Herbal Tea : ஆயுசுக்கும் இந்த 10 வியாதிகளை அடித்து விரட்டவேண்டுமா? இதோ இந்த ஒரு கசாயம் மட்டும் போதும்!-herbal tea do you want to beat these 10 ailments for life just this one broth is enough - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Herbal Tea : ஆயுசுக்கும் இந்த 10 வியாதிகளை அடித்து விரட்டவேண்டுமா? இதோ இந்த ஒரு கசாயம் மட்டும் போதும்!

Herbal Tea : ஆயுசுக்கும் இந்த 10 வியாதிகளை அடித்து விரட்டவேண்டுமா? இதோ இந்த ஒரு கசாயம் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Aug 10, 2024 03:58 PM IST

Herbal Tea : ஆயுசுக்கும் மூட்டு வலி, சர்க்கரை உள்ளிட்ட 10 வியாதிகளை அடித்து விரட்டவேண்டுமா? உங்களுக்கு இந்த ஒரு கசாயம் மட்டும் போதும்.

Herbal Tea : ஆயுசுக்கும் இந்த 10 வியாதிகளை அடித்து விரட்டவேண்டுமா? இதோ இந்த ஒரு கசாயம் மட்டும் போதும்!
Herbal Tea : ஆயுசுக்கும் இந்த 10 வியாதிகளை அடித்து விரட்டவேண்டுமா? இதோ இந்த ஒரு கசாயம் மட்டும் போதும்!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

மூட்டு வலி, வாயு கோளாறு, இடுப்பு வலி, தைராய்ட், உடல் சோர்வு, பாத எரிச்சல், சர்க்கரை நோய், கல்லீரல், கை-கால் வலி, வயிற்று கோளாறு போன்ற இந்த 10 வியாதிகளையும் அடித்து விரட்டும் இந்த ஒரு கசாயம்.

தேவையான பொருட்கள்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வர மல்லி – ஒரு ஸ்பூன்

சோம்பு – அரை ஸ்பூன்

மிளகு – கால் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

துளசி – 10 இலைகள்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து சீரகம், வரமல்லி, சோம்பு, மிளகு, துளசி, பட்டை, கிராம்பு என அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஒரு டம்ளர் வரும் வரை கொதிக்க விடவேண்டும். இதை இரவில் தயாரிக்கவேண்டும்.

அப்படியே கொதிக்க தண்ணீரை மூடிவைத்துவிடவேண்டும். காலையில் இந்த பானத்தை வடிகட்டி, வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதை தினமும் செய்யவேண்டும். இப்படி செய்வதால், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுக்குள் இருக்கும். இதனால் உங்கள் உடலுக்கு எவ்வித வியாதிகளும் வராது.

வயது அதிகரித்தால், இதுபோன்ற வியாதிகள் ஆண், பெண் என அனைவரையும் வதைக்கும். மூட்டு வலிகள் எல்லாம் முப்பது வயதைக் கடந்தாலே வந்துவிடுகிறது. 

சர்க்கரை அடுத்த கொஞ்சம் காலத்தில் வந்து உடலுக்கு பல்வேறு மற்ற பிரச்னைகளையும் அழைத்து வந்துவிடுகிறது. இவையெல்லாம் சிறிய பிரச்னைகள் தான். இவற்றை நாம் வீட்டு வைத்திய முறைகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களிலே கட்டுக்குள் வைக்க முடியும்.

எனவே இதுபோன்ற சிறிய உடல் உபாதைகளுக்கு நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டிலே இதுபோன்ற சிறிய விஷயங்களை கடைபிடித்து இதனுடன், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, ஆரோக்கியமான, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். 

போதிய அளவு உடற்பயிற்சியும், யோகாவும் செய்து உடலையும், மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே போதும். உங்களை வியாதிகள் எதுவும் அண்டாது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.