தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Here Are Benefits Of Eating Dates

Dates Benefits : நீரிழிவு நோயை சமாளிக்க உதவும் பேரீச்சம்பழம்.. ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.. எக்கசக்க பயன்கள் இருக்கு!

Divya Sekar HT Tamil
Mar 10, 2024 11:12 AM IST

Dates Benefits : பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் இந்த அற்புதமான பழத்தின் பண்புகளை அறிந்து கொள்ளுங்கள்

பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழம்

ட்ரெண்டிங் செய்திகள்

பேரிச்சம்பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாமிரம் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எனவே எலும்புகள் வலுவாக இருக்க பேரீச்சம்பழத்தை தொடர்ந்து சாப்பிடுங்கள்.

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடல் வெப்பம் அதிகரித்து உடலை சூடாக வைக்கிறது. குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் குளிர்ச்சி குறையும். எனவே பேரீச்சம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

பேரிச்சம்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, இது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. சோர்வைக் குறைக்க இதைப் போல் வேறு எதுவும் இல்லை. எனவே காலை உணவில் பேரீச்சம்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே, பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கிறது. இரத்த சோகை இருந்தால் பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்.

செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த பேரீச்சம்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேரிச்சம்பழத்தில் உள்ள பொருட்கள் வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பேரீச்சம்பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள்.

ஒரு கப் பேரிட்சை பழத்தில் 277 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட் 75 கிராம், நார்ச்சத்துக்கள் 7 கிராம், புரதம் 2 கிராம், பொட்டாசியம் 15 சதவீதம், மெக்னீசியம் 13 சதவீதம், காப்பர் 40 சதவீதம், மாங்கனீஸ் 13 சதவீதம், இரும்புச்சத்து 5 சதவீதம், இரும்புச்சத்து 15 சதவீதம் உள்ளது.

பேரிட்சை பழத்தை கரோட்டினாய்ட்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் ஃபினோலின்க் அமிலங்கள் ஆகிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், வழக்கமான குடல் இயக்கத்துக்கு வழிவகுத்து, ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவுகிறது. நாளொன்றுன்னு 7 முதல் 10 பேரிட்சை பழங்கள் சாப்பிடுவதால், அது மலம் எளிதாக கழிக்க உதவுகிறது. பேரிட்சையில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள் மலத்தை கட்டியாக்குகிறது.

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீரை வைத்து மலத்தை மிருதுவாக்குகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. குடலில் உள்ள அமோனியா போன்ற நச்சுக்களை மலக்குடலுக்கு தள்ளிவிடுகிறது. அது நச்சுக்களை அகற்ற உதவுகிறது.

பேரிட்சையில் கரோட்டினாய்ட்கள் அதிகம் உள்ளது. ஃபினோலிக்ஸ், ஃப்ளேவனான்ய்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. அது ஃப்ரி ரேடிக்கல்ஸ்களால் செல்களுக்கு ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் சேதங்களை தடுக்கிறது. உலர் பழங்களிலே பேரிட்சையில், அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது.

உலர்திராட்சைகளைவிடவும் அதிகம் உள்ளது. பேரிட்சை பழங்களை நீங்கள் வழக்கமாக உட்கொண்டால், அது உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்களை வழங்கி, பல நோய்களை தடுக்கிறது. அதில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் மற்றும் அல்சைமர் ஆகிய நோய்கள் உள்ளது.

பேரிட்சையில் கரோட்டினாய்ட்கள், பாலிஃபினால்கள் மற்றும் ஃபைட்டோஸ்டிரோல்கள், மூளையில் அலர்ஜிக்கு எதிரான பாதிப்புக்களை கொண்டுள்ளது. இது நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கிறது. நினைவாற்றல் இழப்பை தடுப்பதாக விலங்கில் செய்யப்பட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன.

நரம்பு செல்களை ஆக்ஸிடேடிவ் சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. புதிய மூளை செல்களின் வளர்ச்சியை குறைக்கிறது. அது நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்