Pregnancy Heat Stroke: வெப்பத்தால் கர்ப்ப காலத்தில் வரும் பக்கவாதம்: அறிகுறிகள் மற்றும் தடுப்பு உதவிகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pregnancy Heat Stroke: வெப்பத்தால் கர்ப்ப காலத்தில் வரும் பக்கவாதம்: அறிகுறிகள் மற்றும் தடுப்பு உதவிகள்

Pregnancy Heat Stroke: வெப்பத்தால் கர்ப்ப காலத்தில் வரும் பக்கவாதம்: அறிகுறிகள் மற்றும் தடுப்பு உதவிகள்

Marimuthu M HT Tamil
Apr 15, 2024 08:55 PM IST

Pregnancy Heat Stroke: வெப்ப அலையின்போது கர்ப்பிணிகளுக்கு வெப்ப சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் ஏற்படலாம். அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு உதவிகள் குறித்துக் காணலாம்.

Pregnancy Heat Stroke: வெப்பத்தால் கர்ப்ப காலத்தில் வரும் பக்கவாதம்: அறிகுறிகள் மற்றும் தடுப்பு உதவிகள்
Pregnancy Heat Stroke: வெப்பத்தால் கர்ப்ப காலத்தில் வரும் பக்கவாதம்: அறிகுறிகள் மற்றும் தடுப்பு உதவிகள்

பெங்களூரின் பெல்லந்தூரில் உள்ள கிளவுட்நைன் குழும மருத்துவமனைகளின் மகப்பேறியல் மருத்துவர் அருணா குமாரி, எச்.டி லைஃப்ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில், "ஒரு கர்ப்பிணி தனது உடல் ஓய்வில் இருக்கும்போது அவர்களின் உடல் எனர்ஜி லெவல் குறைவது அதிகரிக்கிறது. அது 3ஆவது மாதத்தில் 20 சதவீதம் அதிகரிக்கிறது. இரட்டைக் குழந்தைகளைச் சுமப்பது கூடுதலாக 10 சதவிகிதம் எனர்ஜி லெவலைக் குறைக்கிறது. கர்ப்பிணிகளின் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, வியர்வை அதிகம் வெளியேறுகிறது. 

வியர்வை கர்ப்பிணிகளின் உடல் முழுவதும் குளிர்ந்த தன்மையை உண்டு செய்கிறது. இங்கு உங்கள் ஒட்டுமொத்த உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது. இது, குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். ஒரு ஆய்வில், காலநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை கூடுவது, அமெரிக்காவில் பிறவி இதய குறைபாடு உடையோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது’’ என்றார்.

கர்ப்ப காலத்தில் வெப்ப வெளிப்பாட்டின் அபாயங்கள்

டாக்டர் அருணா குமாரியின் கருத்தின்படி, வெப்ப அலையின் போது கர்ப்பிணிகளுக்கு நான்கு முக்கிய கவலைகள் இங்கே:

  1. வெப்ப பிடிப்புகள் - வெப்பம் தொடர்பான அனைத்து நிலைமைகளிலும், பிடிப்புகள் வரக்கூடியவை. வெப்பமான காலநிலையில் நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் இந்த சங்கடமான தன்னிச்சையான பிடிப்புகள் வரக்கூடும். வழக்கமான இரவுநேர கால் பிடிப்புகளைவிட நீண்ட காலம் இது நீடிக்கும். வெப்ப பிடிப்புகள் மூலம் உண்டாகும் வலி சிசு, மற்றும் வயிற்றுப் பகுதியை பாதிக்கலாம். வியர்வை அதிகம் சென்றால், இந்த நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.
  2. நீரிழப்பு - உடல் எடுத்துக்கொள்வதை விட அதிக திரவத்தை இழக்கும்போது (வெப்பமான காலநிலையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது அல்லது மிகவும் தீவிரமாக வேலை செய்வது), நீரிழப்பினை உருவாக்கலாம். நீரிழப்பு காரணமாக குறைந்த ரத்த ஓட்டம் இருந்தால், சிசுக்களுக்கு நஞ்சுக்கொடி ஊடுருவல் தடைபடலாம். நீரிழப்பு தவறான பிரசவ வலியின் அபாயத்தையும் ஏற்படுத்தும். எனவே நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது கூடுதல் முக்கியம்.
  3. வெப்பச் சோர்வு - இது வெப்பமான காலநிலை, தீவிரமான உடல் செயல்பாடுகளின் போது ஏற்படுகிறது. வெப்பச் சோர்வு வெப்ப பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். இந்தச் சோர்வு, குமட்டல் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற கர்ப்பிணிகள் தவறாமல் கையாளும் அறிகுறிகளைப் போலவே இருப்பதால் சில நேரங்களில் அதைக் கண்டறிவது கடினமானது.
  4. வெப்ப பக்கவாதம் - வெப்பச் சோர்வு நீடித்தால், வெப்ப பக்கவாதம் ஏற்படலாம். இது வெப்பம் தொடர்பான நோயின் மிகக் கடுமையான வகை ஆகும். உடல் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு மேல் உயரும்போது வெப்ப பக்கவாதம் நிகழலாம். வெப்ப பக்கவாதம் பெண்கள் மற்றும் அவர்களின் வளரும் சிசுக்கள் இருவருக்கும் ஆபத்தானது. மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் தசை சேதத்திற்கும் இவை வழிவகுக்கும்.

