தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hemoglobin Level : ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகையை அடித்து விரட்டும் நாயுருவியின் நன்மைகள்!

Hemoglobin Level : ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகையை அடித்து விரட்டும் நாயுருவியின் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
May 24, 2024 12:45 PM IST

Hemoglobin Level : ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகையை அடித்து விரட்டும் நாயுருவியின் நன்மைகள்!

Hemoglobin Level : ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகையை அடித்து விரட்டும் நாயுருவியின் நன்மைகள்!
Hemoglobin Level : ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகையை அடித்து விரட்டும் நாயுருவியின் நன்மைகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

சொத்தை பற்களை தெரிந்து ஓடவிடும் நாயுருவியில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா?

நாயுருவி நமது ஆடைகளில் ஒட்டிக்கொள்ளும் தன்மைகொண்டது. சொத்தை பற்களினால் ஏற்படக்கூடிய எவ்வித வலியையும் போக்கிவிடும். நாயுருவி இலைகளை வாயில் வைத்து சிறிது நேரம் மென்று அதன் சாறை வைத்துவிட்டு பின்னர் வாயை கொப்பளித்தால் பற்களின் எவ்வித பிரச்னைகளும் குணமாகும்.

பற்களில் ஏற்படும் நாள்பட்ட வலி, வீக்கம் என அனைத்தையும் குணமாக்கும். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும். அத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்தது. உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும்.

ரத்தத்தில் இரும்புச்சத்து குறையும்போது, ரத்த சோகை நோய் ஏற்படும். இதை ஹீமோகுளோபின் குறைபாடு பெண்களுக்கு ஏற்படும்போது மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படும்.

இது அனைத்து வகையான மூல நோயையும் குணப்படுத்தக்கூடியது. இந்தக்கீரையை பருப்போடு சேர்த்து சாப்பிட்டால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் தீரும்.

இந்தக்கீரையை சின்ன வெங்காயத்துடன் பொரியல் செய்து சாப்பிடும்போது, அனைத்து வகை மூலத்தையும் அது குஷப்படுத்தும் தன்மைகொண்டது.

ஏனெனில், இந்தக்கீரையில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

நாயுருவி இலையில் தேநீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

நாயுருவி இலைகள் – 10

மிளகு – 20

பனங்கற்கண்டு – 2 ஸ்பூன்

செய்முறை

இந்த மூன்றையும் நன்றாக கொதிக்க வைத்து, அதை வடிகட்டி பருகினால், சளி, இருமல், காய்ச்சலை முற்றிலும் போக்கும். நுரையீரலில் தங்கியிருக்கும் நாள்பட்ட சளியை அடித்து வெளியேற்றும். அதிகளவிலான மருத்துவ குணங்கள் நிறைந்தது.

கைப்பிடியளவு நாயுருவி இலையை எடுத்துக்கொண்டு, அதனுடன் 100 மி.லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொதிக்க வைத்து, ஆறவைத்து ஒரு ஈரமில்லாத பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அதை காயங்களில் தடவினால் பலன் கிட்டும். கட்டி, வீக்கம், மூட்டு வலிக்கும் இதை தடவலாம். மூட்டு வலி உள்ளவர்கள் இதை சாப்பிட அவர்களுக்கு பலன் கிட்டும்.

உடலில் உள்ள கை-கால் வலி, பாத வலி ஆகியவற்றை சரிசெய்யும். இந்த கீரையை நன்றாக கசக்கி சாறு பிழிந்து, பெருங்காயத்தூளுடன் சேர்த்து பருகினால், வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, தீராத வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

வாயில் துர்நாற்றம், பற்களில் மஞ்சள் கரையை போக்கவல்லது. இந்த செடியின் வேர் ஃபிரஷ் போன்று இருக்கும். வேப்பங்குச்சியை வைத்து பல் துலக்குவதைப்போல் துலக்கினால், பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கள், பற்கள் வெண்மையாகும்.

வாய் துர்நாற்றம் நீங்கும். சொத்தைப்பற்கள் குணமாகும். விதையை காயவைத்து பொடி செய்து பல் துலக்கினால், பல் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் குணமாகும்.

இந்த விதையின் பொடியை தேன் கலந்து உள்நாக்கில் தடவிவந்தால், அது திக்குவாயை குணமாக்கும்.

பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு ஆகியவை இருக்கும். அவர்கள் நாயுருவி இலை மற்றும் துளசி இலையை எடுத்து இடித்து அதில் இருந்து சாறு எடுத்து பருகினால் போதும். பிறப்புறுப்பில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் குணமாகும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைத்து வெளியேற்றுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும். அதிக மருத்துவ குணங்கள் நிறைந்து.

இரண்டு வகை உள்ளது. செந்நாயுருவி இதைவிட மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது இரண்டுமே கிடைக்காவிட்டால், நாயுருவியின் இலை, வேர், காய் என அனைத்தும் தனித்தனியாக பொடியாக நாட்டு மருந்த கடைகளில் கிடைக்கிறது. அதையும் நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்