வெள்ளை முடியை மறைக்க மருதாணியை பயன்படுத்துகிறீர்களா? அடிக்கடி பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?
நம்மில் சிலர் நரை முடியை மறைக்க மருதாணி இலையை அரைத்து பயன்படுத்துவோம். ஆனால் இதனை அடிக்கடி பயன்படுத்தினால் வறட்சியான முடி என பல விதமான பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. மருதாணி பயன்படுத்தும் முன் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை இங்கே உள்ளது.

இயற்கை வழங்கும் ஒரு சிறந்த நிறம் அளிக்க கூடிய செடி தான் மருதாணி, இதனை விழாக்களின் போது கைகளில் போட்டு வண்ணம் இடுவோம். மேலும் மெகந்தி என விதவிதமான டிசைன்களில் கைகளை அழகு படுத்துவார்கள். இதனை நரை முடியை மறைப்பதற்கும் தலையில் தடவும் பழக்கம் உள்ளது. ஆனால் தலைமுடியில் தொடர்ந்து மருதாணி போடுவதில் சில குறைபாடுகள் உள்ளன. மெஹந்தி அல்லது மருதாணி என்பது ஒரு இயற்கை சாயமாகும், இது ரசாயன சாயங்கள் மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்துவதை விரும்பாதவர்கள் நரை முடியை மறைக்க பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாகும் . மருதாணி பாதுகாப்பானது என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால் உங்கள் தலைமுடியில் தொடர்ந்து மருதாணி போடுவதில் சில குறைபாடுகள் உள்ளன.
மருதாணி தலைமுடியை கரடுமுரடாக்கலாம்
உங்கள் தலைமுடியில் தொடர்ந்து மருதாணியைப் பயன்படுத்துவதால், அது கரடுமுரடாகி, அதன் இயற்கையான பளபளப்பை இழக்க நேரிடும். இதற்கு மருதாணியில் உள்ள டானின்கள் காரணமாகும். இது முடியின் இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி, அதை உலர்த்த வாய்ப்புள்ளது.