Heart Burn Remedy : நெஞ்சில் எரிச்சல், வயிற்றில் அசவுசர்யமா? எடுடா அந்த சோடாவ என்பவரா? மருத்துவர் எச்சரிப்பது என்ன?
Heart Burn Remedy : நெஞ்செரிச்சல் ஏற்படும்போது நீங்கள் எந்த பானத்தை தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்.

நெஞ்சுப் பகுதியில் தோன்றும் எரிச்சல் என்பது நெஞ்செரிச்சல் எனப்படுகிறது. ஆனால், உண்மையில் நடப்பது என்னவென்றால், வயிற்றில் சுரக்கும் அமிலம் தொண்டையை நோக்கி எதிர்க்களித்து வருவதால் ஏற்படுகிறது. அது ஆசிட் ரிஃப்ளக்ஸ் எனப்படுகிறது. சில நேரங்களில் இதனால் தொண்டையில் புளித்த ஏப்பம் ஏற்படும் வாய்ப்பு வரும். தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்ட அல்லது அடைத்துக் கொண்ட உணர்வு ஏற்படலாம். நெஞ்செரிச்சலுடன், செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அதிகம் சாப்பிடுவது போன்றவற்றுடன் தொடர்புடையது. இதனால் உங்களுக்கு எண்ணற்ற அசவுகர்யங்கள் ஏற்படும். அது இதற்கான தீர்வுகளை நோக்கி உங்களை துரத்தும். அதற்கு சிலர் சில பானங்களை பருக முயற்சிப்பார்கள். அது அவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இதுகுறித்து டாக்டர் சவுரப் சேத்தி கூறுகையில், சில பானங்களை தவிர்க்கவேண்டும் என்று இவர் பரிந்துரைக்கிறார். இவர் கேஸ்ட்ரோஎண்டராலாஜிஸ்ட் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப்பக்கத்தில்தான் இந்த பானங்கள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
எலுச்சை தண்ணீர்
நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளுக்கு மக்கள் உடனடியாக எலுமிச்சை தண்ணீரை பருகுவார்கள். இதை எளிதாக வீட்டில் தயாரித்து பருகிவிட முடியும். ஆனால் டாக்டர் சேத்தி கூறுகையில், எலுமிச்சை பானம் உங்களின் நெஞ்செரிச்சலை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கிறார். ஏனெனில், அதில் இயற்கையிலேயே அமிலத்தன்மை உள்ளது. இது உங்கள் வயிறு அசவுகர்யங்களை அதிகரிக்கச் செய்யுமேயொழிய குறைக்காது என்கிறார்.
சோடா
சிலருக்கு சாப்பிட்டவுடன் உணவுடன் சோடா சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது உணவை விரைவாக செரிக்கச் செய்யும் என்பதால் இதை சிலர் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். மேற்கத்திய நாடுகளில் இருந்து நமக்கு ஒட்டிக்கொண்ட பழக்கங்களுள் ஒன்று பீட்சாவும், சோடாவும் சேர்த்து சாப்பிடுவது. ஆனால் இது மிகவும் தவறானது. சோடவில் கார்பன்டை ஆக்ஸைட் உள்ளது என்று மருத்துவர் குறிப்பிடுகிறார். அது வயிற்றில் அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறார். இது வயிற்றில் உள்ள அசிட்டை மேலும் அழுத்தி மேலே தொண்டைக்குத்தள்ளி உங்களின் ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்னையை மேலும் மோசமாக்கும்.
ஆப்பிள் சைடர் வினிகர்
சிலர் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். ஆப்பிள் சைடர் வினிகர் அதிக நற்குணங்கள் கொண்டதாக பெரிதுபடுத்தி குறிப்பிடுகிறார். ஆனால் டாக்டர் சேர்த்து இதற்கு எதிராக நம்மை எச்சரிக்கிறார். அதில் ஆசிட் உட்பொருள் உள்ளது. அது உங்களின் நெஞ்செரிச்சலை அதிகரித்து, உங்கள் வயிற்றில் உள்ள அசவுகர்யத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
இவற்றையெல்லாம் எடுப்பதற்கு பதில் தண்ணீர், மூலிகை தேநீர் இவற்றை எடுததுக்கொள்வது உங்கள் வயிற்றில் மேலும் ஆசிட்டை அதிகரிக்கச் செய்யாமல் இருக்கும். உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கும். வீட்டில் செய்யக்கூடியது என நீங்கள் அவற்றையெல்லாம் முயற்சித்தால் பக்கவிளைவுகள் தான் ஏற்படும். எனவே, உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கும் பானங்களை தேர்ந்தெடுத்து பருகுவது உடலுக்கு நல்லது. எனவே கவனமாக இருங்கள் என்று சேத்தி எச்சரிக்கிறார்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்