ஹெல்தியான ராகி ஊத்தாப்பம்.. அசத்தல் ருசியில் ஈசியா செய்யலாம்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எலும்புகளை வலுவாக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஹெல்தியான ராகி ஊத்தாப்பம்.. அசத்தல் ருசியில் ஈசியா செய்யலாம்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எலும்புகளை வலுவாக்கும்!

ஹெல்தியான ராகி ஊத்தாப்பம்.. அசத்தல் ருசியில் ஈசியா செய்யலாம்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எலும்புகளை வலுவாக்கும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Oct 11, 2024 06:15 AM IST

ராகி மாவை கொண்டு இட்லியும் செய்யலாம். அல்லது ராகி மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மொறு மொறுவென்று முறுகலாக தோசைகளை வார்க்கலாம். இந்த இட்லி தோசைக்கு தேங்காய், தக்காளி சட்னி, அவியல், சாம்பார், காரட், பீன்ஸ் கிரேவி என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம்.

ஹெல்தியான ராகி ஊத்தாப்பம்.. அசத்தல் ருசியில் ஈசியா செய்யலாம்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எலும்புகளை வலுவாக்கும்!
ஹெல்தியான ராகி ஊத்தாப்பம்.. அசத்தல் ருசியில் ஈசியா செய்யலாம்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எலும்புகளை வலுவாக்கும்!

ராகி ஊத்தாப்பம் செய்ய தேவையான பொருட்கள்.

ராகி – ஒரு கப்

அரிசி - அரை கப்

உளுந்து – முக்கால் கப்

அவல் – ஒரு கப்

வெந்தயம் - 1 ஸ்பூன்

தோசை அல்லது ஊத்தப்பம் செய்ய தேவையானவை

வெங்காயம்

கேரட்

மல்லி இலை

எண்ணெய்

ராகி ஊத்தாப்பம் செய்முறை

ராகி, அவல், அரிசி, உளுந்து என நான்கையும் கழுவி இரவு முழுவதும் நன்றாக ஊற விட வேண்டும். குறைந்தது 6 மணி நேரம் வரை ஊற வைத்த பின்னர் நன்றாக அலசிவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். ஆனால் கிரைண்டரில் சேர்த்து அரைத்தால் மாவில் சூடு ஏறாது. சுவையும் மணமும் கூடும்.

பின்னர் 8 மணி நேரம் ராகி மாவை புளிக்க வைக்க வேண்டும். இதையடுத்து உப்பு சேர்த்து ஊத்தாப்பம் செய்யலாம்.

தோசை கல்லை வழக்கம் போல் சூடாக்க வேண்டும்.

கல்லில் லேசாக எண்ணெய் தேய்த்து ஒரு கரண்டி அளவு மாவை ஊற்ற வேண்டும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி இழை மற்றும் கேரட் துருவலை மேலாக தூவ வேண்டும். கல்லை மூடி வைத்து ஊத்தாப்பத்தை வேக விட வேண்டும். தோசைக்கு உங்கள் விருப்பம் போல் எண்ணெய் விடலாம். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். சிறிது நேரம் கழித்து தோசையை திருப்பி போட்டு மீண்டும் மூடி வைத்து வேக விட வேண்டும். தோசை நன்றாக வெந்த பிறகு எடுத்து சூடாக பரிமாறலாம். குழந்தைகளுக்கு ராகி ஊத்தாப்பம் கொடுத்தால் எண்ணெய்க்கு பதிலாக நெய் விட்டு சுடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

குறிப்பு

ராகி மாவை கொண்டு இட்லியும் செய்யலாம். அல்லது ராகி மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மொறு மொறுவென்று முறுகலாக தோசைகளை வார்க்கலாம். இந்த இட்லி தோசைக்கு தேங்காய், தக்காளி சட்னி, அவியல், சாம்பார், காரட், பீன்ஸ் கிரேவி என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம். அசைவ குழம்புகளும், இதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.