Haircare: தலைமுடியின் வளர்ச்சியை ஆதரிக்கும் உணவுகள்! இந்த உணவுகள் பலன் அளிக்கலாம்!
Haircare: முடி உதிர்தல் என்பது பெரும்பாலானோர்க்கு இருக்கும் தீராத பிரச்சனையாகும். இதற்கு மக்கள் பல வழிகளில் தீர்வு பெற முயற்சிக்கின்றனர். அதில் ஒன்று தான் உணவு. சில உணவுகளை சாப்பிட்டால் முடி உதிர்தல் குறையலாம் எனக் கூறப்படுகிறது. அவை என்னவென்று இங்கு காணலாம்.

பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் முடி உதிர்தல். இது தொடர்ந்து உதிர மட்டுமே செய்தால் முடியின் அடர்த்தி குறைய வாய்ப்புள்ளது. நாமும் இதனை குறைக்க பல விதமான ஷாம்பூ, எண்ணெய் என பயன்படுத்துகிறோம். அவை எதுவும் சிறப்பான பலன்களை வழங்குவதில்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்களும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். நாம் இதில் கவனம் செலுத்தாமல் முடி உதிர்தல் குறித்து புகார் கூறுகிறோம். முடி உதிர்தல், பளபளப்பு இழப்பு, முனை பிளவுபடுதல் ஆகிய அனைத்திற்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால் நீங்கள் உங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். உணவை சீராக்குவது முடி இழப்பை தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது. அதில் என்னென்ன உணவுகள் உதவ வாய்ப்புள்ளது என இங்கு பார்க்கலாம்.
கெட்டியான தயிர்
தயிர் முடி வளர்ச்சிக்கு நல்லது என்று நான் சொன்னால் யாராவது நம்புவார்களா ? தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் மற்றும் புரதம் முடி வளர்ச்சிக்கும் அதன் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுகின்றன. இது முடி வளர்ச்சியை ஆதரிக்க வாய்ப்புள்ளது.