Hemoglobin Level : அனீமியாவை அடித்து விரட்டி, ஹீமோகுளோபினை உயர்த்தும் காலை உணவு! 48 நாளில் தீர்வு!
Hemoglobin Level : அனீமியாவை அடித்து விரட்டி, ஹீமோகுளோபினை உயர்த்தும் இந்த காலை உணவு.இதை தினமும் பருகினால் 48 நாளில் தீர்வு கிடைக்கும்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
உடலில் ஹீமோகுளோபின் குறைந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறுகிறார்களா? அதற்கு ஃபுட் சப்ளிமென்ட்கள் எடுத்து வருகிறார்களா? ஆனால் உங்களுக்கு இந்த ஒரு காலை உணவும் உதவக்கூடும்.
இது உங்கள் உடலில் இயற்கை முறையில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதுடன், உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்கும் ஒரு சிறந்த காலை உணவும், பானமும் ஆகும். இந்த பானத்தை தயாரிப்பதற்கு உங்களுக்கு 4 பொருட்கள் மட்டுமே போதும்.
அதை வைத்து நீங்கள் உங்கள் உடலின் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். இதை ஹீமோகுளோபின் குறைபாட்டை சரிசெய்வதற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கும் எடுத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய கேரட் – ஒரு கப்
நறுக்கிய பீட்ரூட் – ஒரு கப்
தேங்காய் துருவல் – ஒரு கப்
மாதுளை – ஒரு கப்
செய்முறை
நறுக்கிய கேரட், பீட்ரூட், தேங்காய் துருவல், மாதுளை என அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் அதை ஒரு வடிகட்டியில் வடிகட்டிக்கொள்ளவேண்டும். இந்த பானத்தை 48 நாட்கள் காலை உணவாக தினமும் குடித்து வரவேண்டும். இதைத்தவிர நீங்கள் வேறு எந்த காலை உணவும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
உங்கள் உடலில் எத்தனை தீவிரமான அனீமியாவையும் அடித்து விரட்டி, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும் இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதால், பசி ஏற்படாது. எனவே நீங்கள் மதிய உணவு மட்டும் எடுத்தால் போதும்.
இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நாள் முழுவதுக்கும் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலையும் வழங்குகிறது.
எனவே ஹீமோகுளோபின் குறைபாடு மற்றும் அனீமியாவால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த பானத்தை கட்டாயம் முயற்சி செய்து பலன்பெறுங்கள்.
உங்களுக்கு தேவைப்பாட்டால், இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்தும் பருகலாம். ஆனால் வெள்ளைச் சர்க்கரை மட்டும் சேர்க்காதீர்கள். ,இதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறும் சேர்த்துக்கொள்ளலாம். இதை தினமும் சாப்பிட்டாலும் உங்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளையும் தராது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்