கர்ப்ப காலத்தில் வெப்பச் சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதத்தின் அறிகுறிகள்

வெப்பமான காலநிலையில் வெளியில் நேரத்தை செலவிட்ட பிறகு நீங்கள் சோர்வாகவும் தாகமாகவும் உணர்ந்தால், கர்ப்ப காலத்தில் வெப்பச் சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் ஏற்படலாம். பின்வரும் அறிகுறிகள் வெப்பச்சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கிறது என்று டாக்டர் அருணா குமாரி கூறுகிறார். அவையாவன:-

  • சோர்வு
  • தலைச்சுற்றல்
  • மயக்கம்
  • நடுக்கத்துடன் கூடிய குளிர்ந்த தோல்
  • அதிக வியர்வை
  • பலவீனமான அல்லது விரைவான நாடித்துடிப்பு
  • தசைப்பிடிப்பு
  • தலைவலி
  • குமட்டலுடன் கூடிய வாந்தி
  • அதிக உடல் வெப்பநிலை (104 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு மேல்)
  • குழப்பம்
  • மந்தமான பேச்சு
  • அதிகமான இதயத்துடிப்பு
  • வேகமாக சுவாசித்தல், ஆகியவை இதன் அறிகுறிகளாகும். 

கர்ப்ப காலத்தில் வெப்பச் சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும் குறிப்புகள்:

டாக்டர் அருணா குமாரி கூறுகையில், "வெப்பமான மாதங்களில் காலநிலை மாற்றம் குறித்த தகவல்களை அறிந்துகொள்வது நல்லது. இதனால், ஏர் கண்டிஷனிங் மற்றும் உள்ளே எப்போது தூங்க வேண்டும் என்பதை முன் கூட்டியே அறிவீர்கள். உங்களையும் உங்கள் குழந்தையையும் பாதுகாப்பாக வைத்திருக்க வெப்பநிலை உயரும்போது கூடுதல் கவனம் செலுத்துங்கள். கர்ப்பம் மற்றும் வெப்பமான வானிலை ஒரு நல்ல சீதோஷண நிலை கிடையாது. எனவே வெப்ப அலையின் போது முடிந்தளவு வீட்டினுள்ளேயே இருங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். வெப்பநிலை குறையும் வரை கடுமையான உடல் உழைப்பினைத் தவிர்க்கவும்.

இந்த கோடையில் ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் இருப்பதற்கான உதவிக்குறிப்புகள்:

  • குடிக்கவும்: இந்த வெப்பமான கோடையில் நல்ல நீரேற்றத்தை பராமரிக்க நிறைய தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் குடிப்பது முக்கிய திறவுகோலாகும். சிட்ரஸ் இருக்கும் எலுமிச்சை பழங்களை ஜூஸாக்கி  குடிப்பது ஏராளமான தாதுக்கள், வைட்டமின் சி ஆகியவற்றுடன் நீரேற்றத்திற்கு உதவுகிறது.
  • மாய்ஸ்சரைஸ்: உடலைப் போலவே, உங்கள் சருமமும் நீரேற்றமாக இருக்க வேண்டும். மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம். வெயிலில் இறங்குவதற்கு முன்பு எப்போதும் சன்ஸ்கிரீன் அணியவும்.
  • ரிலாக்ஸ்: கர்ப்பத்தின் கவலையிலிருந்து உங்கள் உடலுக்கு ஒரு இடைவெளி கொடுங்கள். குளிர்ந்த மற்றும் வசதியான அறையில் நிறைய ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். 
  • குளியல்: தினமும் இரண்டு முறை குளிப்பதன் மூலம் உங்கள் உடல் வெப்பநிலையை குளிர்விக்கவும்.
  • பருத்தி ஆடைகள்: லேசான ஆடைகளை அணியுங்கள். பருத்தி துணிகள் கோடைக்கு சிறந்தவை. 
  • நண்பகலில் வெளியில் செல்லாதீர்கள். நாளின் வெப்பமான நேரத்தில் - காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வீட்டிற்குள்ளேயே இருங்கள்.
  • உங்கள் சிறுநீரை சரிபார்க்கவும்: சிறுநீர் மஞ்சளாக சென்றால், உடலில் நீர் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. எனவே, நீர் அதிகமாக அருந்துங்கள்.
  • கனமான உணவைத் தவிர்க்கவும்: லேசான உணவு மற்றும் ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது, நிலையான உடல் வெப்பநிலை அளவை வைத்திருக்கும்.
  • ஒர்க்-அவுட்: கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுவதால், வெப்ப சோர்வைத் தவிர்க்க அதிகாலையில் அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
  • குளிர்ந்த ஒத்தடம்: உங்கள் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் குளிர்ந்த ஒத்தடம் கொடுப்பதன் மூலம், உடல் வெப்பநிலை குளிர்ச்சியடைய உதவுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.