Healthy Tips : கண் பார்வை குறைபாடா? கண்ணாடியை தூர வீச வேண்டுமா? இந்த 2 டிப்ஸ் போதும்! 10 நாள் செய்ய பலன்!
Healthy Tips : கண் பார்வை குறைபாடா? கண்ணாடியை தூர வீச வேண்டுமா? இந்த 2 டிப்ஸ் போதும்! 10 நாள் செய்ய பலன்!
கண் பார்வை குறைபாடு, கிட்டப்பார்வை குறைபாடு, தூரப்பார்வை, வெள்ளெழுத்து பிரச்னைகள், பார்வை மங்கல் உள்ளிட்டவை குணமாகும். 10 நாட்கள் முயற்சித்தாலே உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
கண்ணாடி போடுபவர்களுக்கும் உதவும். உங்களுக்கும் நல்ல வித்யாசம் தெரியும்.
தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு – ஒரு கப்
சோம்பு – அரை கப்
கற்கண்டு – அரை கப்
(டைமன்ட் கற்கண்டு இல்லை. கட்டி கற்கண்டு)
இந்த 3 பொருட்களுடக்குமே கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும் ஆற்றல் உண்டு.
செய்முறை
பாதாமில் உள்ள வைட்டமின் இ கண்ணுக்கு செல்லக்கூடிய நரம்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுத்து, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து பிரச்னை, கண் வீக்கம், வலி, எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும். ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும், மன அழுத்தத்தை குறைக்கும், உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும்.
இதை நன்றாக நிழலில் உலர்த்தி, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் மிக்ஸி ஓடினால், பாதாமில் இருந்து எண்ணெய் பிரிந்து விடும். எனவே ஒன்றிரண்டாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை காய்ந்த டப்பாவில் சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இதை பசும்பாலுடன் சேர்த்து சாப்பிடவேண்டும். பசும்பால் இல்லாவிட்டால் பாக்கெட் பால் கூட போதுமானது. நாம் பாலை காய்ச்சும்போது அதில் மஞ்சள் ஆடை படர்ந்தால், அது பசும் பால்.
ஒரு டம்ளர் பாலை காய்ச்சி, அதில் இரண்டு ஸ்பூன் இந்த தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு, இறக்கி, வடிகட்டாமல் அப்படியே பருகவேண்டும்.
இதை இரவு உணவு உண்டபின் பருக வேண்டும். முதலில் 10 நாட்கள் பருகவேண்டும். உங்களுக்கு நல்ல வித்யாசம் கொடுக்கும். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இதை தினமும் எடுத்துவர நல்ல பலன்கள் கிட்டும். 10 நாள் முதல் உங்களுக்கு நல்ல வித்யாசம் தெரியும்.
இனிப்பு மிதமாக இருக்கும். இனிப்பு சுவை வேண்டுமெனில், அதிக கற்கண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம்.
டிப்ஸ் – 2
பசு நெய்யை உள்ளங்கால் மற்றும் பாதம் முழுவதிலும் தடவி 10 நிமிடங்கள் நன்றாக, இரண்டு கால்களிலும் மசாஜ் செய்யவேண்டும். கையில் முழங்கையின் உள்புறமும் நெய்யில் மசாஜ் செய்யவேண்டும்.
இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும், நரம்புகளுக்கு வலு சேர்க்கும், கண் பார்வைக்கு காரணமான நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராகும்போது, கண் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணாடி போட வேண்டிய தேவை ஏற்படாது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்