Pregnant Tips : ஒவ்வொரு பெண்ணும் கருத்தரிக்க தவிர்க்க வேண்டிய 5 தவறான பழக்கங்கள் இதுதான்.. இனி இதை செய்யாதீங்க!
Pregnant Tips : திருமணம் முடிந்து நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகிவிட்டால், ஒவ்வொரு பெண்ணும் கருத்தரிக்க தவிர்க்க வேண்டிய 5 தவறான பழக்கங்கள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
திருமணம் முடிந்தோ அல்லது குழந்தை வேண்டும் என்று எண்ணும்போதோ உடனே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போவதுதான் கருவுறாமை ஆகும். நீங்கள் எத்தனை முறை பாதுகாப்பின்றி உடலுறவு வைத்துக்கொண்டாலும், உங்களால் கருத்தரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் அதற்கு உரிய காரணங்களைக் கண்டுபிடிக்கவேண்டும்.
நீங்கள் கருவுற முடியாமல் போவதற்கு, ஆரோக்கிய பிரச்னைகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாகின்றன. ஆனால் பாதுகாப்பான பல சிகிச்சைகள் உங்களை கருவுறவைக்கும். இயற்கை முறையிலும் சில வழிகளை பின்பற்றினால் உங்களால் கருவுற முடியும்.
அறிகுறிகள்
கருவுறாமைக்கு தெளிவான அறிகுறிகள் கிடையாது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகளால் பெண்களால் கருவுற முடியாமல் போகிறது. ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளாலும் கருவுற முடியாமல் போகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று அல்லது பெறாமல் என இரு முறைகளிலும் கருவுறுகிறார்கள்.
எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
உங்களுக்கு கருவுறுதல் பிரச்னைகள் ஏற்பட்டால், ஓராண்டு வரை நீங்கள் காத்திருக்கவேண்டும். அதற்கு பின்னர்தான் மருத்துவரை அணுகவேண்டும்.
பெண்களுக்கு,
35 வயதை கடந்துவிட்டால்,
40 வயதை கடந்த பின்னர்,
மாதவிடாய் பிரச்னைகள் ஏற்பட்டால், தாமதல் மற்றும் வலி போன்றவை,
கருவுறுதல் கோளாறுகள்,
ஒருமுறைக்கு மேல் கருச்சிதைவு
இடுப்பில் வீக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால்,
புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,
ஆண்களுக்கு,
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்,
விறைப்புக் கோளாறுகள்,
புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,
ஹெர்னியா அறுவைசிகிச்சை செய்பவராக இருந்தால்,
உடன் பிறந்தவர்களுக்கு கருவுறுதல் கோளாறுகள் இருந்தால்,
திருமணம் முடிந்து நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகிவிட்டால், ஒவ்வொரு பெண்ணும் கருத்தரிக்க தவிர்க்க வேண்டிய 5 தவறான பழக்கங்கள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்
பிரஞ்சுஃபரைஸ், ஸ்பிரிங் ஆணியன்,சிக்கன் நக்கட்ஸ் போன்றவை சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும், ஆனால் இவை அனைத்தும் உங்கள் கர்ப்பத்திற்கு இடையூறாக இருக்கும். உண்மையில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது தொத்திறைச்சி, சலாமி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சில தீமைகள் உள்ளன, அவை உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதில், சீன உணவு மற்றும் பேக் செய்யப்பட்ட உணவு, சாப்பிட தயாராக உள்ள உணவையும் சேர்க்கலாம். அவற்றில் அதிக சோடியம் அளவு உள்ளது, இது சில நேரங்களில் கர்ப்பத்தின் வாய்ப்புகளை குறைக்கிறது. உங்கள் உடலில் ஏற்படும் அழற்சியின் அளவைக் குறைக்கவும், கர்ப்பத்திற்கு உங்கள் உடலைத் தயார்படுத்தவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்
புகைபிடித்தல் உங்கள் விந்து அல்லது முட்டை உயிரணுக்களுக்கு நல்லதல்ல. தொடர்ந்து புகைபிடிக்கும் பெண்களுக்கு முன்கூட்டியே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் அபாயம் அதிகம். புகைபிடிக்கும் ஆண்களின் விந்தணு இயக்கம் 13% குறைவாக இருக்கும், இது விந்தணுக்களை முட்டையை அடைய அனுமதிக்காது. புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவது உங்களுக்கு கருத்தரிப்பதை எளிதாக்கும்.
அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்க்கவும்
அதிகப்படியான ஆல்கஹால் விந்தணுக்களின் இயக்கத்தை குறைக்கும், இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைக்கும். கருத்தரிக்க முயற்சிக்கும்போது பெண்கள் மது அருந்துவதைத் தவிர்க்காவிட்டால் இது கரு ஆல்கஹால் நோய்க்குறியையும் ஏற்படுத்தும்.
கர்ப்பமாக இருக்க முயற்சிக்கும் பெண்கள் சமைக்காத பால், மூல இறைச்சி, மென்மையான சீஸ், உயர் பாதரச மீன் போன்ற அதிக ஆபத்துள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் அனைத்தும் கருவின் தொற்றுநோயை பாதிக்கும். இது குறைந்த பிறப்பு எடை, குறைப்பிரசவம் மற்றும் எதிர்காலத்தில் சில சந்தர்ப்பங்களில் கருச்சிதைவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மன அழுத்தத்தை தவிர்க்கவும்
மன அழுத்தம் பல நோய்களுக்கு வழிவகுக்கும். கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன், மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உங்களை நன்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு, யோகா போன்ற மன அழுத்தத்தைக் கையாளும் முறைகளைப் பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி, தியானம் போன்ற விஷயங்களைச் செய்வது முக்கியம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்