வரவில்லையாம். அது ஏன்?

ஆக்டோபஸ். ஹாஹாஹா!

மரம் ஏன் பச்சை கலர்ல இருக்கு?

ஏன்னா நம்ம அதுக்கு பச்ச தண்ணீ ஊத்துறோம்ல.

மேன் இன் ஜப்பான்க்கு எதிர்பதம் என்ன?

பள்ளம் இன் ஜப்பான்தான். வேறென்ன? ஹாஹாஹா!

பூனைக்கு முன்னாடி அதுக்குப் பிடித்த 3 சாப்படு இருந்துச்சாம். பூனை அதோட கண்ணை எங்க வெச்சு இருக்கும்?

அதோ முகத்துலதான். வேறஎங்க? ஹாஹாஹா!

ஒரு கேன் புல்லா தண்ணீ இருந்துச்சாம். ஒரு பையன் வந்து அதுக்குள்ள ஒன்னு போட்டவுடனே எல்லா தண்ணியும் கீழே போயிடுச்சாம். எப்படி?

ஏன்னா அந்தப்பையன் ஓட்டை போட்டானாம். ஹாஹாஹா!

ஒரு லாக் ஓப்பன் பண்ணணும்னா என்ன பண்ணணும்?

அதுக்கு மொதல்ல லாக் பண்ணணும். ஹாஹாஹா!

காப்பியடிக்க முடியாத டெஸ்ட் எது?

ப்ளட் டெஸ்ட். ஹாஹாஹா!

தவளை நிறைய பொய் சொல்லுமாம். எப்படி?

ஏன்னா அது பேருதான் தவ ளை (lie) ஆச்சே. ஹாஹாஹா!

வெயிட்டான பெல் எது?

வேற எது? டம்பெல்தான். ஹாஹாஹா!

ஆப்போசிட்டுக்கு ஆப்போசிட் வார்த்தை என்ன?

ஆப்போஸ்டாண்ட். ஹாஹாஹா!

ஜோக்ஸ்லாம் படிச்சு ரசித்து சிரிச்சு முடிச்சுட்டீங்களா? எப்போதும் நீங்களும் மகிழ்ந்திருங்கள். மற்றவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வியாதிகள் நம்மை நெருங்காது.

இன்றைய சிந்தனை வரிகளைப் பாருங்கள்

நேற்று செய்ய வேண்டியதை இன்று செய்பவர் சோம்பேறி

இன்று செய்ய வேண்டியதை இன்று செய்பவர் சுறுசுறுப்பானவர்

நாளை செய்யவேண்டியதையும் இன்றே செய்பவர்தான் வெற்றியாளர். எனவே வெற்றியாளராக வேண்டுமெனில், நீங்கள் நாளைய வேலையையும் இன்றே முடித்துவிடுங்கள். அப்போதுதான் நீங்கள் விரும்பியபடி வெற்றியாளராக முடியும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.