தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Healthy Tips Does Liver Damage Cause Damage This One Drink Is Enough To Cleanse It In 3 Days

Healthy Tips : கல்லீரல் பழுதாகி பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அதை 3 நாளில் சுத்தம் செய்ய இந்த ஒரு பானம் போதும்!

Priyadarshini R HT Tamil
Mar 04, 2024 11:27 AM IST

Healthy Tips : கல்லீரல் பழுதாகி பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அதை 3 நாளில் சுத்தம் செய்ய இந்த ஒரு பானம் போதும்!

Healthy Tips : கல்லீரல் பழுதாகி பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அதை 3 நாளில் சுத்தம் செய்ய இந்த ஒரு பானம் போதும்!
Healthy Tips : கல்லீரல் பழுதாகி பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அதை 3 நாளில் சுத்தம் செய்ய இந்த ஒரு பானம் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

நமது உடலில் இதயம், மூளை மற்றும் நுரையீரலுக்கு அடுத்து முக்கிய பாகமாக கல்லீரல் உள்ளது. கல்லீரல் உடலில் உள்ள மிகவும் சென்சிடிவான உறுப்புகளுள் ஒன்று கல்லீரல். நமது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றக்கூடிய தன்மை கல்லீரலுக்கு மட்டும்தான் உள்ளது.

அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பு உள்ளிட்ட அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய தன்மை கல்லீரலுக்கு உண்டு. இந்த கல்லீரல் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டால் நமது உடலுக்கு எண்ணற்ற பிரச்னைகள் வரும்.

அடிக்கடி உடல் உபாதைகள் வரும். வாந்தி, மயக்கம், சிறிது நேரம் வேலை செய்தாலே சோர்வு ஏற்படும். இந்த கல்லீரலை சுத்தம் செய்யக்கூடிய டிப்ஸ்.

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை

கருப்பு உலர் திராட்சை – 4 டேபிள் ஸ்பூன்

இதில் அதிகளவில் வைட்டமின் சி சத்து உள்ளது. பொதுவாக கல்லீரலை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை வைட்டமின் சிக்கு மட்டுமே உள்ளது.

ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன், கருப்பு திராட்சையை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

இதை முதல் நாள் இரவே செய்து வைத்துவிடவேண்டும். அது நன்றாக கொதித்து ஊதா நிறத்தில் வந்தால் போதும். அப்போது அடுப்பை அணைத்துவிடவேண்டும். கருப்பு உலர் திராட்சைக்கு பதில் பச்சை உலர் திராட்சை கூட எடுத்துக்கொள்ளலாம்.

இதை அப்படியே மூடி வைக்கலாம் அல்லது வடிகட்டிவிட்டு, அதில் உலர் திராட்சைகளை புதிதாக சேர்த்தும் பயன்படுத்தலாம்.

இதை மண் பாத்திரத்தில் செய்யும்போது, இதன் பலன் பலமடங்கு அதிகரிக்கும்.

இது கிட்டத்தட்ட 12 மணி நேரம் நன்றாக ஊறவேண்டும். இதில் சிறிது மல்லித்தழைகள் சேர்க்க வேண்டும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். ஊறியுள்ள காய்ந்த திராட்சையை அப்படியே சாப்பிட்டு விடலாம்.

மல்லித்தழை கல்லீரலை சுத்தம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. கல்லீரலில் படிந்திருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றுவது இந்த மல்லித்தழைக்கு உள்ளது.

காலையில் வெறும் வயிற்றில் 3 நாட்களுக்கு பருகவேண்டும். இது உடலில் ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலில் தங்கியுள்ள ஒட்டுமொத்த நச்சுக்களையும் வெளியேற்றும். இதை பருகும் நாட்களில் நல்ல சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும்.

மலச்சிக்கலை பிரச்னையை சரிசெய்யும். இதை செய்யும் நாட்களில் புகை, மதுவை நிறுத்த வேண்டும். அப்போது நல்ல பலன் கிட்டும்.

கல்லீரல் பழுதாக அடிக்கடி புகைத்தல், மது, கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, மோசமான சுற்றுச்சூழலில் இருப்பது என இவையனைத்தும் கல்லீரலை பாதிக்கும்.

கல்லீரல் பாதிக்க துவங்கினாலே ஈரல் நோய், கொழுப்பு கல்லீரல், ஈரல் அழற்சி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதை இதுபோன்ற எளிய டிப்ஸ்கள் மூலம் குணப்படுத்த முடியும்.

இதை பின்பற்றினால், கல்லீரல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில், உரிய விளக்கங்களுடன் கொடுக்கப்படுகிறது.

இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்