Healthy Food to Take Daily : உடலுக்கு ஊட்டமளிக்கும்! தினமும் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் இதோ!
Healthy Food To Take Daily : தினமும் உங்கள் தட்டில் இருக்க வேண்டிய உணவுகள் என்ன என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் ஆரோக்கியம் பெறவும், நோயின்றி நாம் வாழவும் நமக்கு உணவு உதவுகிறது. சத்தான உணவுடன் உடற்பயிற்சியும் செய்தால் நாம் நோயற்ற வாழ்வு வாழ முடியும். சில உணவுகள் நாம் அன்றாட எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு அவசியம் ஆகிறது. அவை என்ன உணவு என்று இங்கு தெரிந்துகொள்ளலாம். இவற்றை கட்டாயம் மறக்காமல் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கீரைகள்
கீரைகள், காலே ஆகிய பச்சை கீரைகளில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவற்றில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
பெரிகள்
ஸ்ட்ராபெரி, ப்ளூ பெரி மற்றும் ராஸ்பெரி என பெரி பழங்களில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.
