தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hemoglobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? காலை எழுந்தவுடன் இதை மட்டும் ஒரு கைப்பிடியளவு சாப்பிடுங்க!

HemoGlobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? காலை எழுந்தவுடன் இதை மட்டும் ஒரு கைப்பிடியளவு சாப்பிடுங்க!

Priyadarshini R HT Tamil
Apr 08, 2024 01:33 PM IST

Hemoglobin Level : ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். எடை அதிகம் உள்ளவர்கள், ஒல்லியானவர்கள் என அனைவரும் சாப்பிட உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். உங்கள் உடல் உள்ளுறுப்புகள் சுத்தமடைந்து சுறுசுறுப்பாவீர்கள்.

HemoGlobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? காலை எழுந்தவுடன் இதை மட்டும் ஒரு கைப்பிடியளவு சாப்பிடுங்க!
HemoGlobin Level : ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? காலை எழுந்தவுடன் இதை மட்டும் ஒரு கைப்பிடியளவு சாப்பிடுங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். முகம் வெளுத்தது போன்ற நிலை மாறி, சருமம் பளபளப்பாகும். முடி உதிர்வு குறையும். 

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். எடை அதிகம் உள்ளவர்கள், ஒல்லியானவர்கள் என அனைவரும் சாப்பிட உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். உங்கள் உடல் உள்ளுறுப்புகள் சுத்தமடைந்து சுறுசுறுப்பாவீர்கள்.

தேவையான பொருட்கள்

பாதாம் – 6

கடலை – 2 ஸ்பூன்

கருப்பு கொண்டைக்கடலை – ஸ்பூன்

பச்சை பயறு – 2 ஸ்பூன்

உலர் திராட்சை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

இந்த 5 பொருட்களையும் இரவில் ஊறவைத்துவிடவேண்டும். காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, கால் டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு, இதை ஒரு நபர் இரண்டு ஸ்பூன் ஒன்றாக கலந்து சாப்பிடவேண்டும்.

மெதுவாக மென்று உமிழ் நீருடன் சாப்பிடவேண்டும். அது உடலுக்கு தேவையான நன்மைகளைக் கொடுக்கிறது. உமிழ் நீரில் வயிற்றில் ஜீரண சக்தியைக் கொடுக்கும். 

ரத்தம் சுத்தமாகும். சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும். உடல் உள் உறுப்புக்கள், நரம்புகள் வலுவடையும். நரம்பு மண்டலம் சீராகும்.

முடி உதிர்வு பிரச்னை குறையும். கண் பார்வை குறைபாடு சரியாகும். செரிமான கோளாறு சரியாகும். 

மலச்சிக்கல் பிரச்னைகள் இருக்காது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். ஹீமோகுளோபின் அளவை சரியான அளவில் பராமரிக்கும்.

உடலில் நீர்ச்சத்தை சரியாக பராமரிக்கும். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தாலே போதும் சருமம் பளபளக்கும். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால் உடலில் ஆரோக்கியம் அதிகரிக்கும். நமது உடலின் ஆரோக்கியம் மேம்படும். 

இதை செய்யும்போது, சிறிய உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். அப்போதுதான் உடலுக்கு இதன் முழு நன்மைகளும் கிடைக்கும்.

இதை வெறும் வயற்றில் சாப்பிட முடியவில்லையென்றால், இதை காலை உணவுக்கு முன்னர்தான் சாப்பிடவேண்டும். கொஞ்சம், கொஞ்சமா எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு குறைவான அளவு போதுமானது. ஒரு கைப்பிடியளவுதான் சரியான அளவு.

மலச்சிக்கல், மூலம், ரத்த சுத்திகரிப்பு, நரம்பு மண்டலத்து வலு சேர்ப்பது. கண்பார்வை குறைபாடு, தலைமுடி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுதரும். தலைமுடி உதிர்வை குறைக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும். சருமத்தை பளபளப்பாக்கும்.

இதில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளும் இந்த நன்மைகளைக் கொடுக்கிறது. எனவே கட்டாயம் முயற்சி செய்து பலன்பெறுங்கள். 

இவற்றை அளவாக எடுத்துக்கொள்ளும்போது எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. அதேநேரத்தில் அளவுக்கு மிஞ்ஜினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க வேண்டாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்