Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? ரூ.500, 1000 என செலவு செய்யவேண்டாம்! சின்ன டிப்ஸ்!
Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? ரூ.500, 1000 என செலவு செய்யவேண்டாம். மருந்து மாத்திரைகளை உட்கொண்டு சிரமப்படவேண்டாம்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – ஒரு கப்
முருங்கைக்கீரை – ஒரு கப்
முருங்கைக்கீரை ஈர்க்குகள் – ஒரு கைப்பிடி (கொழுந்து)
செய்முறை
ஒரு கப் தண்ணீரில் கறிவேப்பிலை, முருங்கைக்கீரை, முருங்கைக்கீரை ஈர்க்குகள் என அனைத்தையும் நன்றாக கொதிக்கவிடவேண்டும். நன்றாக கலந்துவிட்டு கொதிக்கவிடவேண்டும். அந்த கீரையின் சாறுகள் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கியவுடன் அடுப்பை அணைக்கவேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்கவிடவேண்டும்.
அதை வடிகட்டி தினமும் பருகிவந்தால், தலையில் முடி கொட்டும் பிரச்னைகள் தீரும். ரத்தம் அதிகரித்து, உடலில் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும். தினமும் இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகலாம். அனைவரும் பருகலாம்.
முருங்கைக்கீரையில் உள்ள நன்மைகள்
முருங்கைக் கீரை மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு கீரை. இதில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளன.
முருங்கையின் கீரை மட்டுமல்லாமல் அதன் பூவையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல எலும்புகளும், பற்களும் வலிமை பெற உதவும். கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் பெற்றுத் தரக்கூடியது முருங்கைக்கீரை. அதேபோல் முருங்கையின் ஈர்க்கும்கூட மருத்துவ குணம் நிறைந்தது.
வாரத்தில் ஒருநாள் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நலக்குறைபாடுகள் தீரும். முக்கியமாக வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. பொரியல், கூட்டு மட்டுமல்லாமல் சூப் செய்தும் சாப்பிடலாம்.
இதுபோன்று அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தால் சாதாரண தலைவலியில் தொடங்கி இருமல், சளித்தொல்லைகளில் இருந்து விடுபடலாம். காரணம் இந்தக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. உடல் வலி ஏற்பட்டால் முருங்கைக்கீரையில் ரசம் அல்லது சூப் வைத்துக் குடித்து வந்தாலே நிவாரணம் கிடைக்கும்.
குழந்தை பெற்ற தாய்மாருக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. முக்கியமாக தாய்ப்பால் ஊறுவதற்கு முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தாலே போதும். குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்க முருங்கைக்கீரை சமைத்துச் சாப்பிட வேண்டியது அவசியம்.
மேலும் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் தாய்மாருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் நன்மை கிடைக்கும். அதாவது வாயுவை உண்டாக்கக்கூடிய உணவுகளை தாய்மார் சாப்பிட்டால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
முக்கியமாக குழந்தைகளின் வயிறு கல் போன்று வீங்கி உப்பிக்கொண்டு மிகுந்த தொல்லையை கொடுக்கும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும். இது போன்ற நேரங்களில் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிடுவது பலன் தரும்.
குழந்தையின்மை, ஆண்மைக்குறை பிரச்சினை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முருங்கைக்கீரை மட்டுமல்லாமல், முருங்கைப்பூவையும் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கைப்பூவை பாலில் போட்டு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு போதுமான பலம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்