தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Hemoglobin Level Want To Increase Hemoglobin Level Just Eat These 10 Fruits Every Day

Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த 10 பழங்களை தினமும் சாப்பிட்டாலே போதும்!

Priyadarshini R HT Tamil
Feb 26, 2024 02:16 PM IST

Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த 10 பழங்களை தினமும் சாப்பிட்டாலே போதும்!

Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த 10 பழங்களை தினமும் சாப்பிட்டாலே போதும்!
Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த 10 பழங்களை தினமும் சாப்பிட்டாலே போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

போதிய உடற்பயிற்சியும், துரித உணவுகளை உட்கொள்ளாமலும் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பழங்கள் நமது உடலில் ரத்தத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும்

உங்கள் ரத்தித்தில் போதிய அளவு ஹீமோகுளோபின் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 10 பழங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிளில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதை உறுதி செய்து அதன்மூலம் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவுகிறது.

மாதுளை

மாதுளையில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

வாழைப்பழம்

இரும்பு மற்றும் வைட்டமின் பி6 வாழைப்பழத்தில் அதிகளவில் உள்ளது. இது ரத்தத்தில் போதிய அளவு ஹீமோகுளோபினை உறுதி செய்து உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கிறது.

ஆரஞ்சு

இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இது இரும்பச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதுவும் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

கொய்யா

இதில் வைட்டமின் சி சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவுகிறது. உடல் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.

ஸ்டாரபெரிகள்

இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ஸ்ட்ராபெரியும் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதன் மூலம் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்கிறது.

தர்பூசணி

தர்ப்பூசணியில் உள்ள தண்ணீர் சத்தில், அதிகளவு இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. தர்ப்பூசணி, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவி, ரத்த அளவை பராமரிக்கிறது.

கிவி

கிவியில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இது இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. ஆரோக்கியமான ஹீமோகுளோபின்கள் உடலில் உருவாவதற்கு உதவுகிறது.

திராட்சைகள்

திராட்சைகளில் இரும்புச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் ஹீமோகுளோபின்கள் உருவாகவும் உதவுகிறது.

ஆப்பிரிகாட்

ஆப்பிரிகாட்டிகளில் இரும்புச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆப்பிரிகாட்கள், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவுகிறது. ஒட்டுமொத்த ரத்த ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். 

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்