ஆரோக்கிய உணவுகள்: டிபன், அரிசி சோறுக்கு சரியான காம்பினேஷன்.. சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சூப்பர் ஃபுட்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆரோக்கிய உணவுகள்: டிபன், அரிசி சோறுக்கு சரியான காம்பினேஷன்.. சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சூப்பர் ஃபுட்

ஆரோக்கிய உணவுகள்: டிபன், அரிசி சோறுக்கு சரியான காம்பினேஷன்.. சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சூப்பர் ஃபுட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Apr 14, 2025 02:24 PM IST

கொத்தமல்லி மற்றும் முருங்கை இலை ஆகிய இரண்டும் ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்த இரண்டையும் சேர்த்து செய்யப்படும் சட்னி சிறப்பானதொரு சூப்பர்ஃபுட் ஆக அமைகிறது. இட்லி, தோசை, சோாறு என அனைத்து வகை உணவுடனும் சாப்பிடக்கூடிய இந்த சட்னி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

டிபன், அரிசி சோறுக்கு சரியான காம்பினேஷன்.. சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சூப்பர் ஃபுட்
டிபன், அரிசி சோறுக்கு சரியான காம்பினேஷன்.. சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சூப்பர் ஃபுட்

முருங்கை இலை நன்மைகள்

முருங்கை இலையில் வைட்டமின் ஏ, இருப்புச்சத்து, கால்சியம், புரதம், போலிக் அமிலம் போன்றவை நிரம்பியுள்ளன. இந்த இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சீரான செரிமானத்துக்கு உதவுகிறது. இதயம், எலும்பு, தோல், கண் ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து ரத்த சோகை ஏற்படுவதை குறிக்கிறது.

கொத்தமல்லி நன்மைகள்

அதேபோல் கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ, கே, சி, நார்ச்சத்து, மாங்கனீஸ், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், செலினியம், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த இலைகள் உடல் எடையை குறைக்க உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதய ஆரோக்கியம், தோல் ஆரோக்கியம், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

இவ்வாறு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகளை தரும் முருங்கை இலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை வைத்து தயார் செய்யப்படும் இந்த சட்னி சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் இவற்றை வைத்து சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சட்னி எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்.

முருங்கை கொத்தமல்லி சட்னி செய்வதற்கு தேவையான பொருள்கள்

  • முருங்கை இலை - ஒரு கப்
  • கொத்தமல்லி - ஒரு கப்
  • வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப்
  • புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  • சிவப்பு மிளகாய் - நான்கு
  • பச்சை மிளகாய் - நான்கு
  • பூண்டு - பத்து பற்கள்
  • சீரக விதைகள் - ஒரு டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
  • கடலை பருப்பு - கால் கப்
  • கடுகு - அரை டீஸ்பூன்
  • சீரக விதைகள் - அரை ஸ்பூன்
  • உளுந்து - அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

மேலும் படிக்க: பல நோய்களை விரட்ட அடிக்கும் மருத்துவ குணம் கொண்ட கொத்தமல்லி

செய்முறை

  • முருங்கை இலைகள் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக நறுக்கி, கழுவி தனியாக வைக்கவும்.
  • இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் முருங்கை இலையை வறுக்கவும். முருங்கை இலையில் இருந்து பச்சை வாசனை போகும் வரை இதை செய்யுவும். அதன் பின் வறுத்த முருங்கை இலையை எடுத்து தனியாக வைக்கவும்.
  • பின் அதே கடாயில் கடலை பருப்பை வறுத்து, அவற்றை எடுத்து தனியாக வைக்கவும்.
  • மற்றொரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். அதில் அரை ஸ்பூன் சீரகத்தை வதக்கவும். பின்னர் கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

மேலும் படிக்க: இட்லி, தேசைக்கும் மட்டுமல்ல.. சாப்பாட்டுக்கும் சிறந்த சைடு டிஷ் ஆக இருக்கும் சட்னி

  • இரண்டு நிமிடங்கள் வதக்கிய பிறகு, முன்பு வறுத்த முருங்கை இலைகள் மற்றும் பருப்புகளை சேர்த்து ஒரு முறை வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  • இப்போது இந்தக் கலவையை ஆறவிட்டு மிக்ஸி ஜாடியில் நன்றாக அரைக்கவும்.
  • அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இப்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும்.
  • கடுகு, சீரகம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, இரண்டு பூண்டு பல் சிறிதாக நறுக்கி, இரண்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் அரைத்து வைத்த முருங்கை மற்றும் கொத்தமல்லி கலவையை ஊற்றவும்.
  • நன்றாக கலக்க வேண்டும். அவ்வளவுதான், சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த முருங்கை கொத்தமல்லி சட்னி தயார்.

இந்த சட்னியை சூடான சாதத்துடனும், டிபன் உணவுகளான இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும். மேலும், இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் காலை உணவாக சாப்பிடலாம். இதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பெறலாம்

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், இளங்கலை காட்சிவழி தொடர்பியல், முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்றவர். 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் என 16 ஆண்டுகளுக்கு மேல் அனுபவத்துடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் அனைத்து பிரிவுகளிலும் கட்டுரை எழுதுபவர். விளையாட்டு, கிரிக்கெட், சினிமா, லைப்ஸ்டைல் பிரிவுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்து வருகிறார். விளையாட்டு, சினிமா, பயணம், சமைத்தல் பிடித்தமான பொழுபோக்கு
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.