சாலட் முதல் தயிர் வரை.. தவறுதலாக கூட உப்பு சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள் எது தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாலட் முதல் தயிர் வரை.. தவறுதலாக கூட உப்பு சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள் எது தெரியுமா?

சாலட் முதல் தயிர் வரை.. தவறுதலாக கூட உப்பு சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள் எது தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Published Apr 17, 2025 12:51 PM IST

உணவுக்கு உப்பு அவசியம் என்றாலும், சில உணவுகளில் உப்பு சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளில் உப்பு சேர்க்கக் கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

சாலட் முதல் தயிர் வரை.. தவறுதலாக கூட உப்பு சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள் எது தெரியுமா?
சாலட் முதல் தயிர் வரை.. தவறுதலாக கூட உப்பு சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள் எது தெரியுமா?

1.சாலட்

பலர் சாலடில் உப்பு சேர்த்து சாப்பிடுகிறார்கள். பச்சை உப்பை சாலட் மீது தூவி சாப்பிடுவது சாலட்டை ஆரோக்கியமற்றதாக்கும். பச்சை சாலட் மீது உப்பு தூவி சாப்பிடுவதால் உடலில் சோடியம் அளவு அதிகரிக்கும். மேலும், இது உடலில் நீர் தேங்குவதற்கு வழிவகுக்கும். சிறுநீரக பிரச்னைகளுக்கும் இது காரணமாகலாம். சாலட் உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை அளிக்கிறது. நார்ச்சத்தையும் அளிக்கிறது. எனவே, ஆரோக்கியமான சாலட்டில் உப்பு சேர்க்காமல் இருப்பது நல்லது.

2.ஜூஸ்

சிலர் பழச்சாறு அல்லது ஜூஸின் சுவையை அதிகரிக்க அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கிறார்கள். இது ஆரோக்கியமற்றது. ஜூஸில் உப்பு சேர்ப்பதால் ஊட்டச்சத்துக்கள் குறையும் என்று ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால், ஒரு நாளில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் சோடியம் அளவும் அதிகரிக்கும். உப்பு சேர்த்த ஜூஸ் குடிப்பதால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம். எனவே, எப்போதும் இயற்கையான முறையில் ஜூஸ் குடியுங்கள். ஜூஸில் எந்த சர்க்கரை அல்லது உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

3.பழங்கள்

பழங்கள் மீது உப்பை தூவி சுவைக்காக சாப்பிடுவது ஆரோக்கிய ரீதியாக சரியானது அல்ல. இவ்வாறு செய்வதால், பழங்களில் உள்ள வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்களின் அளவு குறையும். மேலும், உடலில் சோடியம் அளவு அதிகரித்து நீர் தேங்குதல், உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள், சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும்.

4.ரயிதா அல்லது மோர்

கோடையில் ரயிதா, மோர் அல்லது லஸ்ஸி அதிகமாகக் குடிக்கிறோம். இவற்றில் உப்பு சேர்ப்பது நல்லதல்ல. ஆயுர்வேதத்தில் இந்த இரண்டு சேர்க்கையும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. பால் பொருட்களில் உப்பு சேர்ப்பதால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வாயு, வலி, தோல் பிரச்னைகள் ஏற்படும். ரயிதாவில் உப்பு சேர்க்க வேண்டுமானால், ஒரு சிட்டிகை மட்டுமே சேர்க்கவும்.

5.தயிர்

சாதாரண தயிரை நேரடியாக சாப்பிடுவது நல்லது. அதில் உப்பு சேர்த்து சாப்பிடக் கூடாது. தயிரில் இயற்கையாகவே உப்பு இருக்கிறது. எனவே, தயிரில் உப்பு சேர்ப்பது அதில் உள்ள நல்ல பாக்டீரியாவை அழிக்கும். ஆயுர்வேதத்தின் படி, பால் மற்றும் பால் பொருட்களில் உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. தயிரில் உப்பு சேர்த்து சாப்பிட்டால் முடி உதிர்தல், தோல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 5 வகையான உணவுகளில் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடுவது உங்கள் உடலுக்கு விஷம் போல செயல்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, மிகக் குறைந்த அளவு உப்பை உட்கொள்வது நல்லது.

(குறிப்பு: இந்த தகவல்கள் முழுமையாக நம்பகமானவை அல்ல. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. எந்த தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நிபுணர்களை அணுகவும்.)