Herbal Coffee : 40 வயதை தொட்டுவிட்டீர்களா? அப்ப இந்த ஒன்று மட்டும் கட்டாயம் செய்ங்க! அப்பதான் ஆரோக்கியம் இருக்கும்!
Herbal Coffee : 40 வயதை தொட்டுவிட்டீர்கள் என்றால், தினமும் காலையில் இந்த காபியை மட்டும் பருகி வாருங்கள். அப்போதுதான் ஆரோக்கியம் நிலைக்கும்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.
நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
மூட்டு வலி, உடல் வலி, உடல் அசதி, உடல் சோர்வு, கை-கால் வலி, பாத எரிச்சல், சளித்தொல்லை, இருமல், ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும். இந்த காபியை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பருகலாம். உடலுக்கு நல்ல ஆற்றலை தரும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி – 20 கிராம்
அதிமதுரம் – 5 கிராம்
சித்தரத்தை – 5 கிராம்
(இது மூன்றும் பொடியாக கிடைத்தாலும் நல்லது. இல்லாவிட்டால், இதை உரலில் தட்டி பின்னர் பொடித்துக்கொள்ளப் பயன்படுத்தலாம்)
வரமல்லி – 100 கிராம்
(மலச்சிக்கலைப்போக்க உதவும். வயிற்றுப்புண்ணை சரிசெய்யும், அஜீரணக்கோளாறை சரிசெய்யும். ஹார்மோன்கள் சமமின்மையை சரிசெய்யும். தைராய்ட் பிரச்னைகளை குணமாக்கும்)
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
வால் மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்காததை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்)
மிளகு – 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் வரமல்லி, சீரகம், வால்மிளகு, மிளகு என அனைத்தையும் பதமாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பை அணைத்து அந்த சூட்டிலே உரலில் சேர்த்து இடித்து வைத்துள்ள சுக்கு, அதிமதுரம் மற்றும் சித்தரத்தை ஆகிய அனைத்தையும் சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும்.
சூட்டிலே வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். நாம் இதுபோல் வறுத்து எடுக்கும்போது, நீண்ட நாள் சேமிக்க முடியும். அப்போதுதான் பூச்சி வராது.
நன்றாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ளவேண்டும்.
இதனுடன் திப்பிலியையும் சேர்த்துக்கொள்ளலாம். அதுவும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது.
இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்துக்கொள்ளலாம். இதை மூன்று மாதம் வரை சேர்த்து வைத்துக்கொள்ளலாம். இதை ஒரு நபருக்கு அரை ஸ்பூன் வீதம் பயன்படுத்தவேண்டும்.
காபி தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் இந்தப் பொடியை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
இதில் கருப்பட்டி, நாட்டுச்சர்க்கரை, வெல்லம், தேன் என எதாவது ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளை சர்க்கரையை மட்டும் தவிர்க்கவேண்டும்.
இதை நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி பருகவேண்டும்.
இதை யார் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகலாம். காலை, மாலை வழக்கமாக தேநீர் பருகுபவர் என்றால், அதற்குபதில் இதை பருகலாம்.
இது அஜீரணக்கோளாறை சரிசெய்து செரிமான மண்டலத்தை சீராக்கும். மலச்சிக்கல் இருக்காது. உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றும். உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